സെന്റ് പോൾസ്.എച്ച്.എസ്. കൊഴിഞ്ഞാംപാറ/தமிழ் விக்கி/മറ്റ്ക്ലബ്ബുകൾ
- நூலக குழு
- எங்கள் பள்ளியில் 1955 ஆம் ஆண்டு நூல் நிலையம் தொடங்கப்பட்டது.
- நூல் நிலையம் விசாலமாக உள்ளது . இதை வழி நடத்தி செல்பவர் திரு ஷாஜூ ஆசிரியர் ஆவர். இங்கு 1026 புத்தகங்கள் உள்ளன . மலையாள மொழியில் 546 புத்தகங்களும் , தமிழ் மொழியில் 326 புத்தகங்களும் , ஆங்கில மொழியில் 113 புத்தகங்களும் , ஹிந்தியில் 113 புத்தகங்களும் உள்ளன.
- இதன் மூலமாக மாணவர்கள் தங்களது அறிவாற்றலை வளர்த்துக் கொள்கின்றனர், மற்றும் நூலகத்தின் சார்பாக மலையாளம் மற்றும் தமிழ் நாளிதழ்கள் பள்ளிக்கூடத்திற்கு தினமும் வரவழைக்கப்படுகிறது.
- இதன் மூலம் மாணவர்களின் உலக அறிவு , அன்றாட நாட்டு நடப்பு நிகழ்வுகள் மற்றும் அவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க செய்ய மிகவும் உதவுகிறது .
- நூலகத்திலிருந்து புத்தகங்கள் ஒவ்வொரு வகுப்பிற்கும் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன.
- மாணவர்கள் வாசித்தபின் சுழற்சிமுறையில் மற்ற வகுப்புகளுக்கு புத்தகங்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன.
- https://youtu.be/GYU2yc9FMHo
2. உருது குழு
- பள்ளியில் உருதுப் பாடத்திற்கு புதிதாகப் பொறுப்பேற்ற ஜசீல் ஆசிரியர் தலைமையில் வேனிற்காலத்தில் பறவைகளின் தாகம் தீர்ப்பதற்காக மாணவர்கள் சார்பாக தண்ணீர் மரக்கிளைகளில் வைக்கப்பட்டது.
- இதன் காரணமாக ஏராளமான பறவைகள் தங்கள் தாகத்தை தீர்த்துக் கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
- மாணவ- மாணவியர்களின் இந்த செயல் சமூகத்தின் மீதும் சுற்றுப்புறத்தின் மீதும் உள்ள அக்கரையைக் காட்டுகிறது.
அதன் வீடியோவைக் கண்டு களியுங்கள்.