ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/மேலும் அறிய

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്

முன்துவக்கப்பள்ளி

2004ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 15 குழந்தைகளோடு தொடங்கியதே நமது அரசு விக்டோரியா முன்துவக்கப்பள்ளி. முன்காலங்களில் பாடப்புத்தகங்கள் இல்லாமல் களிவண்டி என்னும் கையேட்டின் உதவியோடு கதையும், விளையாட்டும் என்ற நிலையும் துவங்கினோம். ஒவ்வொரு வருடமும் இங்கு நடைபெறும் கொண்டாட்டங்களில் இக்குழந்தைகளின் பாட்டும், நடனமும், நாடகமும், மாறுவேடமும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது. இதன் மூலம் குழந்தைகளின் கலைத் திறனை வளர்க்கவும், மேடை பயத்தைப் போக்கவும் முடிகிறது. பள்ளி விளையாட்டுப் போட்டிகளிலும் இக்குழந்தைகள் பங்கேற்கின்றனர். ஆகவே தனி ஓட்டப்பந்தயம், தவளைச்சாட்டம், பொட்டேட்டோ ரேஸ், எலுமிச்சையும் ஸ்பூனும் போன்ற போட்டிகள் நடத்தி குழந்தைகளின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கின்றோம். இரண்டு முறை நமது பள்ளியிலிருந்து மாவட்ட அளவிலான முன் துவக்கப் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதுண்டு. இதில் ஒரு முறை கலாதிலகமும், கலாபிரதிமையும் மாவட்ட அளவில் மூன்றாவது இடமும் நமது பள்ளிக்குக் கிடைத்தது.

2006 ஆம் ஆண்டு குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் இரண்டு ஆசிரியர்களும், ஒரு ஆயாவும் நியமிக்கப்பட்டனர். அந்த வருடமே பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உதவியோடு ஒரு பாட புத்தகம் கொண்டுவரப்பட்டது. பல நல்ல உள்ளங்களின் துணையோடு முன் துவக்கப்பள்ளி நல்ல முறையில் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் வந்து சேர்கின்ற குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கும், அவர்களது கலை, விளையாட்டு திறன்களை கண்டறிந்து, அதனை முன்னேற்றவும் முடிகிறது. முன் துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கான பௌதிக சௌகரியங்கள் ஏற்படுத்துவதில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் பங்கு பாராட்டுக்குரியது.

முன்துவக்கப்பள்ளி ஆரம்பித்த தலைமை ஆசிரியர்களான தோமஸ், அம்பிகா என்பவர்கள் சேர்ந்து மின்விசிறிகள் நன்கொடை அளித்தனர். அந்தக் காலக் கட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்களாக இருந்த பினேஷ் பில்டிங் பிளாக்சும், பிரதீப் வகுப்பறைக்கு தரையோடும், ஆசிரியர்களுக்குத் தேவையான மேசைகளும் நன்கொடையாக வழங்கினார். பெஞ்சுகள், டெஸ்க்குகள், அலமாரிகள் போன்றவை பள்ளி நிதியுதவியிலிருந்து வாங்கப்பட்டது. ஆறுமுகன் என்னும் பெற்றோர் குழந்தைகளுக்கு விளையாடுவதற்காக மரக்குதிரை, வாத்து, சைக்கிள், பந்துகள் போன்ற விளையாட்டுச் சாமான்கள் நன்கொடை அளித்தார். விளையாட்டுச் சாமான்கள் வாங்குவதற்காக நிதியிலிருந்து கார்கள், ஸ்கூட்டர்கள், சிறிய பொம்மைகள், வழுக்கள் போன்றவை வாங்கப்பட்டது. பெற்றோர்களின் உதவியோடு வகுப்பறை சுவர்கள் படங்கள் வரைந்து அழகுபடுத்தப்பட்டது. முன் துவக்கப்பள்ளியின் முன்னேற்றத்தில் ஆசிரியர்களுடையவும், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களுடையும் பங்கு குறிப்பிடத்தக்கது.