ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/மேலும் வாசிப்போம்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്

தலைமையாசிரியை

ஜயலக்ஷ்மி. த

வரலாற்றுச் சிறப்புமிக்க ரணோத்சவம் கொண்டாடும் கொங்கன் படையின் ஊராகிய சித்தூரின் கல்வி வரலாற்று ஏடுகளில் பொன்னால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு பொதுக்கல்வி நிறுவனம் தான் ஜி.வி.எல்.பி.எஸ். சித்தூர். எண்ணற்ற ஆளுமைகளைசமூகத்திற்கு வார்த்துக் கொடுத்த தாய் வீடாகிய இக்கலையரங்கம் இன்றும் சிறப்பாக தலையுயர்த்தி நிற்கின்றது. பொதுக் கல்வி நிலையங்களுக்கே உரித்தான வலிமையையும், ஆற்றலையும், ஒற்றுமையையும், நல்லெண்ணத்தையும் இப்பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்களிடையே காணலாம். கோவிட் நோய் தொற்றின் போது ஒவ்வொருவீட்டை கல்விக் கூடமாக்கி கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் வருடம் குழந்தைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சி தடையின்றி நடக்க இப்பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்ட கருத்து நிறைந்த சிறப்பான செயல்பாடுகள் விக்கி ஏடுகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம். அதனாலேயே ஊரடங்கு (லாக்டவுன்) காலத்திலும் பிள்ளைகளின் கற்றல் தங்கு தடையின்றி நடந்தேறியது. ஆசிரியர்களின் ஊக்குவிப்பால்மனம் தளராமல்பள்ளிக்கு வந்த உற்சாகமான மாணவர்களை காணக் காண மன மகிழ்வு ஏற்பட்டது. பள்ளிக்கூடத்தின் உயர்வுக்காக செயல்படுகின்ற சிறப்பான PTA வும் மற்றும் SMC பக்க பலமாக உள்ளது. படிக்கற்களை கடந்து மீண்டும் உயர உயர செல்கிறோம்... ஆம் எங்கள் பயணங்கள் முடிவதில்லை...

முன்தலைமையாசிரியை

ஷைலஜா. ந.கு

எங்களுடைய இந்த சிறிய ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் பணிபுரியக்கூடிய ஒவ்வொருவரும் இப்பள்ளிக்கூடத்தை உயிரினும் மேலாக நேசிக்கின்றனர். இதன் வளர்ச்சிக்காக இரவு, பகல் பாராமல் உழைக்கின்றனர் என்றால் அது மிகையல்ல. இதன் சிறப்புக்கு முன்னாள் மாணவர்களுடையவும், ஆசிரியர்களுடையவும் ஆசிர்வாதம் உறுதுணையாகிறது. இங்கு பணிபுரிகின்ற ஒவ்வொருவருக்கும் இந்த எண்ணம் அனுபவித்து அறிய முடிகின்றது. ஒவ்வொரு வருடமும் கலை, விளையாட்டு, கைவண்ணம், அறிவியல், கணித துறைகளில் நாம் பெறுகின்ற ஒவ்வொரு வெற்றியும் நமது ஜி.வி.எல்.பி மண்ணின் பெருமையை எடுத்துரைக்கின்றது. இன்றும் அது தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இடர்கள் எத்தனை வரினும் சித்தூர் தாலுக்காவிலுள்ள மிகச்சிறந்த ஒரு ஆரம்பப் பள்ளிக் கூடமாக திகழ்கின்றது எங்களுடைய அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம். சித்தூரிலுள்ள முக்கியமான பொதுக் கல்விக்கூடங்களில் முன்மாதிரியாக செயல்பட்டு வருகின்ற நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் பல்வேறு தரப்பட்ட 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். பொதுக்கல்விப் பாதுகாப்பினை நோக்கமிட்டு நடத்துகின்ற செயல்பாடுகளில் பெற்றோர்களது ஒத்துழைப்போடு நமது பள்ளி வெற்றி அடைந்துள்ளது. பள்ளியில் கற்றல் தரமும், கலை, விளையாட்டு துறைகளின் தரமும் மேன்மேலும் உயர்த்துவதற்கு பௌதீக சௌகரியங்களை அதிகப்படுத்துவதுடன் நுணுக்கமான கற்றல் தந்திரங்களையும் கடைப்பிடிக்க வேண்டும். அதற்காக ஆசிரியர்களுடையவும், பெற்றோர்களுடையவும், பொது சமூகத்தினுடையவும் ஒத்துழைப்பு மிக அவசியமாகும்.

பௌதீகமாக பல குறைபாடுகள் சுட்டிக்காட்ட முடியும் என்றாலும் அரசுப் பள்ளிக்கூடங்களின் மேன்மைகளை நாம் புரிந்து கொண்டே ஆக வேண்டும்.

  • அறிவியல் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்
  • கல்வித் திட்டத்திற்கு ஏற்றவாறு ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சிகள்
  • ஹலோ இங்கிலீஷ்
  • தகவல் தொழில்நுட்பத்தின் வழிக் கற்பித்தல்
  • கல்வியில் தகவல் தகவல் தொழில் நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கற்பித்தல்
  • கலை, விளையாட்டு பயிற்சிகள்
  • கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தனி கவனமும், பயிற்சியும்
  • கல்வி மற்றும் இதர செயல்பாடுகளில் உறுதுணை அளிக்கின்ற பெற்றோர் ஆசிரியர் சங்கம்