"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2017-18" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
|||
| വരി 72: | വരി 72: | ||
<font size=3>வாசிப்புவார நிறைவு விழாவுடன், மக்களின் எழுத்தாளர் என அறியப்படும் வைக்கம் முகமது பஷீர் அவர்களின் நினைவு தினமும் நடைபெற்றது.இதன் தொடச்சியாக ஜீலை 7 ஆம் தேதி சித்தூரிலுள்ள மலையாள மொழியின் தந்தையான துஞ்சத்து ஆச்சாரியாரின் குருமடம் சென்று வந்தோம்.</font> | <font size=3>வாசிப்புவார நிறைவு விழாவுடன், மக்களின் எழுத்தாளர் என அறியப்படும் வைக்கம் முகமது பஷீர் அவர்களின் நினைவு தினமும் நடைபெற்றது.இதன் தொடச்சியாக ஜீலை 7 ஆம் தேதி சித்தூரிலுள்ள மலையாள மொழியின் தந்தையான துஞ்சத்து ஆச்சாரியாரின் குருமடம் சென்று வந்தோம்.</font> | ||
<div style="border-top:0px solid #00FF00; border-bottom:2px solid #00FF00;text-align:left;"><font size=5>''' | <div style="border-top:0px solid #00FF00; border-bottom:2px solid #00FF00;text-align:left;"><font size=5>'''இரு வாரவாசிப்பு விழா'''</font></div> | ||
<center> | <center> | ||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
| വരി 81: | വരി 81: | ||
|}</center> | |}</center> | ||
<font size=3>இரு வாரவாசிப்பு நிறைவு விழாவினையொட்டி ஜீலை 14 அன்று சித்தூர் துஞ்சன் நினைவு நூலகம் சென்றோம். 4ஆம் வகுப்பு பிள்ளைகளை உட்படுத்திய | <font size=3>இரு வாரவாசிப்பு நிறைவு விழாவினையொட்டி ஜீலை 14 அன்று சித்தூர் துஞ்சன் நினைவு நூலகம் சென்றோம். 4ஆம் வகுப்பு பிள்ளைகளை உட்படுத்திய இப்பயணம் அனைவருக்கும் சிறந்த ஒரு அனுபவமாக அமைந்தது. பலவிதமான துறைகளைச் சார்ந்த சிறந்த புத்தகங்களின் தொகுப்பு இந்த நூலகத்தில் உண்டு... மலையாளம், தமிழ், ஆங்கிலம் போன்ற மொழி நூல்கள் இருந்தன.</font> | ||
<div style="border-top:0px solid #00FF00; border-bottom:2px solid #00FF00;text-align:left;"><font size=5>'''வித்யாரங்கம், மலையாளஅரங்கு தொடக்கம்'''</font></div> | <div style="border-top:0px solid #00FF00; border-bottom:2px solid #00FF00;text-align:left;"><font size=5>'''வித்யாரங்கம், மலையாளஅரங்கு தொடக்கம்'''</font></div> | ||
16:52, 17 ഡിസംബർ 2019-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
|
வாசிப்புவார நிறைவு விழாவுடன், மக்களின் எழுத்தாளர் என அறியப்படும் வைக்கம் முகமது பஷீர் அவர்களின் நினைவு தினமும் நடைபெற்றது.இதன் தொடச்சியாக ஜீலை 7 ஆம் தேதி சித்தூரிலுள்ள மலையாள மொழியின் தந்தையான துஞ்சத்து ஆச்சாரியாரின் குருமடம் சென்று வந்தோம்.
இரு வாரவாசிப்பு நிறைவு விழாவினையொட்டி ஜீலை 14 அன்று சித்தூர் துஞ்சன் நினைவு நூலகம் சென்றோம். 4ஆம் வகுப்பு பிள்ளைகளை உட்படுத்திய இப்பயணம் அனைவருக்கும் சிறந்த ஒரு அனுபவமாக அமைந்தது. பலவிதமான துறைகளைச் சார்ந்த சிறந்த புத்தகங்களின் தொகுப்பு இந்த நூலகத்தில் உண்டு... மலையாளம், தமிழ், ஆங்கிலம் போன்ற மொழி நூல்கள் இருந்தன.
