ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/கணித அறிவியல் சங்கம்/ கணித பணிமனை

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
13:06, 21 നവംബർ 2019-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- 21302 (സംവാദം | സംഭാവനകൾ) (' {| |- | style="background:#F0F8FF; border:4px solid #49dddd; padding:1cm; margin:auto;"| <font size=6><center><u>'''க...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു)
கணித பணிமனை

ആമുഖം

குழந்தைகளில் கணித ஆர்வம் வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒவ்வொரு பள்ளிகளிலும் கணித பணிமனை நடத்தப்படுகிறது. முன் காலங்களில் குழந்தைகளுக்கு பல திறன்கள் அவரவர் வீடுகளிலிருந்தும், விளையாட்டுக்களிலிருந்தும் கிடைக்கும். ஆனால் இன்றோ விளையாட்டுக்கள் குறைந்ததால் கணித வினோதங்கள் வாயிலாக கணித கருத்துக்கள் குழந்தைகளில் கொண்டு சேர்க்க வேண்டியுள்ளது. இதற்கு தேவையான கற்றல் துணைக்கருவிகளை உருவாக்குவதற்காக நவம்பர் 30 ஆம் நாள் கணித பணிமனை நமது பள்ளியில் நடத்தப்பட்டது. இப்பணிமனையில் 6 பெற்றோர்கள், பி.ஆர்.சி கோர்டினேட்டர்களான திருமதி. ஜீனா அவர்களும், திருமதி சுமங்கலா அவர்களும், தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். அனைத்து வகுப்புகளுக்கான கற்றல் துணைக்கருவிகளும் உருவாக்கப்பட்டது. இவையைப் பயன்படுத்தி எவ்வாறு கணிதத்தை எளிமையாகவும், கவர்ச்சிகரமாகவும் கற்பிக்கலாம் என்பதுவும் கலந்துரையாடப்பட்டது. உருவாக்கிய கணித துணைக்கருவிகளின் கண்காட்சியோடு கணிதப் பணிமனை முற்றுப்பெற்றது.

உருவாக்கிய கணிதத் துணைக்கருவிகள்

  • கணித பம்பரம்
  • பாம்பும் ஏணியும்
  • கடிகாரங்கள்
  • இடமதிப்பு அட்டவணை
  • 100 ஆல் பெருக்குவதை எளிமையாக்குவதற்கான சமசதுரங்கள்
  • எண்ணல் எண்கள் கற்பிப்பதற்கான ஸ்ட்ரிப்புகள்
  • எண் மாலை
  • ஆயிரத்திற்கு மேற்பட்ட எண்கள் கற்பதற்கான எண் அட்டைகள் அட்டைகள்
  • கூட்டல், கழித்தல், பெருக்கல் போன்றவை உட்படுத்தி பலவித விளையாட்டுக்கள்
  • 1 முதல் 10000 வரை கற்பதற்கான எண் அட்டைகள், ஈர்க்கில் கட்டுகள்
  • பெருக்கல் கற்பதற்கான ஸ்ட்ரிப்புகள்

* புகைப்படங்கள்