എ. എൽ. പി. എസ്. സോത്തുപാറെ

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
15:10, 15 മാർച്ച് 2024-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- Palaniselvi. R (സംവാദം | സംഭാവനകൾ)



സ്കൂൾസൗകര്യങ്ങൾപ്രവർത്തനങ്ങൾക്ലബ്ബുകൾചരിത്രംഅംഗീകാരം
ALPS Sothuparai
എ. എൽ. പി. എസ്. സോത്തുപാറെ
കോഡുകൾ
സ്കൂൾ കോഡ്30345 (സമേതം)
അവസാനം തിരുത്തിയത്
15-03-2024Palaniselvi. R




ചരിത്രം

முன்னுரை

சந்தன மரங்கள் சூழ அமைந்துள்ள மறையூரில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் சோத்துப்பாறை எஸ்டேட் அமைந்துள்ளது சுற்றிலும் நான்கு புறமும் தேயிலை காடுகள் சூழ சோத்துப்பாறை ஆரம்பப்பள்ளி அமைந்துள்ளது குண்டு மலை பேக்டரி டிவிஷனில் இருந்தும் பென்மொர் டிவிஷனி லிருந்தும்இருந்தும் குண்டுமலை நியூ டிவிஷனில் இருந்தும் சோத்துப்பாறை ஆரம்ப பாடசாலைக்கு குழந்தைகள் வந்து படிக்கும் விதத்தில் எங்கள் பள்ளி நடுவில் அமைந்துள்ளது ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை தமிழ் மாணவர்களும் வடமாநிலத்தில் இருந்து பயிலும் மாணவர்களும் இப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றார்கள் 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து பெற்றோரின் உதவியுடன் Pre  Primary வகுப்பு நடைபெற்று வருகிறது.

நோக்கங்கள்.

அனைத்து மாணவர்களுக்கும் இலவச கல்வி வழங்குவதை உறுதிப்படுத்தவும் Pre Primary  முதல் நான்காம் வகுப்பறை அடிப்படையிலும் பாடத்திட்டத்திற்கு ஏற்றதாக உள்ள மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம் கொடுத்து இப்பள்ளி செயல்பட்டு வருகின்றது அதற்கான செயல்திட்ட காலண்டர் ஒவ்வொரு வருடமும் வடிவமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

  கற்றலிலும் கற்பித்தலிலும் திறமைக்கேற்பவும். மகிழ்ச்சியானதாகவும் உருவாகும் விதத்தில் பல்வேறு செயல் திட்டங்களை வடிவமைத்து செயல்பட்டு வருகிறது.

தற்போது நமது அரசின் உதவியுடன் மாணவர்களுக்கு எல்லா நிலையிலும் கற்றலில் உதவி செய்வதற்காக ICT பயன்படுத்தி குழந்தைகளுக்கான அனைத்து திறன்களையும் பெற வழிவகை செய்கிறோம்

பள்ளியின் வரலாறு

1950இல் டாடா கம்பெனியில் FEEDER SCHOOL  தொடங்கப்பட்டது. எஸ்டேட் தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்காக இக்கல்வி முறை தொடங்கப்பட்டது 1953இல் சோத்துப்பாறை ஆரம்ப பாடசாலை துவங்கப்பட்டது அன்று முதல் இப்பள்ளி அரசு உதவி பெறும் ஆரம்ப பாடசாலையாக செயல்பட்டு வருகின்றது இங்கு ஒன்றாம் வகுப்பில் இருந்து நான்காம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள் எமது பள்ளி HRE ஸ்கூல் கார்ப்பரேட் மேனேஜ்மென்டால் நடத்தப்பட்டு வருகின்றது இப்பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித்தனி வகுப்பறை உள்ளது   ஒரு அலுவலக அறையும் உள்ளது.  அதனைத் தொடர்ந்து இப்பள்ளியில் நான்கு ஆசிரியர்கள் வேலை செய்து வருகின்றார்கள் இந்த வருட கணக்கெடுப்பின்படி ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை எமது பள்ளியில் 34 குழந்தைகளும்  Pre Primary 7 குழந்தைகளும் கல்வி பயின்று வருகின்றார்கள்  நமது பள்ளி மேலாளர் பள்ளிக்கு தேவையான மெயின்டனன்ஸ் தேவைகளை வருடம் தோறும் செய்து கொடுத்து வருகின்றார்கள் PTA MPTA SRG  SSG OSA போன்ற சமூக கட்டமைப்புகள் எமது பள்ளிக்கு தொடர்ந்து உதவி செய்து பள்ளியின் மேன்மைக்காக  சேவை செய்து வருகிறார்கள்

ഭൗതികസൗകര്യങ്ങൾ

മുൻ സാരഥികൾ

പ്രശസ്തരായ പൂർവവിദ്യാർത്ഥികൾ

വഴികാട്ടി

വിദ്യാലയത്തിലേക്ക് എത്തുന്നതിനുള്ള മാർഗ്ഗങ്ങൾ

ഈ താളിന്റെ വഴികാട്ടി എന്ന തലക്കെട്ടിനുതാഴെ നൽകിയിട്ടുള്ള വഴികാട്ടി കൃത്യമല്ല എന്നു കരുതുന്നു. സ്കൂളിലെത്താനുള്ള വഴിയും സ്കൂളിന്റെ ലൊക്കേഷൻ കാണിക്കുന്നതിന് OpenstreetMap ഉം ചേർക്കാമോ?
{{Slippymap|lat= |lon= |zoom=30|width=80%|height=400|marker=yes}} എന്നത് പകർത്തി അക്ഷാംശം, രേഖാംശം എന്നിവ ചേർക്കുക.
മാപ് ചേർത്തശേഷം {{map}} എന്ന ഫലകം താളിൽ നിന്ന് നീക്കം ചെയ്യാവുന്നതാണ്.
സഹായം ആവശ്യമെങ്കിൽ ഉപജില്ലാ ചുമതല വഹിക്കുന്ന കാര്യനിർവാഹകരെ ബന്ധപ്പെടാവുന്നതാണ്.
"https://schoolwiki.in/index.php?title=എ._എൽ._പി._എസ്._സോത്തുപാറെ&oldid=2235923" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്