ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/தனித்துவமான செயல்பாடுகள்/ஆஹா! என்ன அருமை

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
20:30, 19 ഡിസംബർ 2025-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- 21302 (സംവാദം | സംഭാവനകൾ) ('==ஆஹா! என்ன அருமை== மாணவர்களிடையே அறிவியலில் ஆர்வத்தையும் ஆச்சரியத்தையும் வளர்ப்பதற்காக பள்ளியில் உருவாக்கப்பட்டுள்ள அறிவியல் மூலைதான் '''ஆஹா! என்ன அருமை!'''. =...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു)
(മാറ്റം) ←പഴയ രൂപം | ഇപ്പോഴുള്ള രൂപം (മാറ്റം) | പുതിയ രൂപം→ (മാറ്റം)

ஆஹா! என்ன அருமை

மாணவர்களிடையே அறிவியலில் ஆர்வத்தையும் ஆச்சரியத்தையும் வளர்ப்பதற்காக பள்ளியில் உருவாக்கப்பட்டுள்ள அறிவியல் மூலைதான் ஆஹா! என்ன அருமை!.

நோக்கம்

  • மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்கு.
  • சுயமாக எளிய அறிவியல் சோதனைகளில் ஈடுபடுவதற்கு.

செயல்பாடு

பள்ளி வராந்தாவின் ஒரு மூலையில் மாணவர்கள் எளிய சோதனைகளைச் செய்வதற்குத் தேவையான கருவிகள் மற்றும் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. 1-ஆம் வகுப்பு முதல் 4-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய அளவிலான உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வகுப்பு ஆசிரியர்களின் மேற்பார்வையில் மாணவர்கள் குழுக்களாக இணைந்து பல்வேறு எளிய சோதனைகளை செய்கிறார்கள். தங்களது கண்டுபிடிப்புகளைக் குறிப்பேட்டில் குறித்து வைக்கிறார்கள். இத்தகைய சோதனை முடிவுகளைப் பள்ளிக் காலைகூட்டத்தில் வாசிக்கவும் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

சிறப்பம்சம்

அனைத்து மாணவர்களுக்கும் எளிய அறிவியல் சோதனைகளை சுயமாக செய்து பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.