"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2023-24" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

No edit summary
No edit summary
വരി 12: വരി 12:
|}
|}
சுற்றுச்சூழல் தின  நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை டி. ஜெயலட்சுமி வரவேற்புரை வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி. மோகன்தாஸ் தலைமை வகித்தார். கல்வி நிலைக்குழுத் தலைவர் கே. சுமதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மேலும் சுற்றுச்சூழல் ஆர்வலரும், பிஆர்சி பயிற்சியாளருமான கிருஷ்ணமூர்த்தி தயாரித்த பல்வேறு வகையான பறவைகளின் படங்களின் கண்காட்சி இடம்பெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் லீலா மந்திரத்தில் நடைபெற்ற கேரளாவின் பல்வேறு பறவைகளின் படக் கண்காட்சியைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் முன் தொடக்கப் பள்ளி முதல் நான்காம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கான சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுற்றுச்சூழல் தினம் தொடர்பான கவிதைகள், உரைகள் மற்றும் செய்திகள் போன்ற நிகழ்ச்சிகளை குழந்தைகள் நிகழ்த்தினர். இந்த ஆண்டுக்கான சுற்றுச்சூழல் தின உறுதிமொழியை 4-ம் வகுப்பு படிக்கும் ஸ்ரேயாதாஸ் அனைவருக்கும் எடுத்துரைக்க, குழந்தைகள் அனைவரும் அதை ஏற்றுக் கூறினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு ஆசிரியை சுனிதா நன்றி கூறினார். மதியம் 2 மணிக்கு சுற்றுச்சூழல் தின வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

===வாசிப்பு தினம்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-reading day23.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-reading day 23.jpg|200px]]
|-
|}
இந்த ஆண்டு வாசிப்பு தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டது. பெற்றோர்கள் புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்க பள்ளியில் "வாயனாமித்திரம்" என்னும் பெயரில் திறந்தவெளி நூலகம் அமைக்கப்பட்டது. சித்தூர் தத்தமங்கலம் பேரூராட்சி கல்வி நிலைக்குழுத் தலைவர் கே.சுமதி, பெற்றோருக்கு புத்தகங்கள் வழங்கி வாயன மித்திரத்தை துவக்கி வைத்தார். வாசிப்புதின கலைநிகழ்ச்சிகளைஓய்வு பெற்ற ஏஇஓ சி. ஸ்வர்ணகுமாரி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியை டி. ஜெயலட்சுமி வரவேற்புரையும், பிடிஏ தலைவர் பி.மோகன்தாஸ் தலைமையும் வகித்தார். ஜூன் 19-ம் தேதியை வாசிப்பு நாளாகக் கொண்டாடுவதன் முக்கியத்துவம் குறித்தும், படிக்கும் காலத்தில் வாசிப்பு தின அனுபவங்கள் குறித்தும், தொடக்க விழாவில் சி. ஸ்வர்ணகுமாரி குழந்தைகளிடம் உரையாற்றினார். SMC தலைவர் கே.பி.ரஞ்சித் மற்றும் PTA துணைத் தலைவர் ஜி. சுகதன் நிகழ்ச்சிக்கு வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியை சுனிதா. எஸ் நிகழ்ச்சிக்கு நன்றியுரை வழங்கினார்.
பள்ளியில் உள்ள வகுப்பு நூலகத்தை ஊக்குவிக்கும் வகையிலும் பள்ளி நூலகத்தில் உள்ள புத்தகங்களை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது. அனைத்துக் குழந்தைகளும் புத்தகக் கண்காட்சியைப் பார்த்து, அவர்கள் விரும்பும் புத்தகத்தைக் கண்டறிவதற்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. பின்னர் குழந்தைகளின் வாசிப்பு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வகுப்பு நூலகத்திற்கு புத்தகங்களை வழங்குவதற்காக ``குழந்தையின் கையில் ஒரு புத்தகம்'' என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. குழந்தைகள் நிறைய புத்தகங்களை வகுப்பு நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினர்.
===சர்வதேச யோகா தினம்===
ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தையொட்டி நடைபெற்ற சிறப்புக் காலைக் கூட்டத்தில் தலைமையாசிரியை டி.ஜெயலட்சுமி, யோகா தினத்தின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு அறிவுறுத்தினார். யோகா பயிற்சியாளர் ரஞ்சிமா டோளி குழந்தைகளுக்கு யோகாசனங்களை விளக்கினார். சில யோகாசனங்கள் செய்து காண்பித்து, குழந்தைகளையும் செய்ய வைத்தார். எல்லாக் குழந்தைகளும் அவர் செய்வது போல் யோகாசனங்களைச் செய்ய முயற்சித்தனர். ஆசிரியை எஸ். சுனிதா நன்றியுரை கூறினார்.
===உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினம்===
நவீன தலைமுறையினரிடையே அதிகரித்து வரும் போதைப் பொருட்களின் பயன்பாட்டைத் தடுப்பதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் போதைப்பொருள் எதிர்ப்பு தின உறுதிமொழி காலைக் கூட்டத்தில் வைத்து அனைவரும் கூறினர். எல்.பி.பிரிவு கட்டிடத்திற்கு முன்புறம் உள்ள மைதானத்தில் மேல்நிலைப்பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் ரமித் தலைமையில் NO DRUGS என்று பெரிதாக எழுதி குழந்தைகளை அதே வடிவில் வரிசையாக நிறுத்தப்பட்டது. அனைத்து குழந்தைகளும் போதைப்பொருளுக்கு எதிராக சுவரொட்டிகள் மற்றும் முத்திரை வாக்கியங்களை உருவாக்கி வந்ததை வைத்து போதைக்கு எதிரான பிரச்சார ஊர்வலம் நடத்தப்பட்டது.