ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /நாட்டுப்புற கலைக்களஞ்சியம்/பிரபலங்கள்

14:21, 7 ഫെബ്രുവരി 2022-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- 21302 (സംവാദം | സംഭാവനകൾ) ('==பிரபலங்கள்== மலையாள மொழியின் தந்தையான எழுத்த...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു)

பிரபலங்கள்

மலையாள மொழியின் தந்தையான எழுத்தச்சனின் சமாதி அமைந்துள்ள சித்தூரில் பல புகழ்பெற்றவர்கள் பிறந்து வளர்ந்த பாரம்பரியம் உள்ளது. சில பிரபலங்களைப் பற்றி அறிவோம்.

பி. லீலா

 
பி. லீலா

1934 மே மாதம் 19 ஆம் தேதி சித்தூர் புறயத்துமனையில் பிறந்தார். இவர் சித்தூர் அரசு விக்டோரியா பெண்கள் பள்ளியில் கல்வி கற்றார். இவர் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவி . இவர் தென்னிந்தியாவின் பிரபல பின்னணி பாடகி. பக்திகானப்ரியா என்றும் அழைக்கப்படுகிறார். இந்திய மொழிகள் மட்டுமின்றி வெளிநாட்டு மொழிகளிலும் 5000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். திரைப்படப் பாடல்கள் மட்டுமின்றி மெல்லிசையும் பக்திப் பாடல்களிலும் புகழ் பெற்றுள்ளார். மலையாளத்தின் பூங்குயில் என்றும் அறியப்படுகிறார். அவர் கேரள மாநில விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது மற்றும் 2006 இல் இந்திய அரசின் பத்மபூஷன் (மரணத்திற்குப் பிந்தைய விருது) ஆகியவற்றைப் பெற்றுள்ளார். பி.லீலா அக்டோபர் 31, 2005ல் காலமானார்.




சாந்தா தனஞ்செயன் (பிரபல நடனக் கலைஞர்)

 
சாந்தா தனஞ்செயன் (பிரபல நடனக் கலைஞர்