ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/ക്ലബ്ബുകൾ/தமிழ்/வித்யாரங்கம்/நாட்டுப்புறப்பாடல் கூட்டம்
സ്കൂൾ | സൗകര്യങ്ങൾ | പ്രവർത്തനങ്ങൾ | ക്ലബ്ബുകൾ | ചരിത്രം | അംഗീകാരം |
நாட்டுப்புறப்பாடல் கூட்டம்
நாட்டுப்புறப்பாடல் பாடும் திறனுள்ள குழந்தைகளை ஒன்றுசேர்த்து நாட்டுப்புறப்பாடல் கூட்டம் உருவாக்கப்பட்டது. கூடுதல் குழந்தைகள் விரும்புகின்ற ஒரு கலையே நாட்டுப்புறப்பாடல் . நல்ல ஒரு நாட்டுப்புறப் பாடலைப் பாடிக்கொண்டு திருமதி. லில்லி ஆசிரியை இக்கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். தலைமையாசிரியை திருமதி. ஷைலஜா அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் பபிதா ஆசிரியை குழந்தைகளுக்கு நல்ல நாட்டுப்புறப் பாடல் ஒன்றை சொல்லிக் கொடுத்து குழந்தைகளையும் சொல்ல வைத்தார். மேலும் நாட்டுப்புற பாடல் என்றால் என்ன என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தார். நாட்டுப்புறப் பாடலுக்கு மொழி இல்லை. இது நமது முன்னோர்களிலிருந்து மரபுவழி வந்தது. நாட்டுப்புற மொழிகளே நாட்டுப்புறப்பாடலின் முதுகெலும்பு. ஒரு நாட்டின் உயிர்நாடியே நாட்டுப்புற பாடல் எனப்படுகிறது. பண்டிதர், பாமரர் என்ற வேறுபாடின்றி அனைவரும் ரசிக்கக்கூடிய ஒன்றே நாட்டுப்புறப்பாடல். பண்டைய காலத்தில் நாட்டின் உயிர்நாடியாக இருந்த நமது நாட்டுப்புற பாடல்கள் தற்போது குறைந்து கொண்டே இருந்தாலும் இன்றும் இக்கலைக்கு தனிப்புகழும் சிறப்பும் உண்டு என்று ஆசிரியர் கூறினார். பின்பு குழந்தைகளது நாட்டுப்புறப்பாடல் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.