"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2025-26" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |
||
| വരി 50: | വരി 50: | ||
|- | |- | ||
|} | |} | ||
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பதை நினைவூட்டும் வகையில், ஜூன் 21 அன்று யோக தினம் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியை ஏ. தீபாவின் தலைமையில் ஆசிரியர்களும் மாணவர்களும் யோக ஆசனங்களைப் பயிற்சி செய்தனர். எளிய யோகப் பயிற்சிகள் உடலுக்கும் மனதுக்கும் உற்சாகத்தையும் ஆரோக்கியத்தையும் அளிக்கும் என்று தீபா ஆசிரியர் குழந்தைகளுக்கு எடுத்துரைத்தார். உடல் நலத்தைப் பேணுவதில் யோகாவின் முக்கியத்துவத்தை உணரச் செய்யும் விதமாக இந்த தின விழா அமைந்தது. | |||
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=vL0vv4V7Kng '''யோகா தினம் - 2025'''] | * வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=vL0vv4V7Kng '''யோகா தினம் - 2025'''] | ||
| വരി 62: | വരി 64: | ||
நாட்டையே விழுங்கக்கூடிய பேராபத்தை எதிரிட, போதையின் சங்கிலியை உடைத்து எறிந்து முன்னேற மாணவர்கள் தயாராக வேண்டும் என்பதற்காக, போதைப்பொருள் ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது. காலைக் கூட்டத்தில் மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி கூறினர். போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு செய்திகளும் படங்களும் அடங்கிய மாணவர்கள் உருவாக்கிய போஸ்டர்கள் பள்ளியில் காட்சிக்கு வைக்கப்பட்டன. போதைப் பொருளுக்கு எதிரான மனநிலையை உறுதிப்படுத்த விளையாட்டு பயிற்சியின் தலைமையில் “சும்பநடனம்” என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நமது முதலமைச்சர் பிணராய் விஜயனின் போதைப்பொருள் ஒழிப்பு தின அறிக்கையின் வீடியோவும் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. | நாட்டையே விழுங்கக்கூடிய பேராபத்தை எதிரிட, போதையின் சங்கிலியை உடைத்து எறிந்து முன்னேற மாணவர்கள் தயாராக வேண்டும் என்பதற்காக, போதைப்பொருள் ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது. காலைக் கூட்டத்தில் மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி கூறினர். போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு செய்திகளும் படங்களும் அடங்கிய மாணவர்கள் உருவாக்கிய போஸ்டர்கள் பள்ளியில் காட்சிக்கு வைக்கப்பட்டன. போதைப் பொருளுக்கு எதிரான மனநிலையை உறுதிப்படுத்த விளையாட்டு பயிற்சியின் தலைமையில் “சும்பநடனம்” என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நமது முதலமைச்சர் பிணராய் விஜயனின் போதைப்பொருள் ஒழிப்பு தின அறிக்கையின் வீடியோவும் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. | ||
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=YeFAUn7cubI '''போதைப்பொருள் எதிர்ப்பு தினம் - 2025'''] | * வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=YeFAUn7cubI '''போதைப்பொருள் எதிர்ப்பு தினம் - 2025'''] | ||
==ஜூலை== | |||
===பஷீர் தினம்=== | |||
மலையாள இலக்கியத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீரின் நினைவுநாளான ஜூலை 5 ஆம் தேதி, குழந்தைகள் பஷீரின் கதாபாத்திரங்களாக வேடமணிந்து பள்ளிக்கு வந்தனர். பஷீரின் படைப்புகளும் வாழ்க்கையும் தொடர்பான உரைகள், புத்தக அறிமுகம், கதை வாசிப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. | |||
===சந்திர தினம்=== | |||
மனிதன் சந்திரனில் காலடி வைத்தது நினைவுகூரும் வகையில், இவ்வாண்டும் ஜூலை 21 ஆம் நாள் 56ஆவது சந்திர தினம் கொண்டாடப்பட்டது. விளக்கப்படங்கள், பாடல்கள், நிலாப்பாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குழந்தைகள் தயாரித்த ராக்கெட், சூரிய குடும்ப மாதிரிகள் ஆகியவற்றைக் கொண்ட கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், சந்திரயான்–3 தொடர்பான வீடியோக் காட்சி மற்றும் வினாடி வினா போட்டிகள் குழந்தைகளின் அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில் அமைந்தன. | |||
===பள்ளி நிலை அறிவியல், கணித, கைவேலைத்திறன் விழா=== | |||
இவ்வாண்டு பள்ளி நிலை அறிவியல், கணித, கைவேலைத்திறன் விழா ஜூலை 29, 30, 31 தேதிகளில் நடைபெற்றது. | |||
கற்றலுடன் இணைத்து, பிற செயல்பாடுகளிலும் மாணவர்களின் விருப்பம் மற்றும் திறமைகளை அறிய இத்தகைய நிகழ்வுகள் பெரிதும் உதவுகின்றன. | |||
கணித விழாவின் ஒரு பகுதியாக கணித மாதிரி (Still Model), எண் அட்டவணை (Number Chart), வடிவியல் அட்டவணை (Geometrical Chart), கணிதப் புதிர் (Math Puzzle) போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. | |||
அறிவியல் விழாவின் ஒரு பகுதியாக சார்ட் தயாரிப்பு போட்டி நடைபெற்றது. | |||
கைவேலைத்திறன் விழாவின் ஒரு பகுதியாக காகிதப் பூக்கள் தயாரித்தல், காய்கறி அச்சிடுதல் (Vegetable Printing), ஒரிகாமி, குடை தயாரித்தல், களிமண் வடிவங்கள் உருவாக்குதல், முத்துக்களால் ஆபரணம் தயாரித்தல், துணியில் ஓவியம் வரைதல் (Fabric Painting), பூத்தையல், கழிவுப் பொருட்களால் பயனுள்ள தயாரிப்புகள், பத்தி தயாரித்தல், தேங்காய் ஓடு பொருட்கள் தயாரித்தல், கயிறு மிதியடி தயாரித்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றன. | |||
பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். வெற்றியாளர்களுக்கு உபமாவட்ட நிலை போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. | |||
==ஆகஸ்ட்== | |||
===ஹிரோஷிமா தினம்=== | |||
ஆகஸ்ட் 6 புதன்கிழமை, பள்ளியில் ஹிரோஷிமா தினம் அனுசரிக்கப்பட்டது. பள்ளிக் காலைக் கூட்டத்தில் தலைமையாசிரியை தீபா ஏ, போரின் விளைவுகளை மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். மாணவர்கள் போர் எதிர்ப்பு போஸ்டர், சுவரொட்டி, பதிப்புகள், சடாக்கோ கொக்குகள் ஆகியவற்றை தயாரித்து வந்தனர். பள்ளி வளாகத்தில் போர் எதிர்ப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது. பின்னர், மாணவர்கள் தயாரித்த சடாக்கோ கொக்குகள் பள்ளியின் முன்புறத்திலுள்ள மரத்தில் தொங்கவிடப்பட்டது. போரின் பயங்கரத்தைக் காட்டும் வீடியோவும் மாணவர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. | |||
''போர் அல்ல, அமைதியே தேவை'' என்பதை மாணவர்கள் உணர்வதற்கான ஒரு வாய்ப்பாக இது அமைந்தது. | |||