ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /குழுக்கள்/அறிவியல் குழு/அறிவியல் விந்தை
அறிவியல் விந்தை
நமது பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத்தலைவர் சாமிநாதன் அறிவியல் விந்தை என்னும் இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இது மிகச் சிறப்பான ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. அறிவியல் சோதனைகளைக் குழந்தைகள் சுயமாகவே பெற்றோர்கள் முன்னிலையில் செய்து காண்பித்தனர். ஒவ்வொரு சோதனையின் பெயரும், நோக்கமும், அதற்குத் தேவையான பொருட்களும், செய்யும் முறையையும் குழந்தைகளே விவரித்தனர். குழந்தை பருவத்திலேயே தங்களது குழந்தைகள் அறிவியல் சோதனைகளில் ஆர்வம் கொண்டுள்ளதை எண்ணி மகிழ்ந்தனர். குழந்தைகள் தங்களது பேச்சு வழக்கில் எளிமையாக ஒவ்வொரு சோதனை விளக்கத்தையும் சரியாகச் சொல்லிக் கொடுத்தனர். மேற்படிப்புக்குச் செல்லும்போது அறிவியல் பாடத்தில் அவர்கள் கூடுதல் ஆர்வமுடையவராக மாற இது பெரிதும் உதவும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. நம் குழந்தைகள் உருவாக்கிய குட்டிச் சோதனைகள் என்னும் பதிப்பு வெளியிடப்பட்டது. நம்மை சுற்றியுள்ள அறிவியல் உண்மைகளை உற்றுநோக்கி புரிந்து கொள்வதற்காகவே நமது பள்ளியில் குட்டிச் சோதனைகள் என்னும் செயல்பாடு துவங்கப்பட்டது. காலைக் கூட்டத்தில் 50 நாட்களில் 50 எளிய சோதனைகள் செய்து காண்பித்து, நாங்கள் அனைவரும் அறிவியல் உலகிற்கு கடந்து சென்றோம். இது மிக அருமையான நிகழ்ச்சியாக இருந்தது.