ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2018-19

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
2018-19 கல்வி ஆண்டின் செயல்பாடுகளும், தினக் கொண்டாட்டங்களும்

ஜூன்

பள்ளி நுழைவுத் திருவிழா

நமது பள்ளியில் ஜூன் ஒன்றாம் நாள் நுழைவு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்கு எழுத்துக்களாலான கிரீடம் அணிவித்தோம். பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் குழந்தைகளுக்கு பரிசுப்பைகள் வழங்கினர். நுழைவுத் திருவிழாப் பாடல் அனைவரும் கேட்கும்படி செய்தோம். கல்வி அமைச்சரின் உறுதிமொழியை அனைவரும் கூறினோம். பள்ளிச் சீருடை மற்றும் புத்தகங்கள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. வார்டு கவுன்சிலர் திரு. சிவகுமார் அவர்கள் விழாவினைத் தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பின்பு அனைவருக்கும் லட்டு வழங்கப்பட்டது.

உலக சுற்றுப்புற தினம்

உலக சுற்றுப்புற தினமான ஜூன் 5 ஆம் நாள் சுற்றுப்புற தின உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். குழந்தைகளுடைய பதிப்புகளும் வெளியிடப்பட்டது. தலைமையாசிரியை திருமதி. ஷைலஜா அவர்கள் உலக சுற்றுப்புற தினம் கொண்டாடுவதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் பற்றி குழந்தைகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தைக் குறைக்க வேண்டும் என அனைவரிடமும் கேட்டுக்கொண்டார். பின்பு குழந்தைகளுடைய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் சுற்றுப்புறத்தோடு தொடர்புடைய பாடல்கள், கவிதைகள், குறிப்புகள் போன்றன இடம்பெற்றன. குழந்தைகள் ப்ளக்கார்டு பிடித்துக்கொண்டும் பேட்ஜ் அணிந்து கொண்டும் சுற்றுபுற தின ஊர்வலம் நடத்தினர். கவுன்சிலர் திரு. சாமிநாதன் அவர்கள் மரக்கன்றுகள் நட்டு, சுற்றுப்புற தினத்தை தொடங்கி வைத்தார்.அனைத்து குழந்தைகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

முன்னறி சோதனை

ஜூன் 11 ஆம் தேதி வேறு பள்ளிகளிலிருந்து புதிதாக வந்து சேர்ந்த குழந்தைகளுக்கு முன்னறிவு சோதனை நடத்தப்பட்டது.


ஹலோ இங்கிலீஷ்

ஜூன் 12-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை ஹலோ இங்கிலீஷ் வகுப்பு ஐந்து நாட்கள் இரண்டு மணிக்கூர் வீதம் அனைத்து வகுப்புகளிலும் நடத்தப்பட்டது.


அய்யன்காளி நினைவு தினம்

அய்யன்காளி நினைவு தினமான ஜூன் 18-ம் தேதி சமூக சீர்திருத்தவாதியான அய்யன்காளி அவர்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி, அவரது சேவைகள் பற்றியும் குழந்தைகளுக்கு அறியச் செய்தோம்.


வாசிப்பு வாரம்

ஜூன் 19 பி.என் பணிக்கரின் நினைவு நாளை வாசிப்பு தினமாக கொண்டாடினோம். வாசிப்பு தின வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. தலைமையாசிரியை திருமதி. ஷைலஜா அவர்கள் முன்னிலையில், குழந்தைகள் கவிதைகள், கதைகள், பி.என் பணிக்கரை பற்றின குறிப்புகள் போன்றவற்றைக் கூறினர். தலைமையாசிரியை அனைவருக்கும் வாசிப்பு தினத்தின் முக்கியத்துவத்தை விவரித்துக் கொடுத்தார். வகுப்பு நூலகமும், பள்ளி நூலகமும் இயன்ற அளவு பயன்படுத்தி வாசிப்புக் குறிப்பு எழுதுவதற்கு குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஒரு வாரம் முழுவதும் வாசிப்பு வாரமாக கொண்டாடப்பட்டது. தமிழ் மற்றும் மலையாள சங்கங்களின் தொடக்கமும், முடிவும் ஒரே நாளில் நடத்தப்பட்டது.

யோகா தினம்

ஜூன் 21 ஆம் நாள் யோகா தினம் கொண்டாடப்பட்டது. திருமதி. கிருஷ்ணம்மாள் அவர்கள் யோகா செய்தும், மாணவர்களை செய்ய வைத்துக் கொண்டும் யோகா தினத்தைத் தொடங்கி வைத்தார். அன்று முதல் குழந்தைகளுக்கு யோகா வகுப்பு தொடங்கப்பட்டது. வாழ்க்கையில் யோகாவிற்கு உள்ள முக்கியத்துவத்தை அனைத்துக் குழந்தைகளும் புரியும் விதத்தில் எடுத்துரைத்தார்.


ஜூலை

மருத்துவர் தினம்

ஜூலை 1ஆம் நாள் மருத்துவரான பிதான் சந்திர ராய் அவர்களது பிறந்தநாளை நாம் மருத்துவர். தினமாக கொண்டாடுகின்றோம் ஆரோக்கியம் என்பது வாழ்க்கை முறையும் உட்பட்டதுதான் என்ற கருத்தினை குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. வீடியோ காட்சியும் காண்பிக்கப்பட்டது.


துஞ்சன் குருமடத்திற்கு ஒரு பயணம்

ஜூலை மூன்றாம் தேதி திரு. துஞ்சன் குருமடம் சென்றோம். நான்காம் வகுப்புக் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த களப்பயணத்திற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இதனால் துஞ்சன் குருமடத்தின் முக்கியத்துவத்தை அறிய முடிந்தது. அங்கே சில குழந்தைகள் ராமாயணம் வாசித்தனர்.

