ഉള്ളടക്കത്തിലേക്ക് പോവുക

ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2022-23

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
06:39, 25 ജൂലൈ 2022-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- 21302 (സംവാദം | സംഭാവനകൾ) ('==2022 - 23, பள்ளிச் செயல்பாடுகளும் தினக்கொண்டாட்ட...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു)

2022 - 23, பள்ளிச் செயல்பாடுகளும் தினக்கொண்டாட்டங்களும்

ஜூன்

பள்ளி நுழைவுத் திருவிழா- 2022

ஜூன் 1 நுழைவுத் திருவிழா உண்மையிலேயே ஒரு திருவிழாதான். இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, குழந்தைகள் பள்ளிக்கு வருவதால் அவர்களை வரவேற்க குருத்தோலை மற்றும் மாவிலையால் பாரம்பரியமாக அலங்கரிக்கப்பட்டது. காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. பள்ளி முற்றத்தில் செண்டை மேளத்திற்கு ஏற்ப குழந்தைகள் தாளத்துடன் விளையாடுவது ஒரு பண்டிகை சூழலை உருவாக்கியது. குழந்தைகள் கேரளக் கலை வடிவங்களான கதகளி, சாக்கியார் கூத்து, தெய்யம், களரி, மோகினியாட்டம், திருவாதிரை போன்ற வேடங்கள் அணிந்திருந்தனர். செண்டை மேளத்தோடு கேரளக் கலை வடிவ வேடமணிந்த குழந்தைகளும் மற்ற குழந்தைகளும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் அணிக்கோடு வரை ஊர்வலம் சென்று திரும்பினோம். அப்பகுதியிலுள்ள மக்கள் அனைவரும் வியக்கும்படியாக இருந்தது. இது குழந்தைகளுக்கு முற்றிலும் வேறுபட்ட அனுபவமாகவே இருந்தது. காலை 10.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. குழந்தைகளே வரவேற்புரை, வாழ்த்துரை மற்றும் நன்றி உரைகளை வழங்கினர். ஜெயன்ட் சங்க உறுப்பினர்கள் முன் தொடக்க மற்றும் ஒன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு கற்றல் கருவிகள் அடங்கிய பொதிகள் வழங்கினர். சுமார் 200 குழந்தைகளுக்கு பொதிகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு பொதியிலும் ஒரு நோட்புக், பேனா, பென்சில், கட்டர், அழிப்பான், க்ரையோன் போன்றன இருந்தது. துவக்க விழாவில் ஜெயண்ட் குரூப் பிரதிநிதி, சித்தூர் தத்தமங்கலம் நகரசபை தலைவி கவிதா, கல்வி நிலைக்குழு தலைவி கே.சுமதி, வார்டு உறுப்பினர் ஸ்ரீதேவி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் எம்.சுவாமிநாதன், எம்பிடிஏ தலைவி பினி, தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரண்டாம் வகுப்பின் கல்வியியல் மாஸ்டர் பிளானை தலைவர் துவக்கி வைத்தார். குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. குழந்தைகளது கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 4-ம் வகுப்பு மாணவி தேவஸ்ரீயின் மோகினியாட்டம் குறிப்பிடத்தக்கது. பாட புத்தகங்களும் வழங்கப்பட்டன. கோவிட் விடுமுறைக்குப் பின் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான நுழைவுத் திருவிழா மிக பிரம்மாண்டமாகவே நடத்தப்பட்டது.