"ആശ്രമം എച്ച്.എസ്.എസ് പെരുമ്പാവൂർ/അക്ഷരവൃക്ഷം/உலகை அச்சுறுத்தும் கொரோனா" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
Sathish.ss (സംവാദം | സംഭാവനകൾ) No edit summary |
(ചെ.) ("ആശ്രമം എച്ച്.എസ്.എസ് പെരുമ്പാവൂർ/അക്ഷരവൃക്ഷം/உலகை அச்சுறுத்தும் கொரோனா" സംരക്ഷിച്ചിരിക്ക...) |
||
(വ്യത്യാസം ഇല്ല)
|
00:12, 20 ജൂൺ 2020-നു നിലവിലുള്ള രൂപം
உலகை அச்சுறுத்தும் கொரோனா
உலகை அச்சுஉலகை அச்சுறுத்தும் கொரோனாறுத்தும் கொரோனா முன்னுரை சீனாவிலிருந்து பிறவி எடுத்த கொடும் நோய் இந்த உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது ஏராளமான கிருமிகள் நமது அருகில் இருந்தாலும் அதில் நமது உயிர் குடிக்கும் கிருமி இந்த கொரோனா. சார்ஸ் (2002 )இபோலா( 2012) இவை உதாரணமாகும்.இந்த நோய்க்கு உரிய மருந்து கண்டுபிடிக்க இயலாத காரணத்தினாலும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை அதனால் கட்டுப்படுத்த முடியவில்லை. பரவியது எப்படி: கோவிட்-19 என்ற கொடும் நோய் பரவியது மிருகங்களிடம் இருந்து தான் மனிதர்களுக்கு பரவியது பின்பு மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவியது. அறிகுறிகள்: காய்ச்சல், வரட்டு இருமல் ,மூச்சுத் திணறல் ஆகியவை தான் முக்கிய அறிகுறிகள் இவற்றில் எந்த ஒரு நோய் இருப்பதாக தெரிந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தற்காத்துக் கொள்வது எப்படி: முக்கியமான இரண்டு விஷயங்களை கடைபிடித்தால் நோய் நம்மை அண்டாது. சுத்தமாக இருப்போம், தனிமைப் படுத்திக் கொள்வோம், பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து விலகி நிற்போம் ஏனென்றால் அவர்கள் எங்கேயாவது கை வைத்திருந்தாலோ அல்லது அவர்கள் தும்மும் பொழுது அது நம்முடைய கைகளில் ஒட்டிக் கொள்ளலாம் பிறகு அந்த கையை மூக்கு வாய்களில் வைக்கும்போது கொரோனா வருவதற்கு வாய்ப்புகள் ஏராளம் ஆகையால் எப்போதும் கைகளை கழுவவும் .கூட்டம் கூடாமல் இருப்பது நல்லது. கொரோனா கற்பித்த பாடங்கள்: தொழில்நுட்பம் வளர்ந்த பிறகும் பெற்றோர்களுக்கு குழந்தைகளிடம் பேசவும் உரையாடவும் நேரம் கிடைப்பதில்லை. ஆனால் இப்போது குழந்தைகளை கொஞ்சவே நேரம் சரியாக இருக்கிறது. ஒரு நாள் 144 தடை உத்தரவு போட்டதும் யாரும் நகை கடையை தேடி ஓட வில்லை துணிக்கடையை தேடி ஓட வில்லை எல்லோரும் ஓடியது காய்கறி கடையை தேடி தான் விவசாயிகள் இல்லையென்றால் என்றோ இந்த உலகம் பட்டினியால் அழிந்திருக்கும். சுத்தம் சுகாதாரம் சுக வாழ்விற்கு ஆதாரம் என்று முன்னோர்கள் சொன்னார்கள். ஆனால் நாம் பட்ட பின்புதான் திருந்துகிறோம். முடிவுரை: லட்சக்கணக்கான உயிர்களை பலி கொடுத்த இந்த கொடிய நோயிலிருந்து நம்மால் தப்ப முடியுமா என்று கேட்டால் நிச்சயமாக முடியும். நாம் சுத்தமாகவும் தனிமைப் படுத்திக் கொண்டால் நோய் நம்மை அண்டாது சர்க்கரைநோய் மூச்சுத் திணறல் போன்ற நோய்களை விட இந்த கொரோனா மிகவும் கொடூரமான நோய். அதனால் சுத்தமாக இருப்போம். சுத்தமாக இருப்போம் கொரோனாவை ஒழிப்போம்
സാങ്കേതിക പരിശോധന - Sathish.ss തീയ്യതി: 20/ 06/ 2020 >> രചനാവിഭാഗം - ലേഖനം |
- അക്ഷരവൃക്ഷം പദ്ധതിയിലെ സൃഷ്ടികൾ
- എറണാകുളം ജില്ലയിലെ അക്ഷരവൃക്ഷം-2020 സൃഷ്ടികൾ
- പെരുമ്പാവൂർ ഉപജില്ലയിലെ അക്ഷരവൃക്ഷം-2020 സൃഷ്ടികൾ
- അക്ഷരവൃക്ഷം പദ്ധതിയിലെ ലേഖനംകൾ
- എറണാകുളം ജില്ലയിലെ അക്ഷരവൃക്ഷം ലേഖനംകൾ
- എറണാകുളം ജില്ലയിലെ അക്ഷരവൃക്ഷം സൃഷ്ടികൾ
- പെരുമ്പാവൂർ ഉപജില്ലയിലെ അക്ഷരവൃക്ഷം-2020 ലേഖനംകൾ
- എറണാകുളം ജില്ലയിൽ 20/ 06/ 2020ന് ചേർത്ത അക്ഷരവൃക്ഷം സൃഷ്ടികൾ
- അക്ഷരവൃക്ഷം 2020 പദ്ധതിയിൽ നാലാം ഘട്ടത്തിൽ പരിശോധിച്ച സൃഷ്ടികൾ
- അക്ഷരവൃക്ഷം 2020 പദ്ധതിയിൽ നാലാംഘട്ടത്തിൽ പരിശോധിച്ച ലേഖനം
- അക്ഷരവൃക്ഷം 2020 തമിഴ് രചനകൾ