சீனாவில் துவங்கிய நீ
மின்னல் வேகத்தில்
உலகம் முழுவதும்
சூழ்ந்து விட்டாய்
உன்னை நாங்கள்
கை கூப்பி வரவேற்போம் என்று எண்ணிவிடாதே
கை விரித்து வெளியேற்றிடுவோம்
எப்போதும் உழைத்துக்
கொண்டிருக்கும்
நாங்கள் உன்னால் இப்போது வீட்டிலே முடங்கிக் கிடக்கிறோம்
வெளியே செல்ல முடியாமல்
தேவையானவை
வாங்க முடியாமல்
வேதனையில்
தவிக்கின்றோம்
இன்னும் எத்தனை நாட்கள் இந்தக்
கொடுமை என்று தெரியாமல் உயிர் பயத்தில் துடிக்கிறோம்
இதுவரை நீ எடுத்த
உயிர்களே போதும்
இன்னும் உன் பசி
தீரவில்லையா?
கோரோனா உயிரியே
நிறுத்து உன்
ஆட்டம்
இல்லையேல்
மனித நடமாட்டம்
இல்லாமல்
வெறிச்சோடிப்
போய்விடும்
இந்த பூமி.