சுத்தமாக இருக்க வேண்டும் சுற்றுச்சூழல்
அது சுகம் கொடுத்து அரவணைக்கும் சொர்க்கத்தின் வாசல்
எத்தனை முறை பார்த்தாலும் கவனத்தை ஈர்க்கும்
எங்கும் தூய்மையாக இருந்தால் தான் கவலைகள் தீரும்
புகை கக்கும் வாகனங்கள் ஓடக்கூடாது
நல்ல புனிதமான இடங்களை நாம் இழக்கக்கூடாது
பசுமையான வளங்களையும் அழிக்கக்கூடாது
நல்ல பழங்கள் தரும் மரங்களை நாம் இழக்கக்கூடாது
கழிவு நீர் வீட்டைச் சுற்றி தேங்கக்கூடாது
கண்ட இடத்தில் குப்பைகளை போடக்கூடாது
தூய்மையாக இருப்பதே நம் உடல் நலம் காக்கும்
நாம் ஓன்று சேர்ந்து சுற்றுப்புறத்தை தூய்மையாக காப்போம்