ഉള്ളടക്കത്തിലേക്ക് പോവുക

ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2017-18

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
19:47, 6 ഡിസംബർ 2019-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- 21302 (സംവാദം | സംഭാവനകൾ) ('<font size=6><center><u>'''''2017-18 கல்வி ஆண்டின் செயல்பாடுகளும், த...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു)
2017-18 கல்வி ஆண்டின் செயல்பாடுகளும், தினக் கொண்டாட்டங்களும்

ஜூன்

நுழைவுத் திருவிழா

2017 -18 கல்வி ஆண்டின் முதல் நாளான ஜூன் 1- பல்வேறு நிகழ்வுகளுடன் இனிதே தொடங்கியது. வண்ண பலூன்களை கையிலேந்திய வண்ணம் குழந்தைகளும் பெற்றோரும் இன்முகத்துடன் மகிழ்ச்சி பொங்க காட்சியளித்தனர். தலைமையாசிரியர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். PTA தலைவர் சிறப்புரையாற்றினார். வார்டு கவுன்சிலர் திரு.சிவகுமார் அவர்கள் நுழைவுத் திருவிழாவை இனிதே தொடங்கி வைத்தார். வார்டு கவுன்சிலர் திரு.மணிகண்டன், PTA துணைத் தலைவர் திரு.சுதாகரன் போன்றோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவர்களுக்கு சீருடை, பாடப்புத்தகம் போன்றன வழங்கப்பட்டது. புதிய மாணாக்கருக்கு கையேடு, பென்சில், செதுக்கி ,அழிப்பான் போன்றன அடங்கிய பை இலவசமாய் அளிக்கப்பட்டது.

உலக சுற்றுச் சூழல் தினம்

வழக்கமான முறையில் இவ்வருடமும் ஜூன் 5 பல்வேறு நிகழ்வுகளோடு கொண்டாடப்பட்டது. மாணாக்கர் முத்திரை வாக்கிய அட்டைகளோடு ஊர்வலம் சென்றனர். பதிப்பு, சுவரொட்டி போன்றனவும் தயாரிக்கப்பட்டது. குறுநாடகம், வினாடிப் வினா போட்டி போன்றனவும் நடந்தேறியது. பல்லுயிரியல் பூங்கா உருவாக்கி, மரக்கன்றுகள் நடப்பட்டன. சுற்றுச்சூழல் ஆர்வலர் திரு.குஞ்ஞுகுஞ்ஞு என்பவர் இந்நிகழ்வுகளுக்கு தலைமை வகித்தார். இயற்கை வேளாண்மை குறித்தும், பயன்படாத குப்பிகளில் செடி வளர்க்கும் முறை பற்றியும், சொட்டு நீர் பாசனம் பற்றியும் விளக்கமளித்தார். விதைகளை விதைத்தும், கன்றுகள் நட்டும் இந்நாள் சிறப்பாக கடந்து போனது.

வாசிப்பு வாரம்

ஜூன் 19 வாசிப்பு வாரம் இருவார வாசிப்பு விழாவாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. வார்டு கவுன்சிலர் திருமதி . கவிதா அவர்கள் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து " எனது வாணி" என்ற பள்ளிக்கூட வானொலி நிகழ்வு, நடந்தேறியது. வகுப்பறை நூலகங்கள் விரிவுபடுத்தப்பட்டது. கதை எழுதுதல், கவிதை எழுதுதல், வினாடி வினா நிகழ்ச்சி, சுவரொட்டி தயாரித்தல், வாசிப்பு போட்டி, கையெழுத்து போட்டி போன்றன நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது. வைக்கம் முகம்மது பஷீர் அவர்களின்ஒரு சில நூல்களில் வரும் கதாபாத்திரங்களை மாணவர்கள் வேடமிட்டு நடித்துக் காட்டினர்.

யோகா தினம்

யோகா செய்வதனால் ஏற்படும் நன்மைகள், யோகாவின் முக்கியத்துவம் போன்றவற்றை அனைவருக்கும் புரியும் வகையில் கூறி திரு.சுனில் அவர்கள் ஜூன் 21 அகில உலக யோகா தினத்தைத் தொடங்கி வைத்தார் . வாரத்தில் 2 நாட்கள் யோகா வகுப்புகள் நம் பள்ளியில் நடக்கிறது. 3, 4 வகுப்பிலுள்ள பிள்ளைகளைக்கு மட்டுமே யோகா வகுப்புகள் உள்ளன.