ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
19:55, 15 ജൂൺ 2019-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- 21302 (സംവാദം | സംഭാവനകൾ) ('{{prettyurl|G. V. L. P. S. Chittur}} {{PSchoolFrame/Header}}<center> <br><div style="box-shadow:10px 10px 5px #888888;mar...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു)
സ്കൂൾസൗകര്യങ്ങൾപ്രവർത്തനങ്ങൾക്ലബ്ബുകൾചരിത്രംഅംഗീകാരം

அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது.

எனது நாடு... எனது சித்தூர்...
மிகவும் புகழ்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும் சித்தூர். அதுமட்டுமல்ல செல்வ சிறப்பிலும் எப்பொழுதும் முன்னிலையில்தான். இங்குள்ள செல்வச்சிறப்பினைக் கண்டு ஆசைப்பட்டு சித்தூர் தேசத்தை பிடித்தடக்க முயன்ற கொங்கு நாட்டு மன்னனை சித்தூர் காவில் உள்ள பகவதியின் துணையோடு தோற்கடித்து நாட்டை காப்பாற்றிய வீர கதையை நாம் அனைவரும் கேட்டிருப்போம். இதை நினைவுபடுத்தும் விதமாக வருடந்தோறும் சித்தூர் மக்கள் கொங்கன் படை கொண்டாடி வருகின்றனர். இது சித்தூரின் தேசிய திருவிழாவாகும். அம்பாட்டு தரவாடு, தச்சாட்டு தரவாடு, சம்பத்து தரவாடு, எழுபத்து தரவாடு, பொறயத்து தரவாடு போன்றவை சிற்றூரில் உள்ள வரலாற்றுப் புகழ் மிக்க தரவாடுகளாகும். இந்த தரவாடுகளில் உள்ள பெரியவர்களும் ஊர்மக்களும் சேர்ந்துதான் கொங்கன் படையை இன்றளவும் நடத்திவருகின்றனர். கேரளாவின் ஒரே ஒரு ரணோல்சவமாகும் சித்தூர் கொங்கன் படை.

சித்தூரின் பசுமை வளத்தைக் கட்டிக்காப்பதில் சோகநாஷினி நதிக்கு மிக முக்கிய பங்கு உண்டு. இந்நதிக்கரையில் தான் மலையாள மொழியின் தந்தையான திரு.இராமானுஜன் எழுத்தச்சனின் நினைவிடமான துஞ்சன் மடம் அமைந்துள்ளது. இது மிக முக்கியத்துவம் நிறைந்த ஒரு வரலாற்றுச் சின்னம் ஆகும். துஞ்சன் மடத்தைப் பற்றி கூடுதல் தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோர் இவ்விடத்திற்கு வருவதுண்டு. வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த மற்றொரு இடமாகும் துஞ்சன் நினைவு நூலகம். இந்த நூலகத்தின் சுவர்களில் கொங்கன் படையோடு தொடர்புடைய படங்கள் வரைந்து அழகுபடுத்தப்பட்டுள்ளது. திரு பைஜூ தேவ் அவர்களுடைய தலைமையில் தான் இந்த படங்கள் வரையப்பட்டுள்ளது. இது ஓய்வு நேரங்களை பயனுள்ள தாக்குவதோடு வரலாற்றுச் சிந்தனையைத் தூண்டவும் வழிகோலுகின்றது. சித்தூர் மக்களின் அரசுத் தேவைகளை நிறைவு செய்ய கச்சேரி மேட்டில் மினி சிவில் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது. இது சித்தூரின் பெருமையை இன்னும் கூட்டுகிறது.

சித்தூர் அரசுக் கல்லூரியைப் பற்றி அறியாதவர் யாருமே இருக்க மாட்டார்கள். விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ள சித்தூரின் இளைய தலைமுறையினரை கல்வியின் உச்சிக்கு கைப்பிடித்து உயர்த்துவதில் சித்தூர் அரசு கல்லூரிக்கு முக்கிய பங்கு உண்டு.
     இச்சிறப்புகள் அனைத்தும் நிறைந்த சித்தூரின் இதயப் பகுதியில் தான் நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது.    


ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்
വിലാസം
சித்தூர்

அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம்
,
678101
സ്ഥാപിതം1961
വിവരങ്ങൾ
ഫോൺ04922221095
ഇമെയിൽgvlpschittur@gmail.com
വെബ്‍സൈറ്റ്
കോഡുകൾ
സ്കൂൾ കോഡ്21302 (സമേതം)
വിദ്യാഭ്യാസ ഭരണസംവിധാനം
റവന്യൂ ജില്ലபாலக்காடு
വിദ്യാഭ്യാസ ജില്ല பாலக்காடு
സ്കൂൾ ഭരണ വിഭാഗം
സ്കൂൾ വിഭാഗംபொதுக் கல்வி
പഠന വിഭാഗങ്ങൾ
എൽ.പി

യു.പി
മാദ്ധ്യമംதமிழ், மலயாளம்
സ്കൂൾ നേതൃത്വം
പ്രധാന അദ്ധ്യാപകൻ
അവസാനം തിരുത്തിയത്
15-06-201921302


പ്രോജക്ടുകൾ
തിരികെ വിദ്യാലയത്തിലേക്ക്
എന്റെ ഗ്രാമം
നാടോടി വിജ്ഞാനകോശം
സ്കൂൾ പത്രം
അക്ഷരവൃക്ഷം
ഓർമ്മക്കുറിപ്പുകൾ
എന്റെ വിദ്യാലയം
Say No To Drugs Campaign
ഹൈടെക് വിദ്യാലയം
കുഞ്ഞെഴുത്തുകൾ


சித்தூர் தத்தமங்கலம் நகரசபையின் முக்கிய இடத்தில் அதாவது அணிக்கோடுக்கு அருகில் அரசு விக்டோரியா பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இரண்டு வார்டுகள் (வால்முட்டி, கிழக்கேத்தரை) எல்லைகளாக உள்ள இந்தப் பள்ளிக்கூடம் 1930 ல் நிறுவப்பட்டது.


