"കെ.കെ.എം.എൽ.പി.എസ്. വണ്ടിത്താവളം/தமிழ்/തിരികെ വിദ്യാലയത്തിലേക്ക് 21" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
('== மாணவர்களின் எதிர்காலம் == கொரோனா வைரசு (கொவிட...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു) |
|||
| വരി 10: | വരി 10: | ||
பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலையில், பாடங்களை நடத்தி, மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் தங்களின் குழந்தைகள் பாடங்களை எந்த அளவுக்கு தெளிவாக புரிந்து கொள்வார்கள் என்ற கவலை பெரும்பாலான பெற்றோருக்கு ஏற்படுவதை காண முடிகிறது. மேலும் பாடம் தொடர்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைப்பதில் பெற்றோரும் நேரம் செலவிட வேண்டியது இருக்கிறது. ஆன்லைன் முறையிலான புதிய கற்றல் முறைக்கு மாணவர்களை மனரீதியாக தயார்படுத்த வேண்டும். செல்போன், கணினி ஆகியவற்றை கையாளுவதையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். செல்போன், கணினி ஆகியவற்றில் ஆசிரியர்கள் கொடுக்கும் பாடங்களை படித்து மாணவர்களே கற்றுக்கொள்வார்கள் என்று விட்டு விட கூடாது. அவர்கள் மீது உரிய அக்கறையையும், கண்காணிப்பையும் காட்டி கற்றலில் மேம்பட துணையாக இருக்க வேண்டும். | பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலையில், பாடங்களை நடத்தி, மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் தங்களின் குழந்தைகள் பாடங்களை எந்த அளவுக்கு தெளிவாக புரிந்து கொள்வார்கள் என்ற கவலை பெரும்பாலான பெற்றோருக்கு ஏற்படுவதை காண முடிகிறது. மேலும் பாடம் தொடர்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைப்பதில் பெற்றோரும் நேரம் செலவிட வேண்டியது இருக்கிறது. ஆன்லைன் முறையிலான புதிய கற்றல் முறைக்கு மாணவர்களை மனரீதியாக தயார்படுத்த வேண்டும். செல்போன், கணினி ஆகியவற்றை கையாளுவதையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். செல்போன், கணினி ஆகியவற்றில் ஆசிரியர்கள் கொடுக்கும் பாடங்களை படித்து மாணவர்களே கற்றுக்கொள்வார்கள் என்று விட்டு விட கூடாது. அவர்கள் மீது உரிய அக்கறையையும், கண்காணிப்பையும் காட்டி கற்றலில் மேம்பட துணையாக இருக்க வேண்டும். | ||
=== ஃபர்ஸ்ட் பெல் === | |||
==== கைகொடுத்த `டிவி சேலஞ்ச்’ -கேரளாவில் நடைமுறைக்குப் பழக்கப்படும் ஆன்லைன் கல்விமுறை! ==== | |||
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் முடங்கியுள்ளன. இருப்பினும் ஜூன் 1ம் தேதி முதல் கேரளாவில் கல்வி தொடர்பான செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது கேரள அரசு. 'ஃபர்ஸ்ட் பெல்' என்ற பெயரில் ஜூன் 1-ம் தேதி அதிகாரபூர்வமாக ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியுள்ளன. | |||
இந்த வகுப்புகளில் அனைத்து மாணவர்களும் பயன்பெற வேண்டும் என அரசு முடிவுசெய்திருந்தது. எனினும் கணக்கெடுப்பு முடிவுகளின் படி ஒன்றாம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை பயிலும் 2.42 லட்சம் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்வதற்கான ஸ்மார்ட்போன் அல்லது தொலைக்காட்சி வசதிகள் இல்லை. இதனால் அரசு மற்றும் தன்னார்வளர்களும் இணைந்து, அனைத்து மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தைக் காக்கும் பொருட்டு மாணவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்யக் களமிங்கியுள்ளனர். நாட்டின் கல்விக்கான இந்த மிக முக்கிய தேவையைப் புரிந்துகொண்டு கட்சிகளைக் கடந்து அரசையும் தாண்டி வணிக நிறுவனங்கள், முன்னாள் மாணவர் சங்கங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் உதவ முன்வந்துள்ளனர். | |||
