ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /நாட்டுப்புற கலைக்களஞ்சியம்/வட்டாரச்சொற்களும் பொருளும்
வட்டாரச்சொற்களும் பொருளும்
ஒவ்வொரு ஊர்களும் அவ்வட்டாரங்களுக்கேற்ப தனித்தன்மையுடன் விளங்கும். சித்தூரிலும் அதன் உட்பிரதேசங்களிலும் சில வட்டார மொழி வழக்குகள் வழங்கி வருகின்றன. சித்தூருக்கே உரித்தான சில வட்டார வழக்குச் சொற்களை காண்போம்.
- மூச்சி மரம் = மாமரம்
- வன்னர்க்கணு = வந்து விட்டார்
- கற்றக்களம் = நெற்கதிர் அறுவடை செய்து போர்அடிக்கும் இடம்
- மரிப்பு = மரணம்
- கூளன் குட்டி= எருமைக்கன்று
- பெரப்புறம் = மேற்கூரை
- களயுக = தூக்கி எறிதல்
- மாந்து = அரித்தல்
- கள = பாழ்ச்செடிகள்
- தொகர்த்து = தலை துவட்டும் துண்டு. (துவர்த்தும் முண்டு)
- மண்ட = தலை
- மோந்து = குடி
- முடுக்கு = துரத்துவது
- அகிறு = அழுதல்
- கண்ணு கடி = பொறாமை படுதல்
- மோந்தி = அந்திமாலை (மூவந்தி திரிந்த சொல்)
- சொள்ளை = கொசு
- கைக்கோட்டு = மண்வெட்டி/தூம்ப
- கொடுவாள் = அரிவாள் / மடாள்
- சரக்குனு = திடீரென
- அலுக்கு பேப்பர் = பிளாஸ்டிக் காகிதம்
- கொர = இருமல்
- பெலர்ச்சய்க்கு = அதிகாலையில்
- அயர்க்க = தோட்டம் சுத்தம் செய்வது
- அச்சி = குடும்பத் தலைவி
- சொகன்ன = சிவப்பான
- வெக்கம் வெக்கம் = சீக்கிரம் சீக்கிரம்
- வெட்டம் = வெளிச்சம்
- களப்பணி = வயல் வரப்பு திருத்தல்
- சேரும்பழம் = முந்திரிப் பழம்
- கோலாயி = திண்ணை
- செத்தம் = சப்தம்
- சாளவீடு = ஓலைக் குடிசை
- மொகம் = முகம்
- மொகறு = முகம்
- மூஞ்சி = முகம்
- பெல்லம் = வெல்லம்
- பேஜார் = படபடப்பு
- வீத்து = ஊற்றுக
- மக்காறாக்கு = ஏளனம் செய்வது
- கயில் = குழிக்கரண்டி
- தடுக்கு = ஓலைப் பாய்
- குருவட்டி = ஓலையிலான சிறு கூடை
- பெணங்கு = சண்டையிடுதல்
- பொற வட்டு = மரப்பட்டை
- குற்றியற்று போதல் = தலைமுறை அழிதல்/ நாசமாகிப் போவது
- சேறு = சளி
- முச்சகிரி = பயனற்ற தேங்காய்
- கெணறு = கிணறு
- தெங்கும் பட்ட= தென்னை ஓலை
- கோச்சாடை= தென்னம்பூ பட்டை
- புலங்கெட்ட= புத்தியற்ற
- சகட= கிணற்றின் நீர் இறைக்கும் கப்பி
- சப்ப = நிலம் துடைக்கும் துணி
- கொட்டில் = விவசாயக் கருவிகள் வைக்கும் இடம்
- ஈளுங்குச்சி = தென்னங்குச்சி