"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |

| വരി 110: | വരി 110: | ||

எங்களது குழந்தைகளை முழுமையாக புரிந்து கொண்டு, அவர்களது தனித் திறமைகளைக் கண்டறிந்து, அதனை வெளிக் கொணர்ந்து, அவர்களை வெற்றிப் பாதையில் வழிநடத்துவதே அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் முக்கிய பணியாகும். வெறும் பள்ளியோடும், வகுப்பறையோடும் நின்றுவிடாமல் ஒவ்வொரு குழந்தையிலும் ஆழ்ந்து செல்ல வேண்டும் என்னும் நோக்கத்தோடு பிப்ரவரி மாதத்தில் குழந்தைகளின் வீடுகளுக்குச் செல்லப்பட்டது. அனைத்து ஆசிரியர்களும் பல குழுக்களாகப் பிரிந்து, இடங்களை தேர்வு செய்து இந்த நற்செயல் நடத்தப்பட்டது. ஒவ்வொரு குழந்தையும் வாழ்கின்ற சூழ்நிலை, குடும்பச் சூழல், சமூக நிலை போன்றவற்றை மிக நுணுக்கமாக ஆராய்ந்து அவர்களை முன்னேற்றத்திற்கான வழியில் கொண்டு செல்வதற்கான செயல்பாடுகளை நாங்கள் திட்டமிட்டு நடத்தி வருகின்றோம். பள்ளியிலும், வகுப்பறையிலும் நாம் பார்க்கின்ற குழந்தைகள் அல்ல ஒவ்வொரு வீடுகளிலும் நாம் காண்பது. ஒவ்வொரு குழந்தையையும் நாம் முழுமையாகத் தெரிந்துகொள்ள அவர்களது வீட்டு சூழ்நிலை தெரிந்து கொள்வது மிக அவசியமாகும். பள்ளியில் உள்ள அனைத்து குழந்தைகளின் வீடுகளுக்கும் சென்று நாங்கள் விசாரிப்பதுண்டு. ஒவ்வொரு வருடமும் இந்த செயல்பாடு நல்ல முறையில் ஆசிரியர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே ஒரு சிறந்த பாசப்பிணைப்பு உண்டாகிறது. இது ஒவ்வொரு குழந்தையும் புரிந்து கற்பிக்க ஆசிரியர்களுக்கு பெரிதும் துணை புரிகிறது.

எங்களது குழந்தைகளை முழுமையாக புரிந்து கொண்டு, அவர்களது தனித் திறமைகளைக் கண்டறிந்து, அதனை வெளிக் கொணர்ந்து, அவர்களை வெற்றிப் பாதையில் வழிநடத்துவதே அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் முக்கிய பணியாகும். வெறும் பள்ளியோடும், வகுப்பறையோடும் நின்றுவிடாமல் ஒவ்வொரு குழந்தையிலும் ஆழ்ந்து செல்ல வேண்டும் என்னும் நோக்கத்தோடு பிப்ரவரி மாதத்தில் குழந்தைகளின் வீடுகளுக்குச் செல்லப்பட்டது. அனைத்து ஆசிரியர்களும் பல குழுக்களாகப் பிரிந்து, இடங்களை தேர்வு செய்து இந்த நற்செயல் நடத்தப்பட்டது. ஒவ்வொரு குழந்தையும் வாழ்கின்ற சூழ்நிலை, குடும்பச் சூழல், சமூக நிலை போன்றவற்றை மிக நுணுக்கமாக ஆராய்ந்து அவர்களை முன்னேற்றத்திற்கான வழியில் கொண்டு செல்வதற்கான செயல்பாடுகளை நாங்கள் திட்டமிட்டு நடத்தி வருகின்றோம். பள்ளியிலும், வகுப்பறையிலும் நாம் பார்க்கின்ற குழந்தைகள் அல்ல ஒவ்வொரு வீடுகளிலும் நாம் காண்பது. ஒவ்வொரு குழந்தையையும் நாம் முழுமையாகத் தெரிந்துகொள்ள அவர்களது வீட்டு சூழ்நிலை தெரிந்து கொள்வது மிக அவசியமாகும். பள்ளியில் உள்ள அனைத்து குழந்தைகளின் வீடுகளுக்கும் சென்று நாங்கள் விசாரிப்பதுண்டு. ஒவ்வொரு வருடமும் இந்த செயல்பாடு நல்ல முறையில் ஆசிரியர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே ஒரு சிறந்த பாசப்பிணைப்பு உண்டாகிறது. இது ஒவ்வொரு குழந்தையும் புரிந்து கற்பிக்க ஆசிரியர்களுக்கு பெரிதும் துணை புரிகிறது.

