ഉള്ളടക്കത്തിലേക്ക് പോവുക

ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/இனியும் வாசிப்போம்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്

பெற்றோர் ஆசிரியர் சங்கம்

ஒரு பள்ளியின் முழு வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மிக முக்கியமான ஒன்றாகும். இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் கல்வித்தரத்தையும், பௌதீக சூழ்நிலையையும் உயர்த்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பள்ளி உயர்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களது ஒத்துழைப்பு முழுமையாக கிடைப்பதுண்டு. பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடு கற்றல் துணைக்கருவிகள், பென்ஞ், டெஸ்க் போன்றவை நமது பள்ளிக்கு கிடைத்ததுண்டு. பள்ளியின் கலை, விளையாட்டு செயல்பாடுகளிலும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் பங்கு குறிப்பிடத்தக்கதே.

கல்விச்சுற்றுலாவின் போதும் இவர்கள் செய்கின்ற உதவிகள் குறிப்பிடத்தக்கதாகும். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடு தான் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. எம்.எல்.ஏவிடம் அடிக்கடி சென்று தேவைகளை முறையிட்டதன் அடிப்படையில் இது நமக்கு கிடைத்தது. கோடைக்கால விடுமுறையின் போதும் யோகா வகுப்புகள், அபாக்கஸ் போன்றவை குழந்தைகளுக்காக பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்வதுண்டு. இத்தகைய சிறப்புக்கள் நிறைந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடும், உறுதுணையோடுமே நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றது.

பள்ளியின் மாதிரி பெற்றோர்கள்

நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூட முன்னேற்றத்தில் பெற்றோர்களுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு. குழந்தைகளுடையவும், பள்ளியினுடையவும் முன்னேற்றத்திற்காக இவர் பெரிதும் செயலாற்றி வருகின்றனர். இந்த வருடத்தில் படிக்கின்ற சில ஏழை மாணவர்களுக்கு புத்தகப் பையும் நோட்டுப் புத்தகங்களும் வழங்கி பள்ளிக்கூடத்திற்கே மாதிரியாகத் திகழ்கிறார் அப்துல் சலீம் என்னும் பெற்றோர். முன் துவக்கப்பள்ளி முதல் நான்காம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் இருந்து ஏழ்மையான குழந்தைகளை தேர்ந்தெடுத்து இச்சேவை செய்யப்பட்டது. வரும் வருடங்களிலும் இந்த சேவை தொடரும் என்று இவர் வாக்குறுதி அளித்துள்ளார். திரு. அப்துல் சலீம் அவர்களே நேராக வந்து குழந்தைகளுக்கு புத்தகப்பையும், நோட்டுப் புத்தகங்களும் வழங்கினார். இவரது சேவை மனப்பான்மைக்கு தலைமை ஆசிரியரான திருமதி. ஷைலஜா ஆசிரியர், அனைத்து ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் நன்றி செலுத்தினோம்.

பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம்

பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம் 2019- 20
வரிசை எண் பெற்றோர் ஆசிரியர் சங்கம் பெயர் புகைப்படம்
1 தலைவர் சாமிநாதன்
2 துணைத் தலைவர் ஸ்ரீஜித்
3 உறுப்பினர் சுகதன். ஜி
4 உறுப்பினர் குமார்
5 உறுப்பினர் மணிகண்டன்
6 உறுப்பினர் பாபு
7 உறுப்பினர் மோகன்தாஸ்
8 உறுப்பினர் சசிகுமார்
9 உறுப்பினர் பினி. வி.பி
10 உறுப்பினர் ஸ்ரீதேவி
11 உறுப்பினர் சுனிதா
மதர் பெற்றோர் ஆசிரியர் சங்கம் 2019-20
வரிசை எண் மதர் பெற்றோர் ஆசிரியர் சங்கம் பெயர் புகைப்படம்
1 தலைவர் பின்சி
2 உறுப்பினர் தன்யா
3 உறுப்பினர் தன்யா
4 உறுப்பினர் பினி.வி.பி
5 உறுப்பினர் சுமா
6 உறுப்பினர் அஜிதா
7 உறுப்பினர் ஸ்ரீதேவி
8 உறுப்பினர் சுதா
9 உறுப்பினர் விமலா
10 உறுப்பினர் நிஸி
11 உறுப்பினர் பர்ஸானா
பெற்றோர் ஆசிரியர் சங்கம் 2018-19
வரிசை எண் பெற்றோர் ஆசிரியர் சங்கம் பெயர் புகைப்படம்
1 தலைவர் கே.பி ரஞ்சித்
2 துணைத் தலைவர் சாமிநாதன்
3 உறுப்பினர் சுகதன்.ஜி
4 உறுப்பினர் குமார்
5 உறுப்பினர் ஸ்ரீஜித்
6 உறுப்பினர் ஷீபா
7 உறுப்பினர் மோகன்தாஸ்
8 உறுப்பினர் ஹீரா
9 உறுப்பினர் சுரேஷ்குமார்
10 உறுப்பினர் வைவஸ்ஸுதமனு
11 உறுப்பினர் சுனிதா.எம்
12 உறுப்பினர் பாலகிருஷ்ணன்
13 உறுப்பினர் சிவராஜன்