ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/இணைபாடத்திட்டச் செயல்பாடுகள்/யோகாக்குழு

15:28, 22 ജൂൺ 2022-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- 21302 (സംവാദം | സംഭാവനകൾ) (→‎யோகா ஆசிரியை)
(മാറ്റം) ←പഴയ രൂപം | ഇപ്പോഴുള്ള രൂപം (മാറ്റം) | പുതിയ രൂപം→ (മാറ്റം)

யோகாக் குழு

 

உடல், மனம் மற்றும் ஆன்மா இவை மூன்றும் ஒரே சீராக அமைதிப்படுத்துகின்ற ஒரு அற்புத செயலாகும் யோகா. முறையான யோகாப்பயிற்சி மனிதர்களில் அமைதியையும், சமாதானத்தையும் வளர்க்கிறது. மனித உடலுக்கு சக்தியை அதிகப்படுத்துகின்ற ஒரு செயலாகும் யோகாப்பயிற்சியும் அதனோடு சேர்ந்து பயிற்சிக்கின்ற பிராணாயாமம், தியானம் போன்றனவும். ஒரு குறிப்பிட்ட எல்லை வரை நோய்களைக் குறைக்கவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்கும் யோகாப்பயிற்சி முறை நமக்குப் பெரிதும் உதவுகிறது. மனித உடலின் உள்ளுறுப்புகளைப் பலப்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் இப்பயிற்சி பெரிதும் துணைபுரிகிறது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இத்தகைய நன்மைகள் யாவும் நம் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்னும் நல்ல எண்ணத்தோடு எங்களது பள்ளியில் யோகாக் குழு இனிதே துவங்கப்பட்டது.

யோகாவின் துவக்கம்

2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் நாள் நமது பள்ளியில் கொண்டாடப்பட்ட யோகா தினத்தோடு சேர்ந்து யோகா வகுப்புகளும் துவங்கப்பட்டது. கிருஷ்ணம்மாள், சுனில் தம்பதிகள் யோகா வகுப்பினை துவங்கி வைத்தனர். செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் 3 மற்றும் 4 ஆம் வகுப்புகளுக்கு யோகா வகுப்புகள் நடைபெற்று வருகிறது. குழந்தைகள் மனதில் நல்ல மாற்றம் அனுபவப்படுவதுண்டு. யோகாவில் திறமையுள்ள நல்ல குழந்தைகளை பெற்றோர்களின் அனுமதியுடன் போட்டிகளில் பங்கேற்க வைப்பதுமுண்டு.

யோகா ஆசிரியை

 
கிருஷ்ணம்மாள்

என் பெயர் கிருஷ்ணம்மாள். ஆர். நான் மூன்று வருடங்களாக யோகா ஆசிரியையாக பணிபுரிந்து வருகின்றேன்.கம்பளிச்சுங்கம் என்னும் இடத்தில் வசிக்கிறேன். நான் டிகிரி வரைப் படித்துள்ளேன். மேலும் திருச்சூர் மாவட்டத்திலிருந்து 6 மாத கால அளவிலுள்ள யோகா டிப்ளமோ பயின்றிருக்கின்றேன். இந்த அனுபவத்தை வைத்து நான் யோகா வகுப்பு நடத்தி வருகின்றேன். நமது அரசு விக்டோரியா ஆரம்ப பள்ளியிலும், வேறு சில பள்ளிகளிலும் யோகா பயிற்சி அளித்து வருகின்றேன்.

குழந்தைகளின் யோகாப் பயிற்சி முறை

       
       

ஒவ்வொரு மனிதனும் நல்லது ஆனால் மட்டுமே நம் நாடு நல்லதாகும் என்று கருத்தை உட்கொண்டு யோகாப் பயிற்சி இன்றும் எங்களது பள்ளியில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.