ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/எனது வாணி

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്


எனது வாணி

முகவுரை

ஜி.வி.எல்.பி பள்ளிக்கூடத்திற்கே உரிய ஒரு தனிச் செயல்பாடாகும் எனது வாணி. பண்டைய காலத்தில் நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்த வானொலியை குழந்தைகளுக்கு முன் கொண்டுவருவதற்காக தொடங்கிய ஒரு செயல் திட்டம் ஆகும். ஒவ்வொரு வகுப்பிலும் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு வகுப்பில் இருந்து குழந்தைகள் நிகழ்த்துகின்ற நிகழ்ச்சிகள் எல்லா வகுப்பிலும் உள்ள குழந்தைகளுக்கு இதன் மூலம் கேட்க முடியும். .

இலட்சியங்கள்

  • குழந்தைகளின் பல்வேறு திறன்களை வெளிக்காட்ட இது உதவுகிறது.
  • மேடை பயமோ, கூச்சமோ இல்லாமல் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க உதவுகிறது.
  • குழந்தைகளுடைய படைப்பாற்றல் திறன்கள், விரிவடைகிறது.
  • ஓய்வு நேரங்கள் பயன் உடையதாக மாறுகிறது.

செயல்பாடு

ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள குழந்தைகளுக்கு எனது வாணியில் பங்கெடுக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஒரு இடத்திலிருந்து நடத்துகின்ற நிகழ்ச்சிகளை எல்லா வகுப்புகளிலும் இருந்து கேட்பதற்கான ஒலிப்பெருக்கி வசதிகள் உண்டு. குழந்தைகள் கதைகள், கவிதைகள், பேச்சுப்போட்டி, பாடல்கள், மிமிக்ரி போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளை எது வாணியின் மூலம் நிகழ்த்துகின்றனர். குழந்தைகள் நிகழ்ச்சிகள் நடத்தும் நேரம் மதியம் 1: 15 முதல் 1 : 45 வரை ஆகும். எனது வாணியின் மிக முக்கிய சிறப்பு தன்மை என்னவென்றால் அனைத்து வகுப்புகளிலும் உள்ள அனைத்து குழந்தைகளையும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைப்பது உண்டு என்பதாகும். ஒவ்வொரு நாளும் குழந்தைகள் போட்டி மனப்பான்மையோடு எனது வாணியில் பங்கேற்க தயாராகின்றனர். மதிய வேளையில் குழந்தைகள் அவரவரது வகுப்பில் இருந்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளைக் கேட்டு மகிழ்கின்றனர். ஒவ்வொரு தின கொண்டாட்டங்களிலும் அதனோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். எனது வாசிப்பு குறிப்பு என்னும் பெயரில் குழந்தைகள் படித்து, ரசித்த புத்தகங்களைப் பற்றி எழுதி வந்ததையும் வாசிக்கின்றனர்.

சிறப்பம்சம்

அனைத்து வகுப்புகளிலும் உள்ள அனைத்து குழந்தைகளையும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைப்பதுண்டு என்பதுதான் எனது வாணியின் மிக முக்கிய சிறப்பம்சம். இதன்மூலம் குழந்தைகளில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான தன்னம்பிக்கை, படைப்பாற்றல் திறனை மெருகூட்டுதல், கூடுதல் நிகழ்ச்சிகளை கண்டு பிடிப்பதற்கான கண்டறியும் மனப்பன்மை போன்றவை வளர்கிறது.