நமது பள்ளியிலுள்ள குழந்தைகள் அனைவரும் ஒரேமாதிரியான வசதிவாய்ப்புகள் உடையவர்களல்லர். பலரும் பல இடர்களிலிருந்து வருகின்றவர்களே. பணத்திற்காக கஷ்டப்படுபவர்களே. வறுமையில் வாடுகின்றவர்களே. உயிர் வாழ்வதற்குக் கூட கஷ்டப்படுபவர்களும் உண்டு. அப்படிப்பட்ட ஒரு குழந்தையைக் கண்டுபிடித்து உதவுவது என்ற நோக்கத்தோடு துவங்கப்பட்டதே ஆறுதல் பெட்டி என்னும் செயல்பாடாகும். அனைத்து குழந்தைகளும் இச்செயல்பாட்டில் ஈடுபடச்செய்து, மற்றுள்ளவர்களுக்கு உதவுவது நம் ஒவ்வொருவருடையவும் கடமையாகும் என்பதை குழந்தைகளுக்கு அறிவிக்க இந்த ஆறுதல் பெட்டிக்கு முடிகின்றது. நாங்கள் கடந்த இரண்டு வருடங்களாக இச்செயல்பாட்டைச் சிறப்பாக நிறைவேற்றி வருகின்றோம் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
நோக்கம்
சமூகத்தில் வறுமையில் வாடிக் கிடப்பவர்களுக்கு உதவ வேண்டும் என்னும் நோக்கத்தோடு துவங்கப்பட்டதே ஆறுதல் பெட்டி.
சிறுவயதிலே உதவும் மனப்பான்மை குழந்தைகளிடம் வளர்க்க இச்செயல்பாட்டால் முடிகிறது.
செயல்பாடு
அனைத்து வகுப்புகளிலும் ஒவ்வொரு ஆறுதல் பெட்டிகள் பாதுகாக்கவும், தினந்தோறும் குழந்தைகள் அவர்களால் முடிந்த நாணயங்களோ, ரூபாய் நோட்டுக்களோ அதில் போடுகின்றனர். இவ்வாறு சேமிக்கப்பட்ட பணம் வருடக் கடைசியில் எண்ணித் திட்டப்படுத்துகின்றோம். இதனை வறுமையால் அதிகம் துன்பப்படுகின்ற குழந்தைக்கு நன்கொடையாக வழங்குகின்றோம். குழந்தைகளோடு சேர்ந்து ஆசிரியர்களும் நன்கொடை வழங்குவதுண்டு.