லிட்டில் கைட்ஸ்


பள்ளியில் லிட்டில் லிட்டில் கைட்ஸ் ஆனது மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதை பள்ளியில் முதலில் துவக்கி வைத்தவர் டோமிக் ஆசிரியரும் , திவ்யா ஆசிரியரும் ஆவர்கள். இப்போது இதை நடைமுறைப்படுத்தி வருபவர்கள் சோபி டீச்சரும் , திவ்யா டீச்சரும் ஆவார்கள் .இந்த ஆண்டு லிட்டில் கைட்ஸ் மாணவர்களை ஆன்லைன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் . மொத்தம் 52 மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்த னர் அதில் நாற்பத்தி ஒன்பது மாணவர்கள் பங்கேற்றனர் 30 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர் . ஜெயிப்பதற்கான மதிப்பெண்களுக்கு மேற்பட்ட மதிப்பெண்கள் மாணவர்கள் வாங்கினாலும் எங்கள் பள்ளியில் 15 மடிக்கணினிகள் கொடுக்கப்பட்டதன் காரணமாக அதனுடைய 2 மடங்கு மாணவர்கள் , 30 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர் . பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள் ,செவ்வாய், புதன் மதியம் 2 .30 மணி முதல் மதியம் 3.30 மணி வரை வகுப்புகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன .வகுப்புகள் ஐ.டி .லேபிள் வைத்து நடைபெறுகின்றன. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு வியாழன், வெள்ளி ,சனி ஆகிய நாட்களில் மதியம் 1 முதல் 2 மணி வரை வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

"https://schoolwiki.in/index.php?title=லிட்டில்_கைட்ஸ்&oldid=1298782" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്