பெரும்பாலும் கேரளாவின் கிராமங்களில் உள்ள மாணவர்களே ஆன்லைன் வகுப்புகளை அணுகுவதில் சிக்கல் நிலவுவதனால் கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு அவர்களது உள்ளூர்களிலே மாணவர்கள் சேர்த்து வகுப்புகளைக் காண்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ``இப்படி ஊர்களில் பொதுவான வகுப்பறைகளை உருவாக்குதல் மூலம் மாநிலத்தின் அனைத்துப் பள்ளி மாணவர்களும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துள்ளதை உறுதிப்படுத்த முடியும்" என 'சர்வ சிக்ஷா அபியான் திட்ட இயக்குநர் டாக்டர் ஏ பி குட்டிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். | |||
சில கிராமங்களில் முன்னாள் மாணவர் சங்கங்கள் மற்றும் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் நிதி திரட்டப்பட்டு மாணவர்களுக்கு தொலைக்காட்சி முதலிய வசதிகள் செய்யப்படுகின்றன. இதனை ஊக்குவிக்கும் விதமாக மாநில தொழில்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட "டிவி சேலஞ்ச்" என்ற திட்டத்தின் பகுதியாக உள்ளூர் தொழிலதிபர்கள் மூலம் மாணவர்களுக்கு தொலைக்காட்சி வசதிகள் செய்ய நிதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது வகுப்பறைகளுக்குத் தேவையான தொலைக்காட்சி மடிக்கணினி முதலிய பொருள்களை வாங்கும் செலவீனங்களை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செய்து கொள்ளவும் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. | |||
இந்தியாவின் பாரம்பர்யமாக அறியப்படும் அங்கன்வாடி, படிப்பகம், உடற்பயிற்சிக் கூடம் எனக் கேரளாவின் அனைத்து கிராமங்களிலும் குறைந்தது அனைத்து மக்களும் பயன்படுத்தக்கூடிய பொதுவான இடம் உள்ளது. தற்போது இந்த இடங்களிலேயே மாணவர்களுக்கான போது வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு சார்ந்த தனியார் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் இந்த இடங்களில் பயிலும் மாணவர்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர். | |||
உதாரணமாக வயநாடு பகுதியில் அதிகபட்சமாக 9,200 மாணவர்கள் தனிப்பட்ட முறையில் தொலைக்காட்சி அல்லது கைபேசி மூலம் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள இயலாத சூழலில் உள்ளனர். | |||
"மடிக்கணினிகள், ப்ரொஜெக்டர்கள் மற்றும் டிவி போன்ற உபகரணங்கள் பள்ளிகளிலிருந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொது மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. சில மாணவர்களுக்கு வீடுகளிலேயே பெற்றோர்கள் ஸ்மார்ட்போன் வைத்திருந்தாலும் அதனை அவர்கள் பணியிடங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. எனினும் சிலர் வீட்டிற்கு வந்ததும் அவர்களின் பிள்ளைகளின் வகுப்பிற்காக ஸ்மார்ட்போனைக் கொடுக்கிறார்கள்" எனக் கேரள உள்கட்டமைப்பு மற்றும் கல்விக்கான தொழில்நுட்பத்தின் (KITE) மாவட்ட ஒருங்கிணைப்பாளர், அரசு பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பம் இயக்கப்பட்ட கல்விக்கான நோடல் நிறுவனத்தைச் சேர்ந்த வி.ஜே.தாமஸ் கூறியுள்ளார். | |||
இந்தக் கல்வி மையங்களில் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைக்காட்சி சேனலில் குறிப்பிட்ட நேரத்திற்குக் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு என அனைத்துப் பள்ளி வகுப்புகளுக்கும் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் அனைவரும் கற்க முடியாத சூழலில் வெளியான பாடப் பிரிவுகள் மீண்டும் ஒளிபரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்புகளில் ஒன்றாம் வகுப்பிற்குப் பாடல்கள் மூலம் பாடம் எடுத்து கடந்த வாரங்களில் இணையத்தில் பிரபலமான சுவேதா டீச்சர் தான் அரசின் இந்த முயற்சிகள் எந்த அளவிற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது என்பதற்கான சிறந்த உதாரணம். | |||
11:08, 15 സെപ്റ്റംബർ 2022-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
மாணவர்களின் எதிர்காலம்
கொரோனா வைரசு (கொவிட்-19) காலப்பகுதியில் கல்வியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், அத்துடன் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கான ஆதரவு.