ஜூலை 20 அன்று திருமதி. உமாமகேசுவரி அவர்கள் இரண்டு கல்வி அரங்குகளையும் தொடங்கி வைத்தார்.
சந்திர தினமான ஜூலை 21, காலையிலேயே குழந்தைகளுக்கு நிலா தொடர்பான காணொளி காண்பிக்கப்பட்டது. மதியம் சிறுபரிசோதனைகள் செய்தும், நிலா வினைப் பற்றிய பாடல்கள் பாடியும் "அறிவியல் மன்றம் " தொடங்கப்பட்டது. பப்பெட் ஷோ நடைபெற்றது. நீல் ஆம்ஸ்ட்ராங் வேடமணிந்து வந்த மாணவன் அனைவர் கவனத்தையும் ஈர்த்தான்.
2017- 2018 வருடத்தின் பள்ளிபொதுக்குழு ஜூலை 28 மதியம் கூடப்பட்டது. கவுன்சிலர் திரு.சிவகுமார் அவர்கள் தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியை திருமதி.ஷைலஜா அவர்கள் நிகழ்வுப் பதிவை வாசித்ததுடன் முன்வருட வரவு, செலவு கணக்குகளை வாசித்தார். 175 - ற்கும் அதிகமான பெற்றோர்கள் பங்கெடுத்த இக்கூட்டத்தில் புதிய PTA தலைவராக திரு.ரஞ்சித் அவர்கள் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார். PTA துணைத் தலைவராக திரு.சுதாகரன்அவர்களும் MPTA தலைவியாக திருமதி.ஷீபா போன்றோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
|
ஆகஸ்ட் 6 ஹிரோஷிமா தினத்தன்று முத்திரை வாக்கிய அட்டைகளுடன் போர் எதிர்ப்பு ஊர்வலம் நடந்தது. போரின் துன்பங்களை உணர்த்த ஹிரோஷிமா, நாகசாகி சம்பவங்களின் காணொளி காண்பிக்கப்பட்டது. ஆகஸ்ட் 9 அன்று வெள்ளையனே வெளியேறு, உப்பு சத்தியாகிரகம், வாகன் துயரம் போன்றனவும் சுதந்திர தின போராட்டத்தின் முக்கிய சரித்திர நிகழ்வுகளுடையவும் காணொளி காண்பித்தது பிள்ளைகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக மாறியது.
ஆகஸ்ட் 15 , 70 ஆம் சுதந்திர தின விழாவான இன்று 9 மணியளவில் PTA தலைவர் கொடியேற்றி வாழ்த்துரை வழங்கினார். குழந்தைகளின் சுதந்திரதின பதிப்பு வெளியிடப்பட்டது. தேசபக்திப் பாடல்கள் பாடியும், சுதந்திர கும்மியடித்தும் மகிழ்ச்சியான தருணங்களினூடே இவ்விழா கடந்து சென்றது. இனிப்பு வழங்குதலுடன் விழா இனிதே முடிவுற்றது.
|
எல்லா வருடமும் பெற்றோரின் சிறந்த ஒத்துழைப்புடன் நடத்தக் கூடிய ஒரு சுபநிகழ்வு ஓணவிழாவையொட்டின ஓண விருந்து. தாய்மார்கள், ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து விருந்து சமைத்து 500 பேருக்கு மேல் உண்ண அன்னமிடுவோம். இது ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடைபெறுகிறது. ஒவ்வொரு வகுப்பிலும் பூக்களமிட்டும், ஓணப் பாட்டு, திருவாதிரைகளி, சுந்தரிக்கு பொட்டிடு , புலியாட்டம், மகாபலி, வாமன வேடம் அணிதல் என ஒவ்வொரு ஒணத்துக்கும் ஒரே விழாக்கோலம் தான் எங்கள் பள்ளியில். இதற்கு என்றும் எங்களுடன் ஒத்துழைக்கும் பெற்றோர் குழுவுக்கு எங்கள் சிறப்பான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
|
பள்ளி விளையாட்டுப் போட்டி அக்டோபர் 9ஆம் தேதி நடத்தப்பட்டது. மிக உற்சாகத்தோடு அனைத்து குழந்தைகளும் 50 மீட்டர், 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்ற போட்டிகளில் பங்கெடுத்தனர். இதிலிருந்து உபமாவட்ட விளையாட்டுப் போட்டிக்காக குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான பயிற்சிகளும் கொடுக்கப்பட்டது. உபமாவட்ட விளையாட்டு போட்டி கஞ்சிக்கோடு அசீசி பள்ளியில் வைத்து அக்டோபர் 10ஆம் தேதி நடந்தது. நமது பள்ளியிலிருந்து 19 குழந்தைகள் பங்கேற்றனர்.
