ഉള്ളടക്കത്തിലേക്ക് പോവുക

വിമല ഹൃദയ എച്ച്.എസ്. വിരാലി/അക്ഷരവൃക്ഷം/காட்டுவளமே நாட்டுவளம்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
 காட்டுவளமே நாட்டுவளம்    

முன்னுரை : முன்னொரு காலத்தில் மனிதன் விலங்குகளுடன் விலங்காய் காடுகளைத் தானே தன்னுடைய வீடுகளாய் கொண்டு வாழ்ந்தான். காடு கொடுத்து நாடாக்கிய மன்னர்களுமுண்டு, மனிதர்களுமுண்டு. மரமேகங்களாகிய காடுகள் இல்லையென்றால், நாடுகள் மழை இன்றி  பாலைவனமாகி பொரிந்து, கரிந்து, எரிந்து போகும்.  காடுகளின் சிறப்பு : இந்தியாவில் மொத்த நிலப்பரப்பில் 20 விழுக்காடுகள் காடுகளே. கடல்நீர் கதிர்காரங்களால் ஆவியாகி, மேகமாகி மேலே போகிறது. வானளவு வளர்ந்த மரங்கள் குளிர்காற்று வீசி, மழையை வரவைக்கிறது. மண்ணுக்குள் இருக்கும் நீரையும் வேர்மூலம் வெளிக்கொணர்ந்து இலை மூலம் மேலே ஆவியாக அனுப்புகின்றன. மக்கள் வாழ காடுகளை அழித்தனர். அதுவே, மக்கள் வாழ வகைசெய்யும் மழையை தடுத்து, காற்றைக் கெடுத்து, மனித வர்கத்தைமண்ணுக்குள் போக வைக்கும், வேக வைக்கும் வேதனையைத் தருவதாயிற்று. காடுகளின் பயன்கள் : காடுகளால் தொழில்வளம் பெருகுகிறது. பொருளாதாரம் புணர் வாழ்வு பெறுகிறது. காடுகளால் மாடுகளும், ஆடுகளும், மேய்ந்து வாழ்கின்றன, வளர்கின்றன, பயன்தரும் விலங்குகளின் வீடுகள் அவை தாமே! காடுகளில் தேக்கு, நூக்கு, கருங்காலி உள்ளிட்ட பல்வேறு பயன்படு மரங்கள் உற்பத்தியாகின்றன. சந்தன மரக்காடுகளால் எவ்வளவு பெரிய பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது. பழைய காடுகள் அழிவுகள் தாமே, நிலக்கரி என்னும் கருப்பு வைரத்தை நாட்டிற்கு அளித்தன. காடுகளால் தட்பவெப்ப நிலைகள் சீராக்க படுகின்றன. மருந்து மரங்களும், இலைகளும், தழைகளை இந்தக் காடுகளில் ஏராளம் உண்டே ! தேன், சந்தானம், யானைத் தந்தம் போன்ற எல்லாவற்றிற்கும் காடுகள்தாமே கருவூலங்கள் ! காடுகள் அழியக் காரணம் : நாடுகளாக்கக் காடுகளை அழித்தனர். நல்ல பயன்பெற மரங்களை வெட்டினர், வீடு காட்டினார், வெளிநாட்டிற்கும் விற்றனர். தீயென்னும் நாக்குத் தினவெடுத்த போதெல்லாம் காடுகளை விழுங்கிக் கண்காட்சி காட்டினர். தீயவர்கள் மரம் திருடக் காடுகளன்றோ பாடுகள் பட்டன, படுகின்றன. வருமுன் காப்போம்: நாடுகள் அழிந்து பாடுகள் பெருகாமல் இருக்க அரசாங்கமே காட்டிலாக்கா ஒன்றை ஏற்ப்படுத்திக் கண்காணிக்கிறது. நாமும் அதற்கு நனி உதவுவோம் ! முடிவுரை : வேலியே பயிரை மேயாமல், நாட்டின் வேலியாய் விளங்கும் காடுகளைக் காப்போம்! காடுகள் வளர்ப்போம்! வீட்டுக்கு ஒரு மரம் நடுவோம்! "வீடு எப்போது தரப்போகிறீர்கள்?" எனக் கேட்காதீர்கள். இருக்கின்ற வீட்டு வளைப்பில் மரம் நாடுங்கள்!