'''எனது செய்தித்தாள்'''

[[ചിത്രം:21302-entepathram.jpg|center|350px]] | |||

நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கு தேசாபிமானி செய்தித்தாள் வர வைப்பதற்கான எனது செய்தித்தாள் என்னும் திட்டம் ஆகஸ்ட் 20 ஆம் நாள் சி.பி.எம் வட்டாரச் செயலாளர் திரு. சிவப்பிரகாஷ் அவர்கள் பள்ளி மாணவர் தலைவனுக்கு செய்தித்தாள் வழங்கித் துவங்கி வைத்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும், கெ.எஸ்.டி.எவும் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

'''மதுரம் மலையாளம்'''

[[ചിത്രം:21302-mathuram.jpg|center|350px]] | |||

நமது பள்ளியில் ஜயின்ட்ஸ் சங்கத்தினரின் தலைமையில் மதுரம் மலையாளம் திட்டம் துவங்கப்பட்டது. பள்ளிக்கு தினந்தோறும் 5 மாத்ருபூமி செய்தித்தாள்கள் வழங்குதல் என்பதுவே இத்திட்டத்தின் நோக்கமாகும். ஆகஸ்ட் 21 ஆம் நாள் மதிப்பிற்குரிய சித்தூர் தத்தமங்கலம் நகரசபை தலைவர் திரு. மது அவர்கள் இத்திட்டத்தினைத் துவங்கி வைத்தார்.சித்தூர் ஜயின்ட்ஸ் சங்க அங்கத்தினர்களும் இந்த நல்ல தருணத்தில் பங்கெடுத்தனர். பள்ளியில் உள்ள மொத்த குழந்தைகளின் சார்பாக நான்காம் வகுப்பில் உள்ள ஐந்து மாணவர்கள் செய்தித்தாள்களை பெற்றுக்கொண்டு மதுரம் மலையாளம் திட்டத்தை மனமார வாழ்த்தி வரவேற்றனர்.

''' சந்திரயான்-2 நேரடி ஒளிபரப்பு'''

''' சந்திரயான்-2 நேரடி ஒளிபரப்பு'''

14:40, 30 ഓഗസ്റ്റ് 2019-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം

அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது.
எனது நாடு... எனது சித்தூர்...
மிகவும் புகழ்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும் சித்தூர். அதுமட்டுமல்ல செல்வ சிறப்பிலும் எப்பொழுதும் முன்னிலையில்தான். இங்குள்ள செல்வச்சிறப்பினைக் கண்டு ஆசைப்பட்டு சித்தூர் தேசத்தை பிடித்தடக்க முயன்ற கொங்கு நாட்டு மன்னனை சித்தூர் காவில் உள்ள பகவதியின் துணையோடு தோற்கடித்து நாட்டை காப்பாற்றிய வீர கதையை நாம் அனைவரும் கேட்டிருப்போம். இதை நினைவுபடுத்தும் விதமாக வருடந்தோறும் சித்தூர் மக்கள் கொங்கன் படை கொண்டாடி வருகின்றனர். இது சித்தூரின் தேசிய திருவிழாவாகும். அம்பாட்டு தரவாடு, தச்சாட்டு தரவாடு, சம்பத்து தரவாடு, எழுபத்து தரவாடு, பொறயத்து தரவாடு போன்றவை சிற்றூரில் உள்ள வரலாற்றுப் புகழ் மிக்க தரவாடுகளாகும். இந்த தரவாடுகளில் உள்ள பெரியவர்களும் ஊர்மக்களும் சேர்ந்துதான் கொங்கன் படையை இன்றளவும் நடத்திவருகின்றனர். கேரளாவின் ஒரே ஒரு ரணோல்சவமாகும் சித்தூர் கொங்கன் படை.
சித்தூரின் பசுமை வளத்தைக் கட்டிக்காப்பதில் சோகநாஷினி நதிக்கு மிக முக்கிய பங்கு உண்டு. இந்நதிக்கரையில் தான் மலையாள மொழியின் தந்தையான திரு.இராமானுஜன் எழுத்தச்சனின் நினைவிடமான துஞ்சன் மடம் அமைந்துள்ளது. இது மிக முக்கியத்துவம் நிறைந்த ஒரு வரலாற்றுச் சின்னம் ஆகும். துஞ்சன் மடத்தைப் பற்றி கூடுதல் தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோர் இவ்விடத்திற்கு வருவதுண்டு. வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த மற்றொரு இடமாகும் துஞ்சன் நினைவு நூலகம். இந்த நூலகத்தின் சுவர்களில் கொங்கன் படையோடு தொடர்புடைய படங்கள் வரைந்து அழகுபடுத்தப்பட்டுள்ளது. திரு பைஜூ தேவ் அவர்களுடைய தலைமையில் தான் இந்த படங்கள் வரையப்பட்டுள்ளது. இது ஓய்வு நேரங்களை பயனுள்ள தாக்குவதோடு வரலாற்றுச் சிந்தனையைத் தூண்டவும் வழிகோலுகின்றது. சித்தூர் மக்களின் அரசுத் தேவைகளை நிறைவு செய்ய கச்சேரி மேட்டில் மினி சிவில் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது. இது சித்தூரின் பெருமையை இன்னும் கூட்டுகிறது. சித்தூர் அரசுக் கல்லூரியைப் பற்றி அறியாதவர் யாருமே இருக்க மாட்டார்கள். விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ள சித்தூரின் இளைய தலைமுறையினரை கல்வியின் உச்சிக்கு கைப்பிடித்து உயர்த்துவதில் சித்தூர் அரசு கல்லூரிக்கு முக்கிய பங்கு உண்டு.இச்சிறப்புகள் அனைத்தும் நிறைந்த சித்தூரின் இதயப் பகுதியில் தான் நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது.
சித்தூர் தத்தமங்கலம் நகரசபையின் முக்கிய இடத்தில் அதாவது அணிக்கோடுக்கு அருகில் அரசு விக்டோரியா பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இரண்டு வார்டுகள் (வால்முட்டி, கிழக்கேத்தரை) எல்லைகளாக உள்ள இந்தப் பள்ளிக்கூடம் 1930 ல் நிறுவப்பட்டது.

