ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/தகவல் தொழில்நுட்பச் சங்கம்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
தகவல் தொழில்நுட்பச் சங்கம்

முகவுரை

தகவல் தொழில்நுட்ப செயல்பாடுகள் மிக நல்ல முறையில் நடந்து கொண்டிருக்கின்ற ஒரு பள்ளிக்கூடமாகும் நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம். கதைகளும், பாடல்களும், விளையாட்டுக்களும் மனம் திறந்து ரசிப்பதற்கான வாய்ப்பு ஆசிரியர்கள் குழந்தைகளுக்காக அமைத்துக் கொடுப்பதுண்டு. 1 முதல் 4 வரையுள்ள வகுப்புகளுக்கான பாடப்பகுதிகள் கவர்ச்சிகரமாக கற்பதற்கான வசதிகள் கணினி ஆய்வுக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

நோக்கம்

  • கணினியை தொட்டறிந்து கற்பதற்கான வாய்ப்பு அனைத்து குழந்தைகளுக்கும் அளித்தல்.
  • கணினியின் பயன்பாட்டை அறிதல். விளையாட்டுப்பெட்டி புத்தகத்திலுள்ள பாடப்பகுதிகளை கவர்ச்சிகரமாகக் கற்பித்தல்.
  • அனைத்து குழந்தைகளையும் தகவல் தகவல் தொழில்நுட்பத்தில் ஆர்வமுடையவர்களாக்குதல்.
  • அனைத்து குழந்தைகளையும் தகவல் தொழில்நுட்பத் துறையில் திறமைபடைத்தவர்களாக்குதல்.
  • ஆங்கிலம், தமிழ், மலையாளம் டைப்பிங்கிற்கு முக்கியத்துவம் அளித்தல்.
  • குழந்தைகளுக்குப் பிடித்தமான வார்த்தைகளும், வாக்கியங்களும், அவரவரது பெயர்களும் டைப் செய்ய பயிற்சியளித்தல்.
  • போல்டர் (folder) உருவாக்கவும், அதற்குப் பெயரிடவும் கற்பித்தல்.
  • file, save, open போன்றவற்றைக் கற்பிப்பதில் கவனம் செலுத்துதல்.

கணினி ஆய்வுக்கூடம்

  • 4 மேசைக்கணினி
  • 11 மடிக்கணினி
  • 4 புரொஜக்டர்கள்

செயல்பாடுகள்

  • 1 முதல் 4 வரையுள்ள அனைத்து வகுப்பினருக்கும் விளையாட்டுப்பெட்டி புத்தகத்திலுள்ள பாடப்பகுதிகள் கவர்ச்சிகரமாக கற்பிக்கப்படுகின்றது.
  • தகவல் தொழில்நுட்பச்சங்கச் செயல்பாட்டின் பயனாக ஒவ்வொரு தினக்கொண்டாட்டங்களிலும் அவற்றோடு தொடர்புடைய வீடியோக் காட்சிகள் புரொஜெக்டர் பயன்படுத்தி குழந்தைகளுக்குக் காண்பிப்பதுண்டு.
  • ஆசிரியர்கள் கற்பித்தல் குறிப்பேடு தயார் செய்வதற்கும், கற்பித்தல் பகுதிகளைத் திட்டமிடுவதற்கும், கற்றல் முன்னேற்ற வரைபடம் தயார்செய்வதற்கும் மற்றும் பல தேவைகளுக்கும் மடிக்கணினி பயன்படுத்துவதுண்டு.
  • வாரத்திற்கொருமுறை கணினி ஆய்வகத்தில் சென்று கணினியைத் தொட்டறிந்து கற்பதற்கு அனைத்து குழந்தைகளுக்கும் வாய்ப்பளிப்பதுண்டு. எனவே அனைத்து குழந்தைகளுக்கும் கணினியின் பாகங்கள் என்னென்னவென்று தெளிவாகத் தெரியும். குழந்தைகளுக்கு கணினியின் பாகங்களின் உபயோகங்களை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
  • அனைத்து ஆசிரியர்களும் கற்பித்தலில் மடிக்கணினியும். ப்ரொஜெக்டரும் உட்படுத்துவதுண்டு. அதோடு சேர்த்து, ஆசிரியர்கள் சுயமாக தயார்செய்த சில கற்றல்துணைகருவிகள் குழந்தைகளுக்கு மிகவும் எளிமையாகவும், கவர்ச்சிகரமாகவும், கற்க பெரிதும் உதவுகிறது.