வசதிகள் செயல்பாடுகள் குழுக்கள் வரலாறு அங்கீகாரங்கள்

பாலக்காடு மாவட்டத்தில் பாலக்காடு கல்வி மாவட்டத்தில் சித்தூர் துணை மாவட்டத்தில் சித்தூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு அரசுப் பள்ளியாகும் அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம்.

ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்
அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம், சித்தூர்
വിലാസം
சித்தூர்

சித்தூர்
,
சித்தூர் പി.ഒ.
,
678101
,
பாலக்காடு ജില്ല
സ്ഥാപിതം1930
വിവരങ്ങൾ
ഫോൺ04923 221095
ഇമെയിൽgvlpschittur@gmail.com
കോഡുകൾ
സ്കൂൾ കോഡ്21302 (സമേതം)
യുഡൈസ് കോഡ്32060400102
വിക്കിഡാറ്റQ64689876
വിദ്യാഭ്യാസ ഭരണസംവിധാനം
റവന്യൂ ജില്ലபாலக்காடு
വിദ്യാഭ്യാസ ജില്ല பாலக்காடு
ഉപജില്ല சித்தூர்
ഭരണസംവിധാനം
ലോകസഭാമണ്ഡലംஆலத்தூர்
നിയമസഭാമണ്ഡലംசித்தூர்
താലൂക്ക്சித்தூர்
തദ്ദേശസ്വയംഭരണസ്ഥാപനംசித்தூர் தத்தமங்கலம் நகரசபை
വാർഡ്17
സ്കൂൾ ഭരണ വിഭാഗം
സ്കൂൾ ഭരണ വിഭാഗംஅரசாங்கம்
സ്കൂൾ വിഭാഗംபொதுக் கல்வி
പഠന വിഭാഗങ്ങൾ
എൽ.പി
സ്കൂൾ തലം1 முதல் 4 வரை
മാദ്ധ്യമംதமிழ், மலையாளம்
സ്ഥിതിവിവരക്കണക്ക്
ആൺകുട്ടികൾ76
പെൺകുട്ടികൾ160
ആകെ വിദ്യാർത്ഥികൾ236
അദ്ധ്യാപകർ12
സ്കൂൾ നേതൃത്വം
പ്രധാന അദ്ധ്യാപികதீபா. அ
പി.ടി.എ. പ്രസിഡണ്ട്மோகன்தாஸ். பா
എം.പി.ടി.എ. പ്രസിഡണ്ട്சுமதி. K
അവസാനം തിരുത്തിയത്
11-07-202421302


പ്രോജക്ടുകൾ
തിരികെ വിദ്യാലയത്തിലേക്ക്
എന്റെ ഗ്രാമം
നാടോടി വിജ്ഞാനകോശം
സ്കൂൾ പത്രം
അക്ഷരവൃക്ഷം
ഓർമ്മക്കുറിപ്പുകൾ
എന്റെ വിദ്യാലയം
Say No To Drugs Campaign
ഹൈടെക് വിദ്യാലയം
കുഞ്ഞെഴുത്തുകൾ



சித்தூர் தத்தமங்கலம் நகரசபையின் முக்கிய இடத்தில் அதாவது அணிக்கோடுக்கு அருகில் அரசு விக்டோரியா பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இரண்டு வார்டுகள் (வால்முட்டி, கிழக்கேத்தரை) எல்லைகளாக உள்ள இந்தப் பள்ளிக்கூடம் 1930 ல் நிறுவப்பட்டது. 1961-62 கல்வியாண்டில் 5.6.61 [1] முதல் வி.ஜி.எச்.எஸ், சித்தூரிலிருந்து பிரிக்கப்பட்டு தனி LP பிரிவாக செயல்படத் தொடங்கியது.