கொரோனா வைரசால் மாறிய கல்வி: இணையம் இல்லாத மாணவர்களின் எதிர்காலம்
கொரோனா வைரஸ் காரணமாக கற்றல் மற்றும் கற்பித்தல் முறையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு, ஆன்லைன் கல்வி முறையாக மாறவும் வாய்ப்பாகி இருக்கிறது. ஒவ்வொரு கல்வி ஆண்டும் மாணவர்களின் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே திட்டமிட்டு, அட்டவணைப்படி வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. அதற்கு மாணவர்களும் தங்களை தினமும் தயார்படுத்திக் கொள்வது வழக்கமாக இருந்தது. ஆனால் இந்த (2020-21) கல்வி ஆண்டு இதுவரை இல்லாத புதுவிதமான ஒன்றாக அமைந்து இருக்கிறது. எந்தவித திட்டமிடலுக்கும் உட்படாத ஒன்றாக மாறி இருக்கிறது. அதற்கு கொரோனா வைரஸ் காரணமாகி விட்டது. அதுவே, கற்றல் மற்றும் கற்பித்தல் முறையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு, ஆன்லைன் கல்வி முறையாக மாறவும் வாய்ப்பாகி இருக்கிறது. இது ஆசிரியர்களுக்கு எளிதாக இருந்தாலும், பாடங்களை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது என்பது பெரிய சவாலாக இருப்பதை மறுக்க முடியாது.
கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. ஆனாலும் படிப்பு தடைபட கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் வகுப்பறைகள் இல்லை. சக தோழர்கள் இல்லை. விளையாட்டு மைதானம், சந்திப்பு, கலந்துரையாடல் ஆகிய எதுவும் இல்லை. அதை எல்லாம் விட நேரடியாக ஆசிரியர்களின் பார்வை இல்லை என்பது போன்ற பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. இதை எல்லாம் மீறி மாணவர்கள் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது. எனவே மாணவ மாணவிகள் படிப்பதற்கு பெற்றோர்களின் பங்கு மிகவும் அத்தியாவசியம். அது இல்லை என்றால் ஆன்லைன் கல்வி என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாக மாறி விடும்.
