துணைமாவட்ட விளையாட்டுப் போட்டி

அக்டோபர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் கஞ்சிக்கோடு அசிசி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற துணை மாவட்ட விளையாட்டுப் போட்டியில் நமது மாணவர்கள் பங்கேற்றனர். எல் பி கிட்டீஸ் மாணவியர்களுக்கான 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஹிபா பாத்திமா, அமேயா, அஷிமா மற்றும் ஸ்ட்ரீனா முதலிடம் பெற்றனர். அவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

துணைமாவட்ட அறிவியல், கணிதம், சமூக அறிவியல் மற்றும் கைவேலை போட்டி

 

அக்டோபர் 17, 18 தேதிகளில், தத்தமங்கலம் GUPS மற்றும் ஜிஎஸ்எம்எச்எஸ்எஸ் பள்ளிகளில் துணை மாவட்ட அறிவியல், கணிதம், சமூக அறிவியல் மற்றும் பணி அனுபவ கண்காட்சிகள் நடைபெற்றன. போட்டிகளில் பங்கேற்ற குழந்தைகள் சிறந்த மதிப்பெண்களை பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

துணை மாவட்ட கலைவிழா

சித்தூர் துணை மாவட்ட கலைவிழா நவம்பர் 5, 6, 7, 8 ஆகிய தேதிகளில், கொழிஞ்சாம்பாறையிலுள்ள தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி, தூய சின்னப்பர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்தது. நமது பள்ளியிலிருந்து 11 தனிநபர் போட்டிகளிலும் 2 குழுப் போட்டிகளிலும் கலந்து கொண்டனர். மொத்தமாக 59 புள்ளிகள் பெற்று துணை மாவட்டத்தில் 2-வது இடத்தையும், சிறந்த அரசு ஆம்பப்பள்ளி என்ற கோப்பையையும் பெற்றது. இந்த கோப்பையை நமது பள்ளி தொடர்ந்து வென்றுள்ளது. தமிழ் கலைவிழாவில் நான்காவது இடத்தையும் வென்றது. காலைக் கூட்டத்தில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.