மீண்டும் பள்ளிக்கு எனது நாடு நாட்டுப்புற கலைக்களஞ்சியம்

வரலாறு

சித்தூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க கொங்கன் படையின் நாட்டின் இதயப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கூடமே நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம். 01.06.1930ஆம் ஆண்டு பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சியின் போது கொச்சியின் ஒரு பகுதியாக இருந்த சித்தூரில் விக்டோரியா பெண்கள் பள்ளிக்கூடம் செயல்படத் துவங்கியது. அக்காலத்தில் பிரிட்டிஷ் ராணி விக்டோரியா மகாராணியாக இருந்தார். அவரது நினைவாகவே பள்ளிக்கு விக்டோரியா எனப் பெயரிடப்பட்டது. கூடுதல் வரலாறு

வசதிகள்

ஒவ்வொரு பள்ளிக்கும் மிக முக்கியமான ஒன்றாகும் பௌதிக வசதிகள். இதிலும் நமது அரசு விக்டோரிய ஆரம்பப்பள்ளி சிறந்து விளங்குகிறது. குழந்தைகளுக்கு தேவையான வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், கழிப்பறைகள், நூலகம், ஆய்வுகூடம் போன்ற சிறந்த கற்றல் சூழ்நிலைகள் இங்கே அமைக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளுக்கு மிகவும் உதவியாக உள்ளது. கூடுதல் வசதிகள் அறிய

முன் துவக்கப்பள்ளி

2000 ஆம் ஆண்டில் நமது மாநிலம் தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தால் பொதுப்பள்ளி பாதுகாப்பின் மூலம் பொதுப் பள்ளிகளில் முன் துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. இதன் வாயிலாக நமது பள்ளியின் வளர்ச்சியிலும், கஷ்ட நஷ்டத்திலும் என்றென்றும் உறுதுணையாக உள்ள பெற்றோர் ஆசிரியர் சங்கம் தலைமையில் 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு முன் துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. அப்போதைய எம்.எல்.எ அச்சுதன் துவங்கி வைத்தார். பதினைந்து குழந்தைகளும் ஒரு ஆசிரியருமாக துவங்கிய நமது முன் துவக்கப்பள்ளியில் தற்போது 70 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும், ஒரு ஆயாவும் உள்ளனர். இவ்வாறு -2 முதல் +2 வரை ஒரே சுற்றுச்சுவராக உள்ள கட்டிடத்திலே நமது அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி நிலை நிற்கிறது. மேலும் அறிய

துவக்கப்பள்ளி

சிறந்த படைப்பாளர்களையும், அறிஞர்களையும் உருவாக்கிய வரலாறு நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கு உண்டு. இதற்கு எந்த ஒரு குறைவும் ஏற்படாமல் இன்றும் நமது துவக்கப்பள்ளி செயல்பட்டு முன்னிலையில்தான் நிற்கிறது. இதன் முக்கிய உறைவிடம் இங்குள்ள குழந்தைகளும், ஆசிரியர்களுமே. ஒரு தலைமை ஆசிரியரும், 12 ஆசிரியர்களும் இப்பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். துவக்கப் பள்ளியில் 378 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இனியும் வாசிக்கலாம்

இதர செயல்பாபாடுகள்

பாடத்திட்ட செயல்பாடுகளுக்கும் இணைபாடதிட்ட செயல்பாடுகளுக்கும் பள்ளியில் ஒரே போல முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மேலும் பள்ளிக்கே உரித்தான சில தனித்துவமான செயல்பாடுகளும் மேற்கொள்ளப்படுகிறது. இதன் வாயிலாக குழந்தைகளின் திறமைகள் கண்டறியப்பட்டு, பல்வேறு செயல்பாடுகளில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மேலும் குழந்தைகளின் கற்றலை ஊக்குவிக்க மிகச்சிறந்த வழியாகவும் உள்ளது.

பெற்றோர் ஆசிரியர் சங்கம்

ஒரு பள்ளியின் முழு வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மிக முக்கியமான ஒன்றாகும். இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் கல்வித்தரத்தையும், பௌதீக சூழ்நிலையையும் உயர்த்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பள்ளி உயர்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களது ஒத்துழைப்பு முழுமையாக கிடைப்பதுண்டு. இத்தகைய சிறப்புக்கள் நிறைந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடும், உறுதுணையோடுமே நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றது. கூடுதல் அறிவதற்கு இங்கே சொடுக்கவும். பெற்றோர் ஆசிரியர் சங்கம்

