ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /மீண்டும் பள்ளிக்கு
மீண்டும் பள்ளிக்கு

உலகத்தையே உறையச் செய்த கோவிட் காலம்
கோவிட் -19 என்பது நாட்டையே ஆட்டிப்படைத்த ஒரு தொற்றுநோய். உலகம் இதுவரை கண்டிராத இந்த நோய் நம் கல்வியை தலைகீழாக மாற்றிவிட்டது. பிப்ரவரி 2020 இல், கோவிட் தொற்றுநோய் நாடு முழுவதும் பரவியபோது, அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன.
கோவிட் காலக்கல்வி
கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தைகள் ஒரு புதிய சோதனைக் காலத்தை கடந்துள்ளனர். பள்ளிக்கு வர வேண்டிய குழந்தை வீட்டில் எப்படிக் கற்க முடியும்? வகுப்பில் படித்துக் கொண்டிருந்த சிறுவன், வீட்டில் இருந்து டிவியில் கைட் விக்டர்ஸ் சேனலில் வரும் வகுப்புகளைப் பார்த்தான். கடந்த 2 ஆண்டுகளாக Google Meet மூலம் குழந்தைகளுக்கு வகுப்புகளை நடத்தி வருகிறோம். ஆன்லைன் கல்வியின் காலம். ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிறைய வரம்புகள் இருந்தன.
பள்ளி திறக்கிறது
கோவிட் தொற்றின் தாக்கம் தணிந்து நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற செய்தி நம் ஒவ்வொருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டில் படித்து வரும் குழந்தைகள், நவம்பர் 1ம் தேதி பள்ளிக்கு திரும்புகின்றனர். கோவிட் காலத்திற்குப் பிறகு, பள்ளிக்கு வரும் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் சுத்தப்படுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பள்ளிக்கு வரும் குழந்தைகள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் குறித்த சிறு காணொளி தயாரித்து குழந்தைகளுக்குப் பகிரப்பட்டது. ஒவ்வொரு குழந்தையும் பின்பற்ற வேண்டிய கோவிட் முன்னெச்சரிக்கைகள் குறித்து அனைத்து குழந்தைகளுக்கும் தெரியப்படுத்தும் நோக்கத்துடன் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
- வீடியோ பார்ப்போம்- Ready to School
கேரளப்பிறவி மற்றும் நுழைவுவிழா

எங்கள் பள்ளியில் நவம்பர் 1 ஆம் தேதி பள்ளி திறப்பு மற்றும் கேரளப்பிறவி சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோவிட் காரணமாக மாணவர்கள் 3 குழுக்களாகப் பிரித்து பள்ளிக்கு வரும்படி செய்யப்பட்டது. முதல் குழுவானது திங்களும், செவ்வாயும் இரண்டாவது குழுவானது புதன், வியாழன் கிழமைகளிலும், மூன்றாவது குழு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளிலும் பள்ளிக்குவரவழைக்க திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு குழுவினரும் முதன் முறை வரும் போது நுழைவு விழாவை நடத்தினோம். எங்கள்பள்ளி பி.ஆர்.சி தலைமை பள்ளியாதலால் முனிசிபல் அளவிலான நுழைவு விழா நடத்தப்பட்டது. நகராட்சி துணைத் தலைவர் சிவக்குமார், வார்டு கவுன்சிலர் ஸ்ரீதேவி, கல்வி நிலைய தலைவர் சுமதி, பி.டி.ஏ, தலைவர் சுவாமிநாதன் ஆகியோர் குழந்தைகளை வாழ்த்தினர். விழாவில் பள்ளியின் புதிய தலைமையாசிரியையாக பொறுப்பேற்ற ஜெயலட்சுமிக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அன்று மிகவும் குறைவான மாணவர்களே பள்ளிக்கு வந்தனர். பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறையானது மாலைகள் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பள்ளியிலுள்ள அனைத்து பூச்சட்டிகளும் வர்ணம் பூசி அலங்கரிக்கப்பட்டன. பள்ளி முற்றத்தில் உள்ள மரங்களில் எழுத்துஅட்டைகள் தொங்கவிடப்பட்டன. புத்தக விநியோகம், இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். கேரளாவின் பிறந்தநாள் என்பதால், வினாடி-வினா போட்டியும் நடத்தப்பட்டது. அன்றைய தினம் கேரளாவின் பிறந்தநாள் பாடல்கள் பாடப்பட்டது. மாணவர்கள் பதிப்பு தயாரித்து வந்திருந்தனர். ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் நுழைவு விழாவில் கலந்து கொண்டனர்.
- வீடியோ பார்ப்போம்- நுழைவு விழா- 2021