எனவே பெற்றோரின் பங்களிப்பால் தான் ஆன்லைன் கல்வியில் அனைத்து மாணவர்களும் இணைய முடிகிறது. அதற்கு செல்போன், இணையதள இணைப்பு ஆகியவை இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. நவீன உலகில் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் தொழில்நுட்ப சாதனங்கள் மாணவர்களின் கைகளில் தவழ தொடங்கி உள்ளது. எனவே அதை பயன்படுத்தவும் மாணவ மாணவிகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஆசிரியர்கள், மாணவர்களை ஆன்லைன் வகுப்புக்கு தயார்படுத்த வேண்டும். அதில் பாடங்களை படிப்பது, எழுதுவது, அதை புரிந்து கொண்டு பதில் அளிக்க வேண்டியதில் உள்ள நுட்பங்களை தெரியப்படுத்த வேண்டியது இருக்கிறது. வீட்டுக்குள் வகுப்பறை சூழலை ஏற்படுத்து வது என்பது நடைமுறையில் இயலாத ஒன்று தான். எனவே குழந்தைகளை படிப்பில் கவனம் செலுத்த வைப்பது என்பது பெற்றோருக்கு பெரிய சவாலாக மாறி இருக்கிறது. தற்போதுள்ள ஊரடங்கு காலத்தில் நோட்டு, புத்தகம், பள்ளிச்சூழல், தேர்வு, சிறப்பு வகுப்பு, ஆசிரியரின் கண்காணிப்பு போன்றவற்றில் இருந்து மாணவர்கள் விடுபட்டு உள்ளனர். இதனால் அவர்களுக்கு கற்றலுடன் ஒரு தொடர்பற்ற ஒரு நிலை இருக்கிறது. அதில் தொடர்பை ஏற்படுத்தி நாட்டத்தை ஏற்படுத்துவது முதல் கடமையாகி விட்டது.
பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலையில், பாடங்களை நடத்தி, மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் தங்களின் குழந்தைகள் பாடங்களை எந்த அளவுக்கு தெளிவாக புரிந்து கொள்வார்கள் என்ற கவலை பெரும்பாலான பெற்றோருக்கு ஏற்படுவதை காண முடிகிறது. மேலும் பாடம் தொடர்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைப்பதில் பெற்றோரும் நேரம் செலவிட வேண்டியது இருக்கிறது. ஆன்லைன் முறையிலான புதிய கற்றல் முறைக்கு மாணவர்களை மனரீதியாக தயார்படுத்த வேண்டும். செல்போன், கணினி ஆகியவற்றை கையாளுவதையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். செல்போன், கணினி ஆகியவற்றில் ஆசிரியர்கள் கொடுக்கும் பாடங்களை படித்து மாணவர்களே கற்றுக்கொள்வார்கள் என்று விட்டு விட கூடாது. அவர்கள் மீது உரிய அக்கறையையும், கண்காணிப்பையும் காட்டி கற்றலில் மேம்பட துணையாக இருக்க வேண்டும்.
ஃபர்ஸ்ட் பெல்
கைகொடுத்த `டிவி சேலஞ்ச்’ -கேரளாவில் நடைமுறைக்குப் பழக்கப்படும் ஆன்லைன் கல்விமுறை!
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் முடங்கியுள்ளன. இருப்பினும் ஜூன் 1ம் தேதி முதல் கேரளாவில் கல்வி தொடர்பான செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது கேரள அரசு. 'ஃபர்ஸ்ட் பெல்' என்ற பெயரில் ஜூன் 1-ம் தேதி அதிகாரபூர்வமாக ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியுள்ளன.
இந்த வகுப்புகளில் அனைத்து மாணவர்களும் பயன்பெற வேண்டும் என அரசு முடிவுசெய்திருந்தது. எனினும் கணக்கெடுப்பு முடிவுகளின் படி ஒன்றாம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை பயிலும் 2.42 லட்சம் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்வதற்கான ஸ்மார்ட்போன் அல்லது தொலைக்காட்சி வசதிகள் இல்லை. இதனால் அரசு மற்றும் தன்னார்வளர்களும் இணைந்து, அனைத்து மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தைக் காக்கும் பொருட்டு மாணவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்யக் களமிங்கியுள்ளனர். நாட்டின் கல்விக்கான இந்த மிக முக்கிய தேவையைப் புரிந்துகொண்டு கட்சிகளைக் கடந்து அரசையும் தாண்டி வணிக நிறுவனங்கள், முன்னாள் மாணவர் சங்கங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் உதவ முன்வந்துள்ளனர்.