பைலட் பள்ளிக்கூடம்

சித்தூர் தாலுக்காவில் உள்ள ஒரே ஒரு பைலட்[2]பள்ளி ஆகும் நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம். இதனால் நமக்கு 10 மடிக்கணினியும், 4 ப்ரொஜெக்டர்களும் IT@Shool -ல் இருந்து கிடைத்துள்ளது. இவற்றை பயன்படுத்தி தான் வகுப்புச் செயல்பாடுகள் நடத்தப்படுகின்றது. இதன்மூலம் கற்க வேண்டிய பாடங்கள் அனைத்தும் குழந்தை நேரில் கண்டும், கேட்டும் கற்க முடிகிறது. கற்றல் குறைபாடுகளை நீக்க இந்த IT வகுப்புகளால் முடிகிறது. அனைத்து தரத்தில் உள்ள குழந்தைகளை கவர்வதற்கும், ஒவ்வொரு குழந்தைகளுக்கும் உள்ள செயல்பாடுகள் திட்டமிட்டு பாதுகாப்பதற்கும் முடிகின்றது. காலத்திற்கேற்ப மாணவர்களில் மாற்றங்களை ஏற்படுத்தவும், அறிவியலின் வளர்ச்சியை நல்ல முறையில் பயன்படுத்தவும் இதனால் முடிகின்றது.

ஒரு பொன் மகுடம் கூட! ஸ்கூள்விக்கி விருது - 2022, மாவட்ட அளவில் முதல் இடம்

 

ஸ்கூள்விக்கி விருது - 2022, பாலக்காடு மாவட்டத்தில் முதல் இடத்தை நமது விக்டோரியா அரசு ஆரம்பப் பள்ளி சொந்தமாக்கியது. கூடுதல் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும். ஸ்கூள்விக்கி விருது 2021-22

மகத்தான ஆளுமைகள்

வித்தியாசமான வழிகளில் பயணம் செய்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர்களை இப்பள்ளியிலும் காணலாம். ஆசிரியர்களுடையவும், சகமாணவர்களுடையவும் கைதட்டல்களை பெற்ற வண்ணம் பெற்றோருக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்த்து பள்ளி வரலாற்றுத் தாள்களில் மின்னுவர். கூடுதல் அறியலாம்

எங்களது குட்டி செஸ் சாம்பியனை அறிந்து கொள்வோம்

நான் தான் வைகப்பிரபா. க.அ

எங்கள்பள்ளி மேதைகளுடன்...!

பொதுக்கல்வி பாதுகாப்பு வேள்வியின் பாகமாக நடத்தப்படுகின்ற பள்ளிக்கூடம் மேதைகளுடன் எனும் அரசாங்கத்தின் திட்டத்தை நாங்கள் மிக மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம். பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளான குழந்தை கள்தினத்தில் ஜி.வி.எல்.பி பள்ளிக்கூடம், எங்கள் பள்ளி மேதைகளுடன் என்னும் நிகழ்ச்சிக்கு தொடக்கமிட்டது. பள்ளிக்கூடத்திற்கு அருகாமையிலுள்ள கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகளில் கேரளத்திலும் வெளி மாநிலத்திலும் அறியப்படுகின்ற புகழ்பெற்ற மேதைகளைக் கண்டறிந்து, அவர்களை கௌரவப்படுத்த முடிந்ததில் நாங்கள் பெருமகிழ்ச்சி கொள்கின்றோம். இந்த மேதைகளுக்கு பல்லாயிரம் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றோம். மேதைகளுடன் - ஜி.வி.எல்.பி.எஸ், சித்தூர்

சமூக ஊடகத்துறையிலும்

மாறிவரும் காலத்திற்கேற்ப நவீன யுகத்திற்கேற்றவாறு சமூக ஊடகத் துறையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது சித்தூர் ஜி.வி.எல்.பி. பள்ளி. பள்ளியின் கற்றல் மற்றும் இதர செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஒரு வலைப்பதிவு (blog) தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளியின் செயல்பாடுகளை சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள சொந்தமாக யூடியூப் சேனலும் தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் இவை அனைத்தும் சமூகத்தில் பள்ளியின் தனித்துவத்தை தக்கவைக்க உதவுகிறது. எங்களது

தலைமை ஆசிரியர்கள்

பெருமைமிகு சம்பவங்கள் நிறைந்த ஜி.வி.எல்.பி. பள்ளியை வழிநடத்த ஒவ்வொரு முறையும் திறமை மிக்க தலைமை ஆசிரியர்கள் இருந்தனர். தற்போதும் இருந்து வருகின்றனர். இப்பள்ளியின் மகிமை அறிந்து பணியாற்றுவதில் அவர்கள் வல்லமை படைத்தவர்கள். சமையல் செய்பவர் முதற்கொண்டு அனைத்து பணியாட்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் அனைவரும் ஒரு குடும்பமாக (ஜி.வி.எல்.பி.எஸ். குடும்பம்) இங்கு வாழ்ந்து வருகிறோம் என்பது உண்மை. மேலும் வாசிப்போம்

