ഗവൺമെന്റ് ജി. എച്ച്. എസ്. എസ്. കരമന/അക്ഷരവൃക്ഷം/வேகமாக பரவும் கொரோனா

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
16:11, 13 ഏപ്രിൽ 2020-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- 43076 (സംവാദം | സംഭാവനകൾ) ('{{BoxTop1 | തലക്കെട്ട്= வேகமாக பரவும் கொரோனா | color= 3 }}...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു)
வேகமாக பரவும் கொரோனா

                    
கொரோனா என்ற வைரஸ் தான்,
கொடூரமாய் பரவி வருகிறது.
கோடி கோடி மக்களெல்லாம்
வீட்டிற்குள் அடைந்து வாழ்கின்றனர்.

சுத்தம் வேண்டும், நமது-சுற்றுப்
புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும்.
ஆரோக்கியமான வாழ்வுக்காக நாமும்
அரசு கூறுவதை கேட்டு நடக்க வேண்டும்.

கைகளை நன்றாய் கழுகிடுவோம்,
வைரஸ் தொற்றை நாம் நீக்கிடுவோம்;
சீனா நாடு பரப்பிய கொரோனாவை
சீக்கிரமாக அழித்து விரட்டிடுவோம்!

லட்சக்கணக்கில் மக்கள் மடிந்து விட்டனர்
அச்சத்தோடனைவரும் வருந்துகின்றனர்;
இந்தியாவில் வாழ்ந்துவரும் நாமெல்லாம்
உறுதியோடு கொரோனாவை எதிர்த்து போராடுவோம்!

ஊரடங்கை நாமும் கடைப்பிடித்தால்-பலக்
கோடி மக்கள் வாழ்வை நாம் காத்திடலாம்.
வெளிநாட்டிலிருந்து வருவோரை நாம்
தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்!

முகக்கவசங்களை வெளியேறும்போது பயன்படுத்திடுவோம்;
முற்றிலும் கவனமாக செயல்பட்டிடுவோம்;
வீட்டைவிட்டு வெளியேறாமல் வாழ்ந்திடுவோம்!
நாட்டை மீண்டும் நலமாக மாற்றிடுவோம்!

യുവശ്രീ . എ
7 A ഗവ.ഗേൾസ് എച്ച്.എസ്.എസ്. കരമന
തിരുവനന്തപുരം സൗത്ത് ഉപജില്ല
തിരുവനന്തപുരം
അക്ഷരവൃക്ഷം പദ്ധതി, 2020
ലേഖനം