ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /குழுக்கள்/அறிவியல் குழு
സ്കൂൾ | സൗകര്യങ്ങൾ | പ്രവർത്തനങ്ങൾ | ക്ലബ്ബുകൾ | ചരിത്രം | അംഗീകാരം |
அறிவியல் குழு
அறிவியல் மன்றம் என்பது என்ன? குழந்தைகளில் அறிவியல் கண்ணோட்டமும், தேடலுக்கான உற்சாகத்தையும் ஊக்குவித்து, சிந்தனையைத் தூண்டும் திறமைகளை வளர்த்தி எடுப்பதுதான் அறிவியல் மன்றங்களின் முக்கிய வேலையாகும். மாணவர்களிடையே கேள்வி கேட்பதற்கான மனப்பான்மையும், சேகரித்தல் என்ற மனப்பான்மை, சோதனைகள் செய்து உண்மைகளைக் கண்டறியும் திறன் போன்றவையும் இதன் மூலமாக வளர்கின்றது. ஒவ்வொரு வகுப்பிலும் அறிவியல் மனப்பான்மை மிக்க ஒரே நோக்குள்ள குழந்தைகள் ஒன்றாகச் செயல்பட்டுத்தான் அறிவியல் மன்றம் என்பது உருவாகிறது. ஒவ்வொரு வருடமும் அறிவியல் விழாக்களில் எங்கள் பள்ளி பரிசு பெறுவதில் இம்மன்றத்தின் செயல்பாடு பெரிதும் துணைபுரிகிறது.குழந்தைகளில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கான மிகச்சிறந்த ஒரு ஊடகமாகும் அறிவியல் சங்கம். இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு வருடமும் ஜூலை 21ஆம் தேதி சந்திர தினத்தன்று எங்களது பள்ளியிலும் அறிவியல் குழு தொடங்கப்பட்டு செயலாற்றி வருகிறது.
வசதிகள்
- பள்ளியில் ஒரு அறிவியல் ஆய்வுக்கூடம் உண்டு.
- எளிய சோதனைகள் செய்வதற்குத் தேவையான சோதனைக் கருவிகளும் எங்களது ஆய்வுக்கூடத்தில் உள்ளன. சோதனைக் குழாய்கள், கண்ணாடி டம்ளர்கள், ஸ்பிரிட் விளக்குகள், லென்சுகள், மைக்ரோஸ்கோப், பலவித அமிலங்கள், பீக்கர்கள் போன்ற ஒரு தொடக்கப்பள்ளி அறிவியல் ஆய்வுக் கூடத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் இங்கு உண்டு.
செயல்பாடுகள்
- மாதத்திற்கு ஒன்று, இரண்டு முறையாவது அறிவியல் குழு உறுப்பினர்கள் ஒன்று கூடுவதுண்டு.
- சோதனைகள் செய்து காண்பிக்கின்றனர். சிறிய கலந்துரையாடல்களும் நடத்தப்படுகிறது.
- அறிவியல் அறிஞர்களை அறிமுகம் செய்தல்.
- குட்டித் சோதனைகள் என்னும் பெயரில் புதுமையான ஒரு நிகழ்ச்சி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் பள்ளிக் காலைக் கூட்டத்தில் ஒவ்வொரு வகுப்பினராக சோதனைகள் செய்து காண்பிக்கின்றனர். இவ்வாறு 50 நாட்களில் செய்கின்ற அனைத்து சோதனைக் குறிப்புகளையும் ஒன்று சேர்த்து குட்டிச் சோதனைகள் என்னும் பெயரில் ஒரு பதிப்பு வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- டிசம்பர், ஜனவரி மாதங்களில் நாங்கள் ஒரு வான ஆராய்ச்சி நடத்துவதுண்டு. தொலைநோக்கியின் (டெலஸ்கோப்) வழியாக வானத்தை மிக அருகில் காண்பதற்கும் கிரகங்களையும் நட்சத்திரக் கூட்டங்களையும் உற்றுநோக்குவதற்கும் இதனால் முடிகிறது.