பெரும்பாலும் கேரளாவின் கிராமங்களில் உள்ள மாணவர்களே ஆன்லைன் வகுப்புகளை அணுகுவதில் சிக்கல் நிலவுவதனால் கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு அவர்களது உள்ளூர்களிலே மாணவர்கள் சேர்த்து வகுப்புகளைக் காண்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ``இப்படி ஊர்களில் பொதுவான வகுப்பறைகளை உருவாக்குதல் மூலம் மாநிலத்தின் அனைத்துப் பள்ளி மாணவர்களும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துள்ளதை உறுதிப்படுத்த முடியும்" என 'சர்வ சிக்ஷா அபியான் திட்ட இயக்குநர் டாக்டர் ஏ பி குட்டிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சில கிராமங்களில் முன்னாள் மாணவர் சங்கங்கள் மற்றும் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் நிதி திரட்டப்பட்டு மாணவர்களுக்கு தொலைக்காட்சி முதலிய வசதிகள் செய்யப்படுகின்றன. இதனை ஊக்குவிக்கும் விதமாக மாநில தொழில்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட "டிவி சேலஞ்ச்" என்ற திட்டத்தின் பகுதியாக உள்ளூர் தொழிலதிபர்கள் மூலம் மாணவர்களுக்கு தொலைக்காட்சி வசதிகள் செய்ய நிதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது வகுப்பறைகளுக்குத் தேவையான தொலைக்காட்சி மடிக்கணினி முதலிய பொருள்களை வாங்கும் செலவீனங்களை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செய்து கொள்ளவும் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவின் பாரம்பர்யமாக அறியப்படும் அங்கன்வாடி, படிப்பகம், உடற்பயிற்சிக் கூடம் எனக் கேரளாவின் அனைத்து கிராமங்களிலும் குறைந்தது அனைத்து மக்களும் பயன்படுத்தக்கூடிய பொதுவான இடம் உள்ளது. தற்போது இந்த இடங்களிலேயே மாணவர்களுக்கான போது வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு சார்ந்த தனியார் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் இந்த இடங்களில் பயிலும் மாணவர்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
உதாரணமாக வயநாடு பகுதியில் அதிகபட்சமாக 9,200 மாணவர்கள் தனிப்பட்ட முறையில் தொலைக்காட்சி அல்லது கைபேசி மூலம் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள இயலாத சூழலில் உள்ளனர்.
"மடிக்கணினிகள், ப்ரொஜெக்டர்கள் மற்றும் டிவி போன்ற உபகரணங்கள் பள்ளிகளிலிருந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொது மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. சில மாணவர்களுக்கு வீடுகளிலேயே பெற்றோர்கள் ஸ்மார்ட்போன் வைத்திருந்தாலும் அதனை அவர்கள் பணியிடங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. எனினும் சிலர் வீட்டிற்கு வந்ததும் அவர்களின் பிள்ளைகளின் வகுப்பிற்காக ஸ்மார்ட்போனைக் கொடுக்கிறார்கள்" எனக் கேரள உள்கட்டமைப்பு மற்றும் கல்விக்கான தொழில்நுட்பத்தின் (KITE) மாவட்ட ஒருங்கிணைப்பாளர், அரசு பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பம் இயக்கப்பட்ட கல்விக்கான நோடல் நிறுவனத்தைச் சேர்ந்த வி.ஜே.தாமஸ் கூறியுள்ளார்.
இந்தக் கல்வி மையங்களில் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைக்காட்சி சேனலில் குறிப்பிட்ட நேரத்திற்குக் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு என அனைத்துப் பள்ளி வகுப்புகளுக்கும் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் அனைவரும் கற்க முடியாத சூழலில் வெளியான பாடப் பிரிவுகள் மீண்டும் ஒளிபரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்புகளில் ஒன்றாம் வகுப்பிற்குப் பாடல்கள் மூலம் பாடம் எடுத்து கடந்த வாரங்களில் இணையத்தில் பிரபலமான சுவேதா டீச்சர் தான் அரசின் இந்த முயற்சிகள் எந்த அளவிற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது என்பதற்கான சிறந்த உதாரணம்.