ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /குழுக்கள்/வித்யாரங்கம்/நடிப்புக்கூட்டம்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്

நடிப்புக்கூட்டம்

அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளியில் நடிக்கும் திறனுள்ள குழந்தைகளை கண்டுபிடித்து, அவர்களை ஒன்றுசேர்த்து நடிப்புக்கூட்டம் உருவாக்கப்பட்டது. இக்கூட்டத்தை பள்ளியின் நடிப்புத் திறன் மிகுந்த ஆசிரியையான சுப்ரபா தொடங்கிவைத்தார். நல்ல ஒரு கதாபாத்திரத்தை நடித்துக் காண்பித்து இக்கூட்டத்தினைத் தொடங்கி வைத்தார். எந்த ஒரு கதாபாத்திரத்தை நடித்துக் காட்டும் பொழுதும் முழுமையாக உட்கொண்டு அந்த கதாபாத்திரமாக மாற வேண்டும் என்று அவர் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். சில நல்ல கதாபாத்திரங்களின் காணொளி காண்பிக்கப்பட்டது. நடிப்புக் கலையில் முகபாவம் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்று சுப்ரபா கூறினார். பின்பு குழந்தைகளைக் குழுக்களாக்கி சிறிய நிகழ்ச்சிகள் நடித்துக் காட்ட வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. குழந்தைகள் நல்ல முறையில் நடித்து, அவர்களது நடிப்பு திறனை வெளிக்காட்டினர். நடிக்கும் திறன்படைத்த குழந்தைகளைக் கண்டறிவதற்கும் அவர்களை பாராட்டுவதற்குமுள்ள ஒரு மிகச்சிறந்த இடமே நடிப்புக்கூட்டம். ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் ஏற்று, ஒன்றி நடிப்பவர்களுக்கு மட்டுமே நல்ல நடிகர்களாக முடியும் என்று ஆசிரியர் கூறினார்.