ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/അംഗീകാരങ്ങൾ/தமிழ்/2018-19ல் பெற்ற அங்கீகாரங்கள்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
സ്കൂൾസൗകര്യങ്ങൾപ്രവർത്തനങ്ങൾക്ലബ്ബുകൾചരിത്രംഅംഗീകാരം

2018-19 ல் பெற்ற அங்கீகாரங்கள்

ஸ்கூல்விக்கி- பாலக்காடு மாவட்டத்தில் இரண்டாம் இடம்

நமது விக்டோரியா அரசு ஆரம்பப் பள்ளிக்கு ஒரு பொன் மகுடம் கூட ! ஆமாம் அனைத்து ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் மிக மிக மகிழ்ச்சி அடைந்த தருணம் ஆகும் அது. மாநிலத்தில் மிகவும் நல்ல முறையில் ஸ்கூல்விக்கி பதிவு செய்கின்ற பள்ளிகளுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாநில அளவில் முதலிடம் பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 50 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 25 ஆயிரம் ரூபாயும் மற்றும் சான்றிதழ்களும், விருதுகளும். மாவட்ட அளவில் முதல் பரிசாக பத்தாயிரம் ரூபாயும், ஐந்தாயிரம் ரூபாயும் மற்றும் சான்றிதழ்களும், விருதுகளும். துவக்கம் முதல் ஸ்கூல் விக்கி செயல்பாடுகளுக்கு முன்னோடியாக இருந்த மலப்புரம் மாவட்டத்தில் KITE னுடைய முதன்மை பயிற்சியாளரான திரு. கே. சபரீஷ் அவர்களின் நினைவாக இவ்விருது வழங்கப்பட்டது. ஸ்கூல்விக்கி - 2018 என்னும் போட்டியில் நமது விக்டோரியா அரசு ஆரம்பப் பள்ளி என்னும் குட்டி பள்ளிக்கூடமும் பங்கேற்றது. 15000 பள்ளிகளுக்கு மேல் அங்கங்களாக உள்ள ஸ்கூல்விக்கியில் அனேகம் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை வென்று பாலக்காடு மாவட்டத்தில் இரண்டாவது இடத்தை நமது விக்டோரியா அரசு ஆரம்பப் பள்ளிக்கூடம் சொந்தமாக்கியது..

செஸ் சாம்பியன்- 2018

பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கான செஸ் சாம்பியன் 2018 போட்டியில் நமது பள்ளியிலிருந்து மூன்று மாணவர்கள் பங்கேற்றனர். எல்.கே.ஜி முதல் நான்காம் வகுப்பு வரை உள்ள பிரிவில் இரண்டாவது இடம் பிடிக்கவும் செய்தனர். வைகப்பிரபா.கெ.எ, ஸனிகா. எஸ்,ஸ்ரியா. எஸ் என்கின்ற மாணவிகளே பங்கேற்றனர். இம்மாணவிகள் மாநில அளவில் விளையாடுவதற்கான மிகப்பெரும் வாய்ப்பைப் பெற்றனர். வைகப்பிரபா இரண்டாவது ஜொலிக்கும் வெற்றியைக் கைப்பற்றினாள். ஸனிகா மூன்றாவது இடத்தையும், ஸ்ரீயா மிகச் சிறப்பாகவும் விளையாடினர். இதற்கான மெடல்களும், சான்றிதழ்களும், விருதுகளும் பெற்றனர். மிகச்சிறந்த மாணாக்கர்களை உருவாக்கியதற்கும் பள்ளியின் மேன்மைக் கண்டும் அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கு ஒரு விருதும் போட்டியில் கிடைத்தது.


எல்.எஸ்.எஸ் வெற்றி

அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளியின் வெற்றிகளில் எடுத்துச் சொல்ல வேண்டிய ஒன்றாகும் வருடந்தோறும் அதிகரித்து வரும் எல்.எஸ்.எஸ் குழந்தைகளின் எண்ணிக்கை. ஒவ்வொரு வருடமும் சிறப்பான வெற்றிகளை குவித்து வருகின்றனர் இங்குள்ள குழந்தைகள். 2018 - 19 கல்வி ஆண்டில் நமது பள்ளியில் ஸ்ரீயா. எஸ், ஆராமிகா. ஆர், சனிகா. எஸ், வைகப்பிரபா. கெ.எ, சூர்யா சுனில்குமார். எஸ், சிவானி. ஆர் என்னும் ஆறு குழந்தைகள் எல்.எஸ்.எஸ் பெற்றனர். நம் பள்ளியை சித்தூர் தாலூக்காவிலேயே அதிக எல்.எஸ்.எஸ் பெற்ற பள்ளிகளில் ஒன்றாக திகழச் செய்தது இந்த அழிவுக் கதிர்களே.

முறையான பயிற்சி

எல்.எஸ்.எஸ்ஸிற்கு பள்ளியில் மிக முக்கியத்துவம் அளிப்பதுண்டு. ஆசிரியர்களுடையவும், குழந்தைகளுடையவும் கடின உழைப்பே ஒவ்வொரு வருடமும் கூடுதல் குழந்தைகள் எல்.எஸ்.எஸ் பெறுகின்றனர் என அறிந்துகொள்ள முடியும். தேர்வு எழுதும் குழந்தைகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்பது அவர்களின் தன்னம்பிக்கையும், உறுதியும் அதிகரிக்கிறது. நம் பள்ளியின் எல்.எஸ்.எஸ் வெற்றிச் சரித்திரத்தின் அடிப்படை இங்கிருந்து குழந்தைகளுக்கு அளித்து வருகின்ற ஒழுங்கான பயிற்சியாகும். ஒவ்வொரு வருடமும் கற்றல் முறையில் ஏற்படுத்துகின்ற மாற்றங்கள் குழந்தைகளின் வெற்றி சதவீதத்தை அதிகரிக்கிறது என்பது ஆச்சரியத்திற்குரியதாகும். பள்ளியில் எல்.எஸ்.எஸ்ஸிற்கு அளித்து வருகின்ற முறையான பயிற்சியைக் கண்டு ஏராளமான குழந்தைகள் இங்கு வந்து சேர்கின்றனர். எங்களது பள்ளியில் எல்.எஸ்.எஸ் பயிற்சி அளிப்பது திரு. பவில்தாஸ் ஆசிரியராவார்.அவரது அர்ப்பண மனப்பான்மையும், முறையான கற்பித்தல் செயல்பாடுகளுமே எல்.எஸ்.எஸ் வெற்றியின் ரகசியம். குழந்தைகளுக்கு ஆசிரியரோடுள்ள அன்பும், கற்றல் செயல்பாடுகளில் பயன்படுத்திய எளிமையான தந்திரங்களுமே குழந்தைகளுக்கு எல்.எஸ்.எஸ் தேர்வின் மீதுள்ள பயத்தைப் போக்கி அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கின்றது. ஒவ்வொரு வருடத்தினுடையவும் வினாத்தாள்களை அலசி ஆராய்ந்து, தேர்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை புரிந்துகொண்டு கற்றல் செயல்பாடுகள் திட்டமிடப்படுகின்றது.