தலைமை ஆசிரியை

எங்களுடைய இந்த சிறிய ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் பணிபுரியக்கூடிய ஒவ்வொருவரும் இப்பள்ளிக்கூடத்தை உயிரினும் மேலாக நேசிக்கின்றனர். இதன் வளர்ச்சிக்காக இரவு, பகல் பாராமல் உழைக்கின்றனர் என்றால் அது மிகையல்ல. இதன் சிறப்புக்கு முன்னாள் மாணவர்களுடையவும், ஆசிரியர்களுடையவும் ஆசிர்வாதம் உறுதுணையாகிறது. இங்கு பணிபுரிகின்ற ஒவ்வொருவருக்கும் இந்த எண்ணம் அனுபவித்து அறிய முடிகின்றது. ஒவ்வொரு வருடமும் கலை, விளையாட்டு, கைவண்ணம், அறிவியல், கணித துறைகளில் நாம் பெறுகின்ற ஒவ்வொரு வெற்றியும் நமது ஜி. வி. எல். பி மண்ணின் பெருமையை எடுத்துரைக்கின்றது. இன்றும் அது தொடர்ந்து கொண்டிருக்கின்றது. உணவு சமைப்பவர் முதல் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வரை ஒரே குடும்பம் போலவே நாங்கள் உற வாடுகின்றோம். இதுதான் எங்களது வெற்றிக்கு காரணம். ஜி. வி. எல். பி.எஸ். குடும்பத்திலுள்ள நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுடைய பரிபூரணமான சேவையை செய்து வருகின்றோம். இடர்கள் எத்தனை வரினும் சித்தூர் தாலுக்காவிலுள்ள மிகச்சிறந்த ஒரு ஆரம்பப் பள்ளிக் கூடமாக திகழ்கின்றது எங்களுடைய அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம்.

எங்களது குட்டி செஸ் சாம்பியனை அறிந்து கொள்வோம்

நான் தான் வைகப்பிரபா. க.அ

பைலட் பள்ளிக்கூடம்

சித்தூர் தாலுக்காவில் உள்ள ஒரே ஒரு பைலட் ஸ்கூல் ஆகும் நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம். இதனால் நமக்கு 10 மடிக்கணினியும், 4 ப்ரொஜெக்டர்களும் IT@Shool -ல் இருந்து கிடைத்துள்ளது. இவற்றை பயன்படுத்தி தான் வகுப்பு செயல்பாடுகள் நடத்தப்படுகின்றது. இதன்மூலம் கற்க வேண்டிய பாடங்கள் அனைத்தும் குழந்தை நேரில் கண்டும், கேட்டும் கற்க முடிகிறது. கற்றல் குறைபாடுகளை நீக்க இந்த IT வகுப்புகளால் முடிகிறது. அனைத்து தரத்தில் உள்ள குழந்தைகளை கவர்வதற்கும், ஒவ்வொரு குழந்தைகளுக்கும் உள்ள செயல்பாடுகள் திட்டமிட்டு பாதுகாப்பதற்கும் முடிகின்றது. காலத்திற்கேற்ப மாணவர்களில் மாற்றங்களை ஏற்படுத்தவும், அறிவியலின் வளர்ச்சியை நல்ல முறையில் பயன்படுத்தவும் இதனால் முடிகின்றது.

செயல் திட்டங்கள்

இதர செயல்பாட்டுக் குழுக்கள்

சங்கங்கள்

முந்தைய தலைமை ஆசிரியர்கள்

  • திரு.வி.ராஜன்
  • திரு.டி.சி. தாமஸ்
  • திருமதி.ஷம்சத் பேகம்
  • திருமதி.க.ப.விஜயகுமாரி
  • திருமதி.ஜி.அம்பிகா
  • திருமதி.நளினி சி.ஐ

பிரபலமான முன்னாள் மாணவர்கள்


* திருமதி.பி.லீலா (பாடகி) * திருமதி.சாந்தா தனஞ்செயன் (பிரபல பரத நாட்டியக் கலைஞர்) * திரு.ஜான்பால் (பிரபல திரைக்கதை எழுத்தாளர்) * திருமதி.ராதா லட்சுமி பத்மராஜன் (பிரபல எழுத்தாளர் திரு பத்மராஜன் அவர்களுடைய மனைவி) * திரு.ஹரி சாத்ந் சரண் (நடிகர்)
  • திருமதி.மானசி பாய் (முன் Additional DPI)
  • டாக்டர் லதா வர்மா
  • திரு.கே.சிவன் (ஓய்வுபெற்ற ஆர்.டி.டி)

காணொளி பள்ளியில் நடத்தப்பட்ட செயல்பாடுகளும்,தினக்கொண்டாட்டங்களும்

படைப்புகள்- குழந்தைகளுடையவும்,ஆசிரியர்களுடையவும்

வழிகாட்டி

சித்தூர் நகரத்தின் இதயப்பகுதியான அணிக்கோட்டிலிருந்து தபால் நிலையம் சாலை வழியாக அரைக் கிலோமீட்டர் நடந்தால் வலதுபுறம் காணப்படும் அரசு விக்டோரியா பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு பின்புறத்தில் தான் நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது.

{{#multimaps: 10.699971,76.740645 | width=800px | zoom=16 }}