ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /நாட்டுப்புற கலைக்களஞ்சியம்/வட்டாரச்சொற்களும் பொருளும்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്

வட்டாரச்சொற்களும் பொருளும்

ஒவ்வொரு ஊர்களும் அவ்வட்டாரங்களுக்கேற்ப தனித்தன்மையுடன் விளங்கும். சித்தூரிலும் அதன் உட்பிரதேசங்களிலும் சில வட்டார மொழி வழக்குகள் வழங்கி வருகின்றன. சித்தூருக்கே உரித்தான சில வட்டார வழக்குச் சொற்களை காண்போம்.

    1. மூச்சி மரம் = மாமரம்
    2. வன்னர்க்கணு = வந்து விட்டார்
    3. கற்றக்களம் = நெற்கதிர் அறுவடை செய்து போர்அடிக்கும் இடம்
    4. மரிப்பு = மரணம்
    5. கூளன் குட்டி= எருமைக்கன்று
    6. பெரப்புறம் = மேற்கூரை
    7. களயுக = தூக்கி எறிதல்
    8. மாந்து = அரித்தல்
    9. கள = பாழ்ச்செடிகள்
    10. தொகர்த்து = தலை துவட்டும் துண்டு. (துவர்த்தும் முண்டு)
    11. மண்ட = தலை
    12. மோந்து = குடி
    13. முடுக்கு = துரத்துவது
    14. அகிறு = அழுதல்
    15. கண்ணு கடி = பொறாமை படுதல்
    16. மோந்தி = அந்திமாலை (மூவந்தி திரிந்த சொல்)
    17. சொள்ளை = கொசு
    18. கைக்கோட்டு = மண்வெட்டி/தூம்ப
    19. கொடுவாள் = அரிவாள் / மடாள்
    20. சரக்குனு = திடீரென
    21. அலுக்கு பேப்பர் = பிளாஸ்டிக் காகிதம்
    22. கொர = இருமல்
    23. பெலர்ச்சய்க்கு = அதிகாலையில்
    24. அயர்க்க = தோட்டம் சுத்தம் செய்வது
    25. அச்சி = குடும்பத் தலைவி
    26. சொகன்ன = சிவப்பான
    27. வெக்கம் வெக்கம் = சீக்கிரம் சீக்கிரம்
    28. வெட்டம் = வெளிச்சம்
    29. களப்பணி = வயல் வரப்பு திருத்தல்
    30. சேரும்பழம் = முந்திரிப் பழம்
    31. கோலாயி = திண்ணை
    32. செத்தம் = சப்தம்
    33. சாளவீடு = ஓலைக் குடிசை
    34. மொகம் = முகம்
    35. மொகறு = முகம்
    36. மூஞ்சி = முகம்
    37. பெல்லம் = வெல்லம்
    38. பேஜார் = படபடப்பு
    39. வீத்து = ஊற்றுக
    40. மக்காறாக்கு = ஏளனம் செய்வது
    41. கயில் = குழிக்கரண்டி
    42. தடுக்கு = ஓலைப் பாய்
    43. குருவட்டி = ஓலையிலான சிறு கூடை
    44. பெணங்கு = சண்டையிடுதல்
    45. பொற வட்டு = மரப்பட்டை
    46. குற்றியற்று போதல் = தலைமுறை அழிதல்/ நாசமாகிப் போவது
    47. சேறு = சளி
    48. முச்சகிரி = பயனற்ற தேங்காய்
    49. கெணறு = கிணறு
    50. தெங்கும் பட்ட= தென்னை ஓலை
    51. கோச்சாடை= தென்னம்பூ பட்டை
    52. புலங்கெட்ட= புத்தியற்ற
    53. சகட= கிணற்றின் நீர் இறைக்கும் கப்பி
    54. சப்ப = நிலம் துடைக்கும் துணி
    55. கொட்டில் = விவசாயக் கருவிகள் வைக்கும் இடம்
    56. ஈளுங்குச்சி = தென்னங்குச்சி