சரண் புதுமன (ஹரிசாந்த் சரண்) மலையாளச் சின்னத்திரையிலும், திரைப்படத்துறையிலும் நல்லமுறையில் செயல்பட்டு வருகின்ற ஒரு திறமையான நடிகரும், பின்னணிப் பேசுபவரும் ஆவார். நூற்றிற்கும் மேற்பட்ட மெகாத் தொடர்களிலும், 40 திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். மாநில அரசின் சிறந்த பின்னணி பேசுபவருக்கான விருதைப் பெற்றுள்ளார்.
குடும்ப வாழ்க்கை
மேடை நாடக எழுத்தாளரும், இயக்குனரும் மற்றும் ஆசிரியருமான காளிதாஸ் புதுமனயின் மகனே சரண். இவர் மலையாள திரைப்படத் தயாரிப்பாளரான மஞ்சரி சந்திரனின் மகளான ராணி சந்திரனை திருமணம் செய்துள்ளார். ஒரு குறும்படத்தில் நடித்துள்ள இவர் ஒரு தொலைக்காட்சி சேனலில் செயலாற்றியுமுள்ளார். சரண் ,ராணி தம்பதியரின் மகள் கௌரி உபாஸன.
நடிப்பு
ஒரு சின்னத்திரை நாயகனாக சரண் புதுமனயின் வாழ்க்கை துவங்கியது. இக்காலகட்டத்தில் இவர் நிறைய அற்புத கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியுள்ளார். 40 மெகா தொடர்கள் அவருக்கு இருந்தது. சின்னத்திரை கலையரங்குகளில் மிகவும் புகழ் பெற்றவராக இருந்தார் சரண்.
மஞ்சாடிக்குரு, என்டெ சத்யன்யோஷண பரீக்ஷகள், வீரபுத்ரன், பேங்களூர் டேய்ஸ் போன்ற 40 திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். மலையாளத் திரை உலகில் பின்னணி பேசிய திரைப்படங்களில் ராம்சரண் தேஜா என்ற வேடம் மிகவும் புகழ்பெற்றது. கேரள மாநில அரசின் சிறந்த பின்னணிக் கலைஞருக்கான கேரள மாநில திரைப்பட விருதைப் பெற்றுள்ளார்.