ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/சுற்றுச்சூழல் குழு

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
சுற்றுச்சூழல் குழு
21302-kids eco.jpeg

முகவுரை

நாம் வசிக்கின்ற பூமியை பாதுகாப்பது நம் ஒவ்வொருவருடையவும் கடமையாகும். பூமியிலுள்ள குழியானை முதல் கொம்பானை வரையும், புற்பூண்டுகள் முதல் மரங்கள் வரையும், சிறு குளங்கள் முதல் பெருங்கடல் வரையும் பாதுகாக்கப்பட வேண்டியதாகும்.

நோக்கம்

  • மாணவர்களில் சுற்றுப்புறத்தை/ இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தல்.
  • அறிவியல் முறைப்படி கழிவுப்பொருட்களை அகற்றுவதில் குழந்தைகளுக்கு பயிற்சியளித்தல்.
  • இயற்கை எழிலை அறிய கல்விச் சுற்றுலாக்கள்.
  • பிளாஸ்டிக்கை அறவே ஒழிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தல்.

செயல்பாடு

குழந்தைகளுக்குச் சுற்றுப்புறத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் சுற்றுப்புற தினத்தில் நாங்கள் செய்கின்ற செயல்பாடுகளில் முன்னிலையில் இருக்கின்றது. அதே நாள் பள்ளியின் சுற்றுப்புறத்தில் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்போம். குழந்தைகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்படும். சுற்றுப்புற தினத்தோடு தொடர்புள்ள அறிவிப்பு பலகைகள், முத்திரை வாக்கியங்கள் போன்றவற்றை குழந்தைகளே உருவாக்கி வெளியிட்டனர். பிளக்கார்டுகளை கையிலேந்தி சுற்றுப்புறப் பாதுகாப்பின் முத்திரை வாக்கியங்களை முழக்கி குழந்தைகள் பள்ளி மைதானத்தில் ஊர்வலம் செல்கின்றனர். ஒவ்வொரு வருடமும் ஜூன் 5 ஆம் நாள் சுற்றுப்புற தினம் கொண்டாடுவதோடு சுற்றுப்புற குழுவும் துவங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இக்குழுவின் உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு பல செயல்பாடுகள் செய்து வருகின்றனர். சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தல், பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துதல், செடிகள் நட்டு வளர்த்தல், மரங்களைப் பாதுகாத்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றின் வாயிலாக பள்ளியையும் சுற்றுப்புறத்தையும் கூடுதல் அழகுபடுத்த முயற்சி செய்து வருகின்றோம்.