ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2017-18
|
வாசிப்புவார நிறைவு விழாவுடன், மக்களின் எழுத்தாளர் என அறியப்படும் வைக்கம் முகமது பஷீர் அவர்களின் நினைவு தினமும் நடைபெற்றது.இதன் தொடச்சியாக ஜீலை 7 ஆம் தேதி சித்தூரிலுள்ள மலையாள மொழியின் தந்தையான துஞ்சத்து ஆச்சாரியாரின் குருமடம் சென்று வந்தோம்.
இரு வாரவாசிப்பு நிறைவு விழாவினையொட்டி ஜீலை 14 அன்று சித்தூர் துஞ்சன் நினைவு நூலகம் சென்றோம். 4ஆம் வகுப்பு பிள்ளைகளை உட்படுத்திய இப் பயணம் அனைவருக்கும் சிறந்த ஒரு அனுபவமாக அமைந்தது. பலவிதமான துறைகளைச் சார்ந்த சிறந்த புத்தகங்களின் தொகுப்பு இந்த நூலகத்தில் உண்டு... மலையாளம், தமிழ், ஆங்கிலம் போன்ற மொழி நூல்கள் இருந்தன.
ஜூலை 20 அன்று திருமதி. உமாமகேசுவரி அவர்கள் இரண்டு கல்வி அரங்குகளையும் தொடங்கி வைத்தார்.
சந்திர தினமான ஜூலை 21, காலையிலேயே குழந்தைகளுக்கு நிலா தொடர்பான காணொளி காண்பிக்கப்பட்டது. மதியம் சிறுபரிசோதனைகள் செய்தும், நிலா வினைப் பற்றிய பாடல்கள் பாடியும் "அறிவியல் மன்றம் " தொடங்கப்பட்டது. பப்பெட் ஷோ நடைபெற்றது. நீல் ஆம்ஸ்ட்ராங் வேடமணிந்து வந்த மாணவன் அனைவர் கவனத்தையும் ஈர்த்தான்.
2017- 2018 வருடத்தின் பள்ளிபொதுக்குழு ஜூலை 28 மதியம் கூடப்பட்டது. கவுன்சிலர் திரு.சிவகுமார் அவர்கள் தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியை திருமதி.ஷைலஜா அவர்கள் நிகழ்வுப் பதிவை வாசித்ததுடன் முன்வருட வரவு, செலவு கணக்குகளை வாசித்தார். 175 - ற்கும் அதிகமான பெற்றோர்கள் பங்கெடுத்த இக்கூட்டத்தில் புதிய PTA தலைவராக திரு.ரஞ்சித் அவர்கள் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார். PTA துணைத் தலைவராக திரு.சுதாகரன்அவர்களும் MPTA தலைவியாக திருமதி.ஷீபா போன்றோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
|
ஆகஸ்ட் 6 ஹிரோஷிமா தினத்தன்று முத்திரை வாக்கிய அட்டைகளுடன் போர் எதிர்ப்பு ஊர்வலம் நடந்தது. போரின் துன்பங்களை உணர்த்த ஹிரோஷிமா, நாகசாகி சம்பவங்களின் காணொளி காண்பிக்கப்பட்டது. ஆகஸ்ட் 9 அன்று வெள்ளையனே வெளியேறு, உப்பு சத்தியாகிரகம், வாகன் துயரம் போன்றனவும் சுதந்திர தின போராட்டத்தின் முக்கிய சரித்திர நிகழ்வுகளுடையவும் காணொளி காண்பித்தது பிள்ளைகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக மாறியது.
ஆகஸ்ட் 15 , 70 ஆம் சுதந்திர தின விழாவான இன்று 9 மணியளவில் PTA தலைவர் கொடியேற்றி வாழ்த்துரை வழங்கினார். குழந்தைகளின் சுதந்திரதின பதிப்பு வெளியிடப்பட்டது. தேசபக்திப் பாடல்கள் பாடியும், சுதந்திர கும்மியடித்தும் மகிழ்ச்சியான தருணங்களினூடே இவ்விழா கடந்து சென்றது. இனிப்பு வழங்குதலுடன் விழா இனிதே முடிவுற்றது.
|
எல்லா வருடமும் பெற்றோரின் சிறந்த ஒத்துழைப்புடன் நடத்தக் கூடிய ஒரு சுபநிகழ்வு ஓணவிழாவையொட்டின ஓண விருந்து. தாய்மார்கள், ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து விருந்து சமைத்து 500 பேருக்கு மேல் உண்ண அன்னமிடுவோம். இது ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடைபெறுகிறது. ஒவ்வொரு வகுப்பிலும் பூக்களமிட்டும், ஓணப் பாட்டு, திருவாதிரைகளி, சுந்தரிக்கு பொட்டிடு , புலியாட்டம், மகாபலி, வாமன வேடம் அணிதல் என ஒவ்வொரு ஒணத்துக்கும் ஒரே விழாக்கோலம் தான் எங்கள் பள்ளியில். இதற்கு என்றும் எங்களுடன் ஒத்துழைக்கும் பெற்றோர் குழுவுக்கு எங்கள் சிறப்பான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
|
நவம்பர் 14, குழந்தைகள் தினத்தன்று குழந்தைகள் நேரு மாமாவின் வேடமணிந்து காலைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மழலை குழந்தைகளுக்கு முக்கியத்துவமிக்க காலை கூட்டமாக விளங்கியது. நேருஜியின்ஒலிப்பதிவு ஒலிப்பெருக்கி வாயிலாக ஒலிபரப்பப்பட்டது.