ഉള്ളടക്കത്തിലേക്ക് പോവുക

ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /ELA

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
15:25, 10 ഏപ്രിൽ 2023-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- 21302 (സംവാദം | സംഭാവനകൾ) ('<font size=6><u><center>'''இல (ELA)'''</center></u></font> ==கற்றலுக்கு ஒரு நிழல்== 2022-23 கல்வியாண்டில் சமக்ரா ஷிக்ஷா கேரளாவால் செயல்படுத்தப்பட்ட ஒரு சிறப்புத் திட்டமாகும் இல (ELA- Enhancing Learning Ambiance மேம்பட...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു)
இல (ELA)

கற்றலுக்கு ஒரு நிழல்

2022-23 கல்வியாண்டில் சமக்ரா ஷிக்ஷா கேரளாவால் செயல்படுத்தப்பட்ட ஒரு சிறப்புத் திட்டமாகும் இல (ELA- Enhancing Learning Ambiance மேம்படுத்தும் கற்றல் சூழல்). இந்த திட்டம் 4 மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவிட் காலத்திற்குப் பிறகு குழந்தைகளின் கற்றலில் உள்ள இடைவெளியைக் குறைத்தல் மற்றும் அறிவை மெருகூட்டும் கற்றல் செயல்பாடுகளை திரும்பப் பெறுதல் ஆகிய இலக்குகளை மனதில் கொண்டு தொகுக்கப்பட்ட ஒரு சிறப்புத் திட்டமே இலா. தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்பாடுகளில் என்னவெல்லாம் நடவடிக்கைகள் மேற்கொள்வது என BRC உதவியுடன் SRG கூட்டத்தில் கலந்துரையாடி முடிவு செய்யப்பட்டது. மலையாளம் மற்றும் சுற்றுச்சூழல் பாடங்களில் வேறுபட்ட செயல்பாடுகள் திட்டமிடப்பட்டன. இதன் ஒரு பகுதியாக கதை, கவிதை அரங்கு, வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பார்வையிடுதல், அறிவியல் சோதனைகள், களப் பயணங்கள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டது.

அறிவியல் விந்தைகள்

ELA வின் முதல் செயல்பாடு பிப்ரவரி 2, 2023 வியாழக்கிழமை அன்று காலை 10:30 மணிக்கு நடைபெற்றது. ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சி.பி.சுனந்தன் குழந்தைகளுக்கு அறிவியல் வகுப்பெடுத்தார். வானவில் பற்றிய சுவாரசியமான கதையின் மூலம், நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு பொருளும் அறிவியல் சோதனைகளுக்கு ஏற்றது என்பதை தெளிவுபடுத்தினார். கண்ணாடி, தண்ணீர், காகிதம், துணி போன்ற பொருட்களைப் பயன்படுத்தி நீர் மற்றும் காற்று தொடர்பான பரிசோதனைகள் நடத்தி அறிவியல் அதிசயங்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சிக்கு பிடிஏ தலைவர் மோகன்தாஸ் தலைமை வகித்தார். நகராட்சிக் கல்வி நிலைக்குழுத் தலைவி கே.சுமதி முன்னிலை வகித்தார். பிஆர்சி பயிற்சியாளர் கிருஷ்ணமூர்த்தி, சிஆர்சி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீஜா, பிடிஏ துணைத் தலைவர் ஜி.சுகதன், எஸ்எம்சி தலைவர் ரஞ்சித், தலைமையாசிரியை பொறுப்பாளர் சுனிதா, எஸ்ஆர்ஜி கன்வீனர் ஸ்ரீஜா உள்ளிட்டோர் பேசினர். இதைப்போலவே குழந்தைகள் காலை க் கூட்டத்தில் சோதனைகளைத் தொடர்ந்து நடத்தி, சோதனைக் குறிப்புகள் எழுதி வருகின்றார்.