பள்ளிக் கலைவிழா 20, 21 தேதிகளில் நடந்தது. 20-ஆம் தேதி கூடுதல் போட்டிகள் நடைபெற்றன. 21ஆம் தேதி தமிழ் கலை விழா நடந்தது. உபமாவட்ட கலை விழாவிற்காக ஓவியப்போட்டி, கர்நாடக சங்கீதம், கவிதை மொழிதல், கதை சொல்லுதல், மெல்லிசை போன்ற போட்டிகளில் குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான பயிற்சியும் கொடுக்கப்பட்டது.
பள்ளி கைவேலைப் போட்டிகள் செப்டம்பர் ஒன்பதாம் தேதி நடத்தப்பட்டது. களிமண் உருவம் செய்தல், ஊதுபத்தி தயாரித்தல், ஃபேப்ரிக் பெயிண்டிங், உபயோகமற்ற பொருட்களை கொண்டு உபயோகமுள்ள பொருட்கள் தயாரித்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. குழந்தைகளும் தேர்வு செய்யப்பட்டது. அவர்களுக்கான பயிற்சியும் கொடுக்கப்பட்டது. அறிவியல், சமூக அறிவியல் ,கணித அறிவியல் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டது. முதலிடம் இரண்டாவது இடம் பெற்ற குழந்தைகளைக் கண்டறிந்தோம். உபமாவட்ட அறிவியல் விழா அக்டோபர் 25, 26, 27 தேதிகளில் தூய சின்னப்பர் மேல்நிலைப்பள்ளி கொழிஞ்சாம்பாறையில் நடத்தப்பட்டது. கைவினைப்பொருட்கள் செய்தல், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் போன்ற விழாக்களில் குழந்தைகள் நல்ல முறையில் பங்கேற்று பரிசு பெற்றனர். பேப்ரிக் பெயிண்டிங்கில் ஆஷ்ணா. எஸ், அறிவியல் சார்ட்டில் அபிநந்தன், நந்தனா, சமூக அறிவியல் சார்ட்டில் ஜிதின், விஷால், அறிவியல் சோதனைப் போட்டியில் லக்ஷ்மி, ஆர்யா, சாக்(எழுதுகோல்) தயாரித்தலில் மதுமிதா, எம்ப்ராய்டரியில் தாரா ரமேஷ் போன்றோர் பங்கேற்று பரிசுகளும் வென்றனர். மாவட்டதல அறிவியல் சார்ட் போட்டியில் அபினந்த்' நந்தனா என்பவர்களும் பேப்ரிக் பெயின்டிங் போட்டியில் ஆஷ்ணாவும் முதலிடமும் பெற்றனர்.
மாதிரி வகுப்புதல பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் நமது பள்ளியில் நல்ல முறையில் நடந்தது. ஓணத்தேர்வில் குழந்தைகள் பெற்ற தரம் பெற்றோர்களுடன் கலந்துரையாடப்பட்டது. பெற்றோர்கள் குழந்தைகளுடைய கற்றல் முன்னேற்ற படிவத்தில் கையெழுத்திட்டனர். பெற்றோர்களுக்கான அழைப்பிதழ் தயாராக்கியது குழந்தைகளே என்பது குறிப்பிடத்தக்கது.BPO திரு. மனு சந்திரன் அவர்களும், பிஆர்சி கோர்டினேட்டர் திரு. முரளி அவர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். குழந்தைகளின் கற்றல் தரம் ஃப்ளோசார்ட்டாக ப்ரொஜெக்டர் வழி காண்பிக்கப்பட்டது. அனைத்து வகுப்புகளிலும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் நடத்தப்பட்டது. குழந்தைகள் பலவிதமான கலைநிகழ்ச்சிகளையும் நிகழ்த்தினர்.
|
நவம்பர் 14, குழந்தைகள் தினத்தன்று குழந்தைகள் நேரு மாமாவின் வேடமணிந்து காலைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மழலை குழந்தைகளுக்கு முக்கியத்துவமிக்க காலை கூட்டமாக விளங்கியது. நேருஜியின்ஒலிப்பதிவு ஒலிப்பெருக்கி வாயிலாக ஒலிபரப்பப்பட்டது.
