ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2021-22

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
2021 - 22
பள்ளிச் செயல்பாடுகளும், தினக்கொண்டாட்டங்களும்

ஜூன்

பள்ளி நுழைவு விழா - 2021

2021-22 பள்ளி நுழைவு விழா ஆன்லைனில் நடத்த அரசு முடிவு செய்துள்ளதை முன்னிட்டு இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த முக்கியமான நாளை எவ்வாறு கொண்டாடுவது என்று எஸ்.ஆர்.ஜி யில் முடிவு செய்யாப்பட்டது. பின்னர், நிர்வாகக் கூட்டம் கூடி விவாதித்து முடிவு செய்யப்பட்டது. நுழைவு விழா கூகிள் மீட் மூலம் நல்ல முறையில் நடத்தப்பட்டது. நமது பள்ளியின் நுழைவு விழா அரசு நுழைவு விழா முடிந்ததும் காலை 11 மணிக்கு தொடங்கியது.தேவஸ்ரீ எனும் மாணவி பிரார்த்தனை பாடினாள். தலைமை ஆசிரியர் பொறுப்பேற்றுள்ள திருமதி ஜெயஸ்ரீ ஆசிரியர் அனைவரையும் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. சுவாமிநாதன் அவர்கள் சிறப்புரையாற்றினா.பின்னர், நகராட்சியின் துணைத் தலைவர் திரு. சிவகுமார் அவர்கள் இவ்விழாவினைத் தொடங்கி வைத்தார். மாணவி இஷா நல்ல ஒரு அறிமுகப் பாடலைப் பாடினாள். கல்வி நிலைக்குழுத் தலைவர் திருமதி வி.சுமதி மற்றும் வார்டு கவுன்சிலர் திருமதி. ஸ்ரீதேவி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். செளபர்னிகா, முகமது அனஸ், ஏஞ்சலினா போன்ற மாணவர்கள் சிறந்த பாடல்களைப் பாடினர். குழந்தைகள் ஆன்லைனில் பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள் மற்றும் கதை சொல்லல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். இறுதியாக, ஆசிரியர் செயலாளர் திருமதி. சுப்ரபா அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். நுழைவு விழா கூட்டம் மதியம் 12 மணியளவில் இனிதே முடிவடைந்தது.

சுற்றுச்சூழல் தினம்

நுழைவு விழாவுக்குப் பிறகு கொண்டாடப்பட்ட முதல் தினம் ஜூன் - 5, சுற்றுச்சூழல் தினம். இந்த நாளில் என்ன நடவடிக்கைகள் செய்யலாம் என்பது குழந்தைகளுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. தாவரங்கள் மற்றும் மரங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து ஆசிரியர்கள் ஒவ்வொரு வாட்ஸ் ஆப் குழுவுக்கும் ஒவ்வொரு தலைப்பு வழங்கினர்.குழந்தைகள் இந்த தலைப்பை மையமாகக் கொண்ட உரைகள் மற்றும் பாடல்களை குழுவில் பகிர்ந்தனர். பல குழந்தைகள் சிறப்புரையாற்றினர். குழந்தைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான சுவரொட்டிகள், முத்திரை வாக்கியங்கள், பதிப்புகள் மற்றும் பேட்ஜ்கள் உருவாக்கினர். இவ்வாறு நாங்கள் சுற்றுச்சூழல் தினத்தை மிகச் சிறந்த முறையில் கொண்டாடினோம்.

வாசிப்பு தினம்

ஜூன் 19, வாசிப்பு நாள் பள்ளியில் நன்றாகவே கொண்டாடப்பட்டது. ஆசிரியர்கள் அவரவரது வாட்ஸ் ஆப் குழுவின் மூலம் வாசிப்பு தினத்தின் முக்கியத்துவம் மற்றும் பி.என் பணிக்கர் பற்றிய குறிப்பு போன்றவற்றை வழங்கினர். இந்நந்நாளில் குழந்தைகளுக்கு புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்கள் படித்த புத்தகத்தின் குறிப்புகளை எழுதி, குழுவில் வெளியிட்டனர். குழந்தைகள் சைகைப் பாடல்கள், கதைகள், பாடல்கள், கவிதைகள், வரைபடங்கள் போன்றவற்றை குழுவில் பகிர்ந்தனர். ஒவ்வொரு நாளும் குழந்தைகள் படிக்க ஒரு குழுவில் ஒரு வாசிப்பு அட்டை என வைக்கப்பட்டது. வினாடி வினா போட்டி வாசிப்பு வாரம் தொடர்பாக நடத்தப்பட்டது. இவ்வாறாக வாசிப்புதினம் பள்ளியில் நன்றாகக் கொண்டாடப்பட்டது.