ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/ஒரு குழந்தைக்கு ஒரு பதிப்பு

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
20:36, 15 ജൂൺ 2019-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- 21302 (സംവാദം | സംഭാവനകൾ) (' {| |- | style="background:#e3f5f7; border:2px solid #009900; padding:1cm; margin:auto;"| <font size=5><center><u>'''எ...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു)
எனது பதிப்பு

முகவுரை

இப்பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒரு பதிப்பு என்ற நோக்கத்தோடு எஸ்.ஆர்.ஜி யில் உருப்பெற்ற ஒரு செயல்பாடாகும் எனது பதிப்பு. ஜூன் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை குழந்தைகள் சுயமாக தயாராக்கிய அவர்களது படைப்புகள் இதில் உட்படுத்தலாம். குழந்தைகளது கலைத்திறனையும், படைப்பாற்றல் திறனையும் போற்ற இச்செயல்பாட்டால் முடிகிறது.

லட்சியங்கள்

  • குழந்தைகளின் கலைத்திறன், தனித்திறன் போன்றவற்றை வளர்க்கிறது.
  • புத்தகங்களை சுயமாக வாசிக்கவும், எழுதவும் செய்கின்றனர்.
  • குறிப்புகள் அனைத்தும் எளிய மொழி நடையிலும், சீரானதாகவும் தயாரிக்க உதவுகிறது.

செயல்பாடு

இப்பள்ளியில் பயிலும் ஒவ்வொரு குழந்தைக்கும் சொந்தமாக ஒரு பதிப்பு தயாராக்கல் என்பதே இச்செயல்பாடு. சிறுகதைகள், குட்டிக் கவிதைகள், படம் வரைதல், வாசிப்பு குறிப்பு, சிந்தனை குறிப்பு, விடுகதைகள், வர்ணனை குறிப்புகள், பயணக் குறிப்புகள் போன்றவைகளை பதிப்பில் உட்படுத்தலாம். பிப்ரவரி மாதக் கடைசியில் பதிப்பை வெளியிட தீர்மானித்துள்ளோம். IEDC குழந்தைகளையும் இச்செயல்பாட்டில் உட்படுத்தியுள்ளோம்.

சிறப்பம்சம்

ஒவ்வொரு குழந்தைகளுடையவும் திறமைக்கேற்ற படைப்புகள் மட்டுமே அவரவர் பதிப்பில் உட்பட்டிருக்கும். இச்செயல்பாடு மொழித் திறனை வளர்க்க பெரிதும் உதவுகிறது. மட்டுமின்றி ஓவியத்திறன் உள்ள குழந்தைகளில் ஒளிந்து கிடக்கும் கற்பனைத் திறனும் இதன்மூலம் வெளிக்கொணர முடிகிறது. ஒவ்வொரு வகுப்பின் சிறந்த பதிப்பிற்கு ஊக்கப் பரிசு வழங்கிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.