எனது செய்தித்தாள்

மதுரம் மலையாளம்

சந்திரயான்-2 நேரடி ஒளிபரப்பு
மகிழ்ச்சி திருவிழாவாக பள்ளி நுழைவு விழா 2019- 20
காலை 9.30 மணி அளவில் வார்டு கவுன்சிலர் திரு. சிவக்குமார் அவர்கள் நுழைவு விழாவினை துவக்கி வைத்தார். முன் துவக்கப்பள்ளி மற்றும் ஒன்றாம் வகுப்பிற்கு புதியதாக வந்து சேர்ந்த குழந்தைகளை எழுத்து கிரீடம் அணிவித்து வரவேற்றோம். இக்கிரீடம் அணிந்த குழந்தைகளை பார்க்கும் பொழுது எதிர்காலத்தின் சிற்பிகள் என்ற நினைவு நம்முள் மலரச் செய்தது. வார்டு கவுன்சிலர் திரு. சிவக்குமார் அவர்கள் குத்துவிளக்கேற்றி அறிவுச்சுடரை தரும் நுழைவு விழாவை சிறப்பித்தார். மேலும் வார்டு கவுன்சிலர் திரு. சுவாமிநாதன் அவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. கே. பி ரஞ்சித் அவர்கள், தலைமை ஆசிரியை திருமதி ஷைலஜா என்.கே அவர்கள் போன்ற அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.திரு.சிவக்குமார் அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துரை வழங்கினார். முதலமைச்சர் பள்ளி குழந்தைகளுக்காக எழுதிய கடிதத்தை தலைமை ஆசிரியர் வாசித்தார். பிஞ்சுக் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் நோட்டுப்புத்தகம், பென்சில், கலர் பென்சில் போன்றன வழங்கப்பட்டது. ஜுன் 5, சுற்றுப்புற தினம் ஆனதால் அதைக் கொண்டாடும் விதமாக குழந்தைகளுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.
வரவேற்க மிக்கி மௌசும், பியரும்
இவ்வருட நுழைவு விழாவின் தனிச்சிறப்பு என்னவென்றால், முன் வாசலில் குழந்தைகளை வரவேற்கும் மிக்கி மெளசும், பியரும். குழந்தைகளுக்கு மிகவும் பிரியமான நண்பர்கள் அல்லவா இவர்கள். நுழைவு விழாவை சிறப்பிக்கவும், பள்ளி முற்றத்திற்கு குழந்தைகளை புன்னகையோடு அழைத்து வருவதற்கு மான ஒரு தந்திரமே மிக்கி மெளசும் பியரும். இது குழந்தைகளுக்கு திருமதி. சுப்ரபா ஆசிரியை அவர்களுடைய பரிசாகும். குழந்தைகள் அனைவரும் மிக்கி மெளஸ் மற்றும் பியரோடு சேர்ந்து நிறைவு விழாவை ஆரவாரத்தோடு கொண்டாடினர். மிக நல்ல ஒரு துவக்கமாக இருந்தது இவ்வருடத்தின் நுழைவு விழா.காணொளி காண்போம் -*பள்ளி நுழைவு விழா 2019- 20
பள்ளியின் மாதிரி பெற்றோர்கள்
எதிர்காலத்தின் மாதிரி மாணவர்கள்

