ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /குழுக்கள்/வித்யாரங்கம்
സ്കൂൾ | സൗകര്യങ്ങൾ | പ്രവർത്തനങ്ങൾ | ക്ലബ്ബുകൾ | ചരിത്രം | അംഗീകാരം |
வித்யாரங்கம்
வித்யாரங்கம் இலக்கியமன்றச் செயல்பாடுகள் இப்பள்ளியில் மிகவும் விமரிசையாக நடந்து வருகிறது. பாடப்புத்தகச் செயல்பாடுகளும், முக்கிய தினக்கொண்டாட்டங்களும் உட்படுத்தி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தலைப்பில் செயல்பாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. வித்யரங்கம் செயல்பாடுகள் SRG மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் திட்டமிடப்படுவதுண்டு.
நோக்கம்
- மாணவர்களின் படைப்புத்திறன், கலைத்திறன் போன்றவற்றைத் தூண்டி வளர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
- எல்லாக் குழந்தைகளையும் வித்யாரங்கம் இலக்கிய மன்றத்தின் செயல்பாடுகளில் பங்கெடுக்க வைத்தல்.
- குழந்தைகள் திறமை, ஆர்வம் போன்றவை அதிகரிக்கிறது.
செயல்பாடுகள்
- ஒவ்வொரு மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமைகளில் சிறுவர் சபை கூடுவதுண்டு.
- கதைகள், கவிதைகள், விடுகதைகள், ஓவியம், புத்தக அறிமுகம், நாடகம் போன்ற நிகழ்ச்சிகளை மாணவர்கள் அரங்கேற்றுவதுண்டு.
- தினவிழாக்கள் தொடர்பாக பொம்மை நாடகங்கள் நடத்திக் காண்பிப்பதுண்டு.
- செப்டம்பர் மாதம் ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு கையெழுத்து பதிப்பு வெளியிடவும் செய்வர்.
- பள்ளி அளவில் கதைக்குழு, கவிதைக் குழு, நாட்டுப்புறப்பாடல் குழு, ஓவியக் குழு, நாடகக்குழு போன்ற ஐந்து கலைக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வேறுபட்ட நிகழ்வுகளுக்கு துவக்கமிடப்பட்டது.
- ஓவியம், நாட்டுப்புறப் பாடல், நாடகம் போன்றவற்றிற்கு ஒரு பணிமனை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.