ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2018-19

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
21:07, 11 ഡിസംബർ 2019-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- 21302 (സംവാദം | സംഭാവനകൾ) ('<font color=green><font size=6><center><u>'''''2018-19 கல்வி ஆண்டின் செயல்பாடு...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു)
2018-19 கல்வி ஆண்டின் செயல்பாடுகளும், தினக் கொண்டாட்டங்களும்

ஜூன்

பள்ளி நுழைவுத் திருவிழா

நமது பள்ளியில் ஜூன் ஒன்றாம் நாள் நுழைவு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்கு எழுத்துக்களாலான கிரீடம் அணிவித்தோம். பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் குழந்தைகளுக்கு பரிசுப்பைகள் வழங்கினர். நுழைவுத் திருவிழாப் பாடல் அனைவரும் கேட்கும்படி செய்தோம். கல்வி அமைச்சரின் உறுதிமொழியை அனைவரும் கூறினோம். பள்ளிச் சீருடை மற்றும் புத்தகங்கள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. வார்டு கவுன்சிலர் திரு. சிவகுமார் அவர்கள் விழாவினைத் தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பின்பு அனைவருக்கும் லட்டு வழங்கப்பட்டது.

உலக சுற்றுப்புற தினம்

உலக சுற்றுப்புற தினமான ஜூன் 5 ஆம் நாள் சுற்றுப்புற தின உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். குழந்தைகளுடைய பதிப்புகளும் வெளியிடப்பட்டது. தலைமையாசிரியை திருமதி. ஷைலஜா அவர்கள் உலக சுற்றுப்புற தினம் கொண்டாடுவதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் பற்றி குழந்தைகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தைக் குறைக்க வேண்டும் என அனைவரிடமும் கேட்டுக்கொண்டார். பின்பு குழந்தைகளுடைய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் சுற்றுப்புறத்தோடு தொடர்புடைய பாடல்கள், கவிதைகள், குறிப்புகள் போன்றன இடம்பெற்றன. குழந்தைகள் ப்ளக்கார்டு பிடித்துக்கொண்டும் பேட்ஜ் அணிந்து கொண்டும் சுற்றுபுற தின ஊர்வலம் நடத்தினர். கவுன்சிலர் திரு. சாமிநாதன் அவர்கள் மரக்கன்றுகள் நட்டு, சுற்றுப்புற தினத்தை தொடங்கி வைத்தார்.அனைத்து குழந்தைகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

முன்னறி சோதனை

ஜூன் 11 ஆம் தேதி வேறு பள்ளிகளிலிருந்து புதிதாக வந்து சேர்ந்த குழந்தைகளுக்கு முன்னறிவு சோதனை நடத்தப்பட்டது.


ஹலோ இங்கிலீஷ்

ஜூன் 12-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை ஹலோ இங்கிலீஷ் வகுப்பு ஐந்து நாட்கள் இரண்டு மணிக்கூர் வீதம் அனைத்து வகுப்புகளிலும் நடத்தப்பட்டது.


அய்யன்காளி நினைவு தினம்

அய்யன்காளி நினைவு தினமான ஜூன் 18-ம் தேதி சமூக சீர்திருத்தவாதியான அய்யன்காளி அவர்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி, அவரது சேவைகள் பற்றியும் குழந்தைகளுக்கு அறியச் செய்தோம்.


வாசிப்பு வாரம்

ஜூன் 19 பி.என் பணிக்கரின் நினைவு நாளை வாசிப்பு தினமாக கொண்டாடினோம். வாசிப்பு தின வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. தலைமையாசிரியை திருமதி. ஷைலஜா அவர்கள் முன்னிலையில், குழந்தைகள் கவிதைகள், கதைகள், பி.என் பணிக்கரை பற்றின குறிப்புகள் போன்றவற்றைக் கூறினர். தலைமையாசிரியை அனைவருக்கும் வாசிப்பு தினத்தின் முக்கியத்துவத்தை விவரித்துக் கொடுத்தார். வகுப்பு நூலகமும், பள்ளி நூலகமும் இயன்ற அளவு பயன்படுத்தி வாசிப்புக் குறிப்பு எழுதுவதற்கு குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஒரு வாரம் முழுவதும் வாசிப்பு வாரமாக கொண்டாடப்பட்டது. தமிழ் மற்றும் மலையாள சங்கங்களின் தொடக்கமும், முடிவும் ஒரே நாளில் நடத்தப்பட்டது.

யோகா தினம்

ஜூன் 21 ஆம் நாள் யோகா தினம் கொண்டாடப்பட்டது. திருமதி. கிருஷ்ணம்மாள் அவர்கள் யோகா செய்தும், மாணவர்களை செய்ய வைத்துக் கொண்டும் யோகா தினத்தைத் தொடங்கி வைத்தார். அன்று முதல் குழந்தைகளுக்கு யோகா வகுப்பு தொடங்கப்பட்டது. வாழ்க்கையில் யோகாவிற்கு உள்ள முக்கியத்துவத்தை அனைத்துக் குழந்தைகளும் புரியும் விதத்தில் எடுத்துரைத்தார்.