பஷீர் நினைவு தினம், மொழிச் சங்க துவக்கம், வாசிப்பு வார முடிவு

ஜூலை 5 ஆம் நாள் பஷீர் நினைவு தினம், மொழிச் சங்க துவக்கம், வாசிப்பு வார முடிவு என்பன நடத்தப்பட்டது.திரு. சேகரிரிபுரம் மாதவன் இந்நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார். ஒன்றாம் வகுப்பில் பயிலும் அனஸ்தூப், அனர்கயா என்னும் குழந்தைகளின் தந்தை திரு.ஏஞ்சல் பாபு அவர்கள் வரைத்த பஷீரின் படம் வெளியிடப்பட்டது.திரு. சேகரிபுரம் மாதவன் குழந்தைகளுக்கு நாட்டுப்புறப் பாடல்களும் கவிதைகளும் பாடிக் கொடுத்தார். திருமதி. கிரிஜா அவர்களும் குழந்தைகளுக்கு நாட்டுப்புறப் பாடலை பாடிக் கொடுத்தார். குழந்தைகள் பஷீர் கதைகளான பூமியுடெ அவகாசிகள், பாத்தும்மயுடெ ஆடு போன்றவற்றிலிருந்து சில பாகங்களை மட்டும் நாடகமாக நடித்துக் காண்பித்தனர். பஷீர் கவிதைகளும் கூறினர். வாசிப்புக் குறிப்புகளும் வாசித்தனர். அனைத்து குழந்தைகளும் பதிப்புகள் தயாராக்கியிருந்தனர். ரமணன் புராணம் நாட்டிய காவியமாக நிகழ்த்தினர். தமிழ் குழந்தைகள் நாட்டுப்புற நடனம், திருக்குறள், குழுப்பாடல் போன்றவற்றை நிகழ்த்தினர்.

சந்திர தினம்

சந்திர தினமான ஜூலை 21 விடுமுறை நாளானதால் சந்திரத் தினத்தோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் யாவும் ஜூலை 20ஆம் தேதியே நடத்தப்பட்டது. அறிவியல் இலக்கிய பரிஷத் செயலாளர் திரு. பிரசாத் அவர்கள் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அறிவியல் சங்கத்தின் தொடக்கமும் அன்றைய நாள் நடந்தது. பிரசாத் அவர்கள் சந்திரனைப் பற்றியும் கிரகங்களைப் பற்றியும் வெளியேற்றம், வேலியிறக்கம், சந்திரகிரகணம், சூரியகிரகணம் போன்றவற்றைப் பற்றியும் எளிமையான மொழிநடையில் குழந்தைகளுக்கு எடுத்துரைத்தார். ஜூலை 27-ஆம் தேதி நடைபெறக்கூடிய சந்திர கிரகணத்தை பார்க்க தவறாதீர்கள் என்று குழந்தைகளுக்கு நினைவூட்டினார். பின்பு குழந்தைகள் உருவாகிவந்த ராக்கெட்டின் மாதிரி காண்பிக்கப்பட்டது. குழந்தைகள் ஆம்ஸ்டிராங், எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் போன்றோரது வேடமணிந்து வந்தனர். மற்ற குழந்தைகள் அவர்களிடம் சந்திர பயணத்தின் சிறப்புக்களை கேட்டறிந்தனர். அனைத்து குழந்தைகளும் அவரவர் தயாராக்கி வந்த பதிப்புகளை வெளியிட்டனர். இரண்டாம் வகுப்பு மாணவர்கள் பொம்மலாட்டம் நிகழ்த்தினர். ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் நிலாவினுடையவும் நட்சத்திரங்களுடையவும் பாடல்கள் பாடி நடமாடினர். தமிழ் குழந்தைகள் கிரகங்களைப் பற்றிய ஒரு பாடலுக்கு நடனமாடினர். பின்பு காணொளி காண்பிக்கப்பட்டது.

திரு.எ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு நாள்

எ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களைப் பற்றிய குறிப்பு (ஒலி அலைகள்) காலை கூட்டத்தில் அனைத்து மாணவர்களும் கேட்கும்படி செய்தோம். ஒன்றாம் வகுப்பு மாணவர்களான அன்ஸ்தூப், அனர்கயா என்பவர்களின் தந்தை திரு. ஏய்ஞ்சல் பாபு அவர்கள் வரைந்த எ.பி.ஜே அப்துல் கலாமின் படம் வெளியிடப்பட்டது. அவரது வாழ்க்கை வரலாறு ICT ன் உதவியோடு அனைத்து வகுப்புகளிலும் காண்பிக்கப்பட்டது.

பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம்

2018 ஜூலை 31 செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணிக்கு இவ்வருட பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. 150 பெற்றோர்கள் இதில் பங்கேற்றனர். கவுன்சிலர் திருமதி. பிரியா அவர்கள் இப்போதுக்கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. ரஞ்சித் கே.பி அவர்கள் தலைமை தாங்கினார். தலைமையாசிரியை திருமதி. ஷைலஜா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மேலும் அவர் ரிப்போர்ட்டும் வரவு செலவு கணக்குகளும் வாசித்தார். பின்பு இவ்வருட பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டது. திரு. கே.பி ரஞ்சித் அவர்கள் மறுபடியும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராகவும் திரு. சுவாமிநாதன் அவர்கள் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தாய் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவியாக திருமதி. தீபா அவர்களும் துணைத்தலைவியாக திருமதி. லக்ஷ்மி அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.