நமது பள்ளியினை பைலட் பள்ளியாக அரசாங்கம் தேர்வு செய்துள்ளது. சித்தூர் உப மாவட்டத்தின் ஒரே ஒரு பைலட் பள்ளி பதவி பெற்ற பள்ளி தான் நமது ஜி.வி.எல்.பி.பள்ளி சித்தூர் .இதன் வாயிலாக 10 மடிக்கணினியும், 4 ஒளி பெருக்கியும் தந்தனர். IT பயிற்சி வகுப்புகள் அளித்து ஆசிரியர்களுக்கு புத்துணர்வூட்டியும், இதனை குழந்தைகளுக்கு கற்பித்து புதிய தலைமுறையினருக்கு ஆர்வமளித்தும் வருகிறோம். மதியம் நவம்பர் 17 மதியம் 2 மணியளவில் இதன் திறப்பு விழா நடைபெற்றது. ஜில்லா பஞ்சாயத்து நிலைக்குழு அங்கமான திருமதி.பினுமோள் இதை தொடங்கி வைத்தார்.
மேம்படுத்தப்பட்ட பள்ளி நூலகம் அதிக புத்தகங்களடக்கி புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. நகரசபை செயர்மேன் திரு.திருவேங்கிடம் அவர்கள் நவம்பர் 17ஆம் தேதி பள்ளி தலைவி. மாணவி .ஆஷ்ணாவுக்கு முதல் புத்தகத்தை வழங்கினார்.
நவம்பர் 21,22, 23, 24, தேதிகளில் நடைபெற்ற உபமாவட்ட கலை விழா நமது பள்ளியில் இனிதே அரங்கேறியது. பள்ளிக்கூடம் முழுதும் திருவிழா போல தோன்றிய தருணங்களாயின இந்நாட்கள். பென்சில் டிராயிங், மலையாளம் செய்யுள், வாட்டர் கலர், தேச பக்திப் பாடல், பேச்சுப் போட்டி, தமிழ் கதை சொல்லுதல் போன்ற போட்டிகளில் முதல் பரிசு பெற்றதோடல்லாமல் சிறந்த அரசு பள்ளிக்கான முதல் பரிசும் தட்டிச் சென்றது. உபமாவட்ட அளவில் LP பள்ளிகளில் இரண்டாமிடம் பெற்று வெற்றி பெற்றது. இவ்வெற்றிக்கனியை தந்த போட்டியாளர்களுக்கு உளமார்ந்த நன்றியும், பாராட்டுகளும்.
|
|
ஜனவரி 27 ஆம் தேதி கல்விச் சுற்றுலா சென்றோம். 65 குழந்தைகளும் ஆசிரியர்களும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் மிகவும் உற்சாகத்துடனும் ஆரவாரத்துடனும் நல்லமுறையில் சென்றோம். பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. வரும் காலங்களிலும் இந்த ஒத்துழைப்பு தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். பீச்சி அணைக்கட்டு, அருங்காட்சியகம், மிருகக்காட்சிசாலை, பிளவர் ஷோ, சினேகதீரம் கடற்கரை என்னும் இடங்களுக்கு சென்றோம். பலவிதமான பூக்களையுடைய திருவிழா குழந்தைகளை வியப்பூட்டியது.
இத்தினத்தில் காந்திஜியை நினைவுபடுத்தப்பட்டது. மௌன பிரார்த்தனைக்கு பிறகு தொழுநோய் நிவாரண உறுதிமொழி சொல்லிக்கொடுத்து குழந்தைகளையும் சொல்ல வைக்கப்பட்டது.
ஜனவரி 31ஆம் தேதி 152 வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய அபூர்வ சந்திர கிரகணம் ப்ரொஜெக்டர் மூலம் குழந்தைகளுக்கு காண்பிக்கப்பட்டது. இந்த வானவேடிக்கை குழந்தைகளை ஆச்சரியப்படுத்தியது.