முந்தைய தலைமை ஆசிரியர்கள்

பள்ளியின் முன்தலைமை ஆசிரியர்கள்
வரிசை எண முன்தலைமை ஆசிரியர்கள் வருடம்
1 வி.ராஜன் - 2001
2 டி.சி. தாமஸ் 2001 - 2005
3 ஷம்சத் பேகம் 2005 - 2006
4 க.ப.விஜயகுமாரி 2006 - 2007
5 ஜி.அம்பிகா 2007 - 2009
6 நளினி சி.ஐ 2009 - 2016
7 ஷைலஜா. ந. கு 2016 - 2021

பிரபலமான முன்னாள் மாணவர்கள்

பள்ளியின் முன்னாள் மாணவர்கள்
வரிசை எண் முன்னாள் மாணவர்கள்
1
2
3
4
5 மானசி பாய் (முன் Additional DPI)
6
7 டாக்டர் லதா வர்மா
8 கே.சிவன் (ஓய்வுபெற்ற ஆர்.டி.டி)

படைப்புகள்-குழந்தைகளுடையவும், ஆசிரியர்களுடையவும்

ELA

படத்தொகுப்பு

ஸ்கூள்விக்கி QR குறியீடு

 
ஸ்கூள்விக்கி QR குறியீடு, ஜி.வி.எல்.பி.எஸ். சித்தூர்

ஸ்கூள்விக்கி QR குறியீடு எங்கள் பள்ளி அலுவலகத்தின் முன்னால் ஒட்டப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் பெற்றோர்களுக்கும் ஊர்மக்களுக்கும் பள்ளியைப் பற்றி தெரிந்து கொள்ள இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் நமது பள்ளியின் முழு விவரங்களையும் புரிந்து கொள்ளலாம். பள்ளி நிகழ்வுகளுக்கு வரும் பெற்றோர்கள் மற்றும் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வரும் பெற்றோர்கள் எங்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்து பள்ளியின் முழு விவரங்களையும் அறிந்து கொள்கின்றனர். நமது புதிய தகவல் பலகையிலும்[3] ஸ்கூள்விக்கி QR குறியீடு சேர்க்கப்பட்டுள்ளது.




வழிகாட்டி

பள்ளியை வந்தடைவதற்கான வழிகள்

  • பாலக்காடு கோட்டமைதானத்திலிருந்து மணப்புள்ளிக்காவு வழியாக தேசிய நெடுஞ்சாலையை அடையவும்.
  • காடாங்கோடு சந்திப்பில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை கடந்து கல்லிங்கல், கொடும்பு, பொல்புள்ளி வழியாக சித்தூர் அணிக்கோடு சந்திப்பை அடையவும்.
  • அணிக்கோடு சந்திப்பு பாலக்காட்டிலிருந்து சுமார் 18.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொழிஞ்சாம்பாறையிலிருந்து வருபவர்கள் நல்லேப்பிள்ளி வழியாக 13 கி.மீ பயணித்து அணிக்கோட்டையும் திருச்சூரிலிருந்து வருபவர்கள் கொடுவாயூர், தத்தமங்கலம் வழியாக அணிக்கோட்டையும் வந்தடைய வேண்டும்.
  • அணிக்கோடு சந்திப்பிலிருந்து இடதுபுறம் தபால் நிலையம் (போஸ்ட் ஆபீஸ்) சாலை வழியாக 100 மீட்டர் சென்றால் வலதுபக்கம் காணப்படும் அரசு விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தின் பின்புறம் எங்கள் ஜி.வி.எல்.பி.எஸ் சித்தூர் அமைந்துள்ளது.


{{#multimaps: 10.7000273,76.7385216|zoom=13}}

ஆவணம்

  1.  
    பள்ளித் தகவல் பலகை
    பள்ளித் தகவல் பலகை
  2. KITEன் பைலட் திட்டம்
  3.  
    பள்ளித் தகவல் பலகை (புதியது)
    புதிய பள்ளித் தகவல் பலகை