ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/கல்வி முகாம்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
15:43, 1 ഓഗസ്റ്റ് 2022-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- 21302 (സംവാദം | സംഭാവനകൾ) ('==விடுமுறை கல்வி முகாம்== ===<u>இரண்டு நாள் கல்வி ம...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു)
(മാറ്റം) ←പഴയ രൂപം | ഇപ്പോഴുള്ള രൂപം (മാറ്റം) | പുതിയ രൂപം→ (മാറ്റം)

விடுமுறை கல்வி முகாம்

இரண்டு நாள் கல்வி முகாம்

விடுமுறை நாட்களை சுவாரஸ்யமாக மாற்ற ஏப்ரல் 12 மற்றும் 13 தேதிகளில் குழந்தைகளுக்கான கல்வி முகாம் நடத்தப்பட்டது. விடுமுறையில் வீட்டிலிருந்து நேரத்தை வீணாக்காமல், குழந்தைகளை பள்ளிக்கு வரவழைத்து கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி அவர்களை மகிழ்ச்சியடையச் செய்யவும் இந்த முகாம் பெரிதும் துணைபுரிந்தது. சித்தூர் BRC ஒருங்கிணைப்பாளர் உன்னிகிருஷ்ணன் முகாமை துவக்கி வைத்தார். கேரள ஃபோக்லோர் அகாடமியின் வெற்றியாளர் மோகனன், நாட்டுப்புறப் பாடலின் தனித்தனிமைகளை குறித்து குழந்தைகளுக்கு எடுத்துரைத்தார். குழந்தைகளை நாட்டுப்புறப் பாடல்கள் பாட வைத்தும், பாடல்களுக்கு ஏற்ப நடனமாடச் செய்தும் வகுப்பை மிகச் சிறப்பாக நடத்தினார். மதியம் கைவேலை வகுப்பை BRC பயிற்சியாளர் கதீஜா எடுத்தார். வண்ணக் காகிதங்களைக் கொண்டு மிக எளிதாக பூக்கள் மற்றும் மாலைகள் செய்வது எப்படி என்று குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது. குழந்தைகள் பல குழுக்களாக அமர்ந்து, ஆசிரியர் செய்தது போல் பூக்கள் மற்றும் மாலைகள் செய்தனர். சிறந்த குழுவைக் கண்டறிந்து பரிசு வழங்கப்பட்டது. இப்பள்ளியின் ஆசிரியை ஸ்ரீஜா, கடைசி நிகழ்ச்சியான ஏரோபிக்ஸ் உடற்பயிற்சியை பற்றிய வகுப்பை நடத்தினார். ஆசிரியர்களும் குழந்தைகளும் பாடலுடன் உடற்பயிற்சி செய்ய மிகவும் ஆர்வமாக இருந்தனர். ஸ்ரீஜாவின் பயிற்சிகளை அனைவரும் மகிழ்ச்சியோடு பின்பற்றினர். இரண்டு நாள் கற்றல் முகாமின் முதல் நாள் மிகவும் உற்சாகமான அனுபவமாக அமைந்தது.

இரண்டாம் நாள் கல்வி முகாமில் BRC பயிற்சியாளரான ஓவிய ஆசிரியர் ராஜேந்திரன் குழந்தைகளுக்கு ஓவிய வகுப்பு எடுத்தார். மிக எளிதாக படங்கள் வரைவதற்கான எளிய குறிப்புக்களை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். ஒன்று முதல் பத்து வரையிலான எண்களை எழுதி ஒவ்வொரு எண்ணையும் அழகாக வரையச் செய்தார். அவரது அறிவுறுத்தலின்படி அனைத்து குழந்தைகளும் படங்கள் வரைந்தனர். சிறந்த படங்கள் வரைந்த குழந்தைகளுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. யோகா பயிற்சியாளர் மிதா குழந்தைகளுக்கு யோகா வகுப்பு எடுத்தார். குழந்தைகளுக்கு அவர்களின் அன்றாட வாழ்வில் யோகாவின் அவசியம் குறித்தும் நல்ல முறையில் எடுத்துரைக்கப்பட்டது. யோகாசனங்களைச் சரியாகச் செய்வது எப்படி என்றும் கூறினார். அப்போது குழந்தைகளுக்கு சில யோகாசனங்கள் காண்பிக்கப்பட்டன. மிதா செய்தது போல், ஒவ்வொரு குழந்தையும் அவர்களுடன் யோகா அசைவுகளை செய்தனர்.

மதியம், கேரளா சாகித்ய பரிஷத்தின் ஆர்வலர் சந்தீப், ஓரிகாமியின் அடிப்படைகளை கற்றுக்கொடுத்ததோடு, குழந்தைகளை சில ஓரிகாமி வடிவங்களை உருவாக்கவும் வைத்தார். காகிதத்தில் இருந்து மிகவும் எளிமையான ஓரிகாமி வடிவங்களை எப்படி செய்வது என்று குழந்தைகளுக்குக் காட்டப்பட்டது. குழந்தைகள் ஆர்வத்துடன் அதே ஓரிகாமி உருவங்களை உருவாக்கினர். சிறந்த படைப்புகளை கண்டறிந்து தயாரித்த குழந்தைகளுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. கல்வி முகாமின் கடைசி வகுப்பு மிகவும் உற்சாகமான அனுபவமாக இருந்தது. விளையாட்டு ஆசிரியர் ரமித் விளையாட்டும் ஆரோக்கியமும் பற்றி குழந்தைகளிடம் பேசினார். இசைக்கு ஏற்றவாறு அடியெடுத்து வைப்பதன் மூலம் சுகாதார நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து குழந்தைகளுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் பாடலுடன் சில ஆரோக்கிய நடைமுறைகளும் நிகழ்த்தப்பட்டன. குழந்தைகளும் ஆசிரியர்களும் பங்கு மிக மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர். குழந்தைகளின் பெற்றோர்களும் பாடலுக்கேற்ப அடிவைப்பதைக் கண்டு ரசித்தனர். இந்த கல்வி முகாம் அனைவருக்கும் மிகவும் புத்துணர்ச்சியூட்டும் மற்றும் மகிழ்ச்சிகரமான அனுபவமாக அமைந்தது. தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி இரண்டு நாள் முகாமிற்கு தலைமை தாங்கியவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும் நன்றி கூறி இருநாள் முகாமை நிறைவு செய்தார்.

Enjoy English

விடுமுறைக்கொண்டாட்டத்துடன் ஆங்கில மொழியின் சுவாரஸ்யத்தை உணர்வதற்கான வாய்ப்பளித்துக் கொண்டு நமது சித்தூர் ஜிவிஎல்பி பள்ளியில் Enjoy English என்னும் ஒருநாள் விடுமுறை வகுப்பு நடத்தப்பட்டது. சித்தூர் அரசு உயர் நிலைப் பள்ளி ஆசிரியை பிரமிளா, 3 மற்றும் 4 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுவாரஸ்யமாக வகுப்பை நடத்தினார். ஒவ்வொரு செயல்பாடுகளிலும் ஆங்கில மொழியின் தனித்தன்மையும் எளிமையும் நிறைந்ததாக இருந்தது. பிரார்த்தனையில் தொடங்கிய தனித்துவமும் புதுமையும் விளையாட்டு, உரையாடல், வரைதல், இலக்கணம் என அனைத்திலும் தொடர்ந்தது. Enjoy English என்பது குழந்தைகளுக்கு வேடிக்கையும் அறிவும் பகிர்ந்தளித்த மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருந்தது. தலைமையாசிரியை ஜெயலட்சுமி வகுப்பை இனிதே நிறைவு செய்த பிரமீளாவுக்கு பரிசு வழங்கினார். ஆசிரியர் செயலர் சுப்ரபா நன்றியுரையும் வழங்கினார்.