காற்றிலாடும் மரங்கள்,
வானில் பறக்கும் பறவைகள்,
நீரில் நீந்தும் மீன்கள்,
நிலத்தில் நீங்கும் விலங்குகள்,
இவை தானே இயற்கை!
என் கண்ணுக்கு இவை மட்டும்தான்.
ஆனால் இவையெல்லம் படைத்த உமக்கு,
இயற்கை இவ்வளவு சிறிதல்ல.
என் கண்ணால் பார்த்தாலும்,
தெரிந்தும் புரியாத புதிர்கள்!
எவ்வளவு நிரப்பினாலும்
நிறையாத புதிர்!
ஒன்றை நிரப்பி முடித்தால் மற்றொன்று.
என்னால் முடியவில்லை!
இந்த இயற்கையின்,
ரகசியத்தை கண்டுபிடிக்க முடியவில்லை!
என் முயற்சியில் நான்,
சோர்ந்து போகிறேன்!
மனிதர்களின் பொழுது மனிதர்களின் பொழுதுபோக்கே, இயற்கை தான் !
அதை வைத்து ,
நீ பொழுதை போக்குகிறாய்!
இயற்கையின் ரகசியத்தை
அறிந்திடாத வரையிலே
இயற்கைக்கு அழகு! அதை அறிந்தால்
நமக்கு முடிவு!