ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /குழுக்கள்/சமூகக்குழு

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്

சமூகக்குழு

ஒவ்வொரு வருடமும் ஜூன் 5 ஆம் தேதி சுற்றுப்புற தின கொண்டாட்டத்தின்போது எங்களது சமூகச்சங்கம் தொடங்கப்படுகிறது. எங்களது இவ்வருட சமூகச் சங்கத்தை திரு. சாமிநாதன் அவர்கள் தொடங்கி வைத்தார். பின்பு நாங்கள் அனைவரும் ஒன்றுகூடி இவ்வருடம் என்னென்ன செயல்பாடுகள் செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டோம். அதன்படி பள்ளியில் செயல்படுத்துவதுமுண்டு. தினக்கொண்டாட்டங்களும், பள்ளித் தேர்தலும் இவற்றில் உட்படுகின்றன.

நோக்கங்கள்

  • சிறு குழந்தைகளை சுற்றுப்புற உணர்வு, இயற்கையோடுள்ள நெருக்கம், இயற்கை அன்பு போன்றவை வளர்க்கப்படுகிறது.
  • இயற்கையோடு ஒன்றி வாழ்வதற்கான மனப்பான்மையும், திறமையும், விருப்பமும் வளர்க்கப்படுகிறது.
  • இயற்கையை அழிக்காமல் தாவரங்களையும், மண்ணையும். மலைகளையும், நீர்நிலைகளையும், அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கவும், அனைவருக்கும் நல்ல முன்மாதிரியாக வாழ்வதற்கான திறன் பெறவும் நம் சமூகச் சங்கம் பெரிதும் உதவுகிறது.
  • நமது சமூகச் சங்க செயல்பாடுகள் குழந்தைகளில் சமூக மனப்பான்மையை வளர்க்கவும், சமூகத்தோடு இணைந்து செயல்படவும் வழிவகுக்கிறது.
  • குழந்தைகளில் தலைமை பண்பு வளர உறுதுணைபுரிகிறது.

செயல்பாடுகள்

  • களப்பயணம்
  • கல்விச்சுற்றுலா
  • நேர்காணல்
  • பள்ளித் தேர்தல்