நண்பர் கூட்டம்
காணொளி காண்போம் -*நண்பர் கூட்டம்
ஷலபோல்ஸவம் - 2019
2018ல் LSS தேர்வில் வெற்றி பெற்ற ஐந்து மாணவர்களான ப்ரயாக் கிருஷ்ணா, ஆஷ்ணா. எஸ், ஆரதி.ஜெ, நந்திதா கிருஷ்ணா, மேகா போன்றவர்களுக்கு விருதுகளையும்ம் புத்தகங்களையும் வார்டு கவுன்சிலர் திரு. சிவகுமார் அவர்கள் வழங்கி, பாராட்டுக்களைத் தெரிவித்தார். மேலும் நமது குட்டி செஸ் சாம்பியனான வைகப்பிரபாவுக்கு விருதும், புத்தகங்களும் வழங்கி பாராட்டினார். ஷலபோல்ஸவம்-2018 ன் நிறைவு வேளையில் திருமதி. சுப்ரபா ஆசிரியை நன்றியுரை வழங்கினார். இவ்வருட ஆண்டு விழாவின் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் அனைவரையும் கவரும் வகையிலும், ஒன்றோடொன்று ஒப்புமைப்படுத்த முடியாத அளவுக்கு சிறப்பாகவும் இருந்தது. பார்வையாளர்களுக்குப் புதிய அனுபவமாகவும், கண்ணுக்கு விருந்தாகவும் இருந்தது. ஒவ்வொரு வகுப்பினுடைய நிகழ்ச்சிகள் அனைத்தும் கண்களைக் குளிரச் செய்வதாகவே இருந்தது. ஒவ்வொரு நடனத்திற்கும் ஏற்ற ஆடை, அலங்காரங்கள் கண்களை வியக்க வைத்தது. ரங்கபூஜை, ஜப்பானீஸ் நடனம், ராஜஸ்தானிய நடனம், பஞ்சாபி நடனம், காளை விளையாட்டு, நாட்டுப்புற நடனம், மோகினி ஆட்டம், சினிமா பாடல்களுக்கான நடனம், கவிதை சொல்லுதல், பேச்சுப் போட்டி போன்ற கலை நிகழ்ச்சிகளை குழந்தைகள் நிகழ்த்தினர். நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒன்றிற்க்கொன்று மேன்மையான தாகவே இருந்தது.
இத்தனை சிறப்புமிக்க நடனங்களையும், சிகை அலங்காரங்களையும் செய்தது திரு.ஜின்ஸ்வி கோபால் அவர்களும், உதவியாளரான திரு. விஷ்ணு அவர்களும் ஆவர்.
ஸ்லைடு ஷோ - *ஷலபோல்ஸவம் - 2019
கற்றல் திருவிழா - பிரதிபா சங்கமம் 2019...!
ஒரு கண்ணோட்டம் - * பிரதிபா சங்கமம் 2019
கற்றல் திருவிழா - 2
- காணத்தவறாதீர்கள் குழந்தைகளின் செண்டை மேளம்
அறிவியல் விந்தை
செயல் திட்டங்கள்
இதர செயல்பாட்டுக் குழுக்கள்
சங்கங்கள்
முந்தைய தலைமை ஆசிரியர்கள்
- திரு.வி.ராஜன்
- திரு.டி.சி. தாமஸ்
- திருமதி.ஷம்சத் பேகம்
- திருமதி.க.ப.விஜயகுமாரி
- திருமதி.ஜி.அம்பிகா
- திருமதி.நளினி சி.ஐ
பிரபலமான முன்னாள் மாணவர்கள்
- திருமதி.மானசி பாய் (முன் Additional DPI)
- டாக்டர் லதா வர்மா
- திரு.கே.சிவன் (ஓய்வுபெற்ற ஆர்.டி.டி)
காணொளி பள்ளியில் நடத்தப்பட்ட செயல்பாடுகளும்,தினக்கொண்டாட்டங்களும்
படைப்புகள்- குழந்தைகளுடையவும்,ஆசிரியர்களுடையவும்
வழிகாட்டி
| பள்ளியை வந்தடைவதற்கான வழிகள்

{{#multimaps: 10.699971,76.740645 | width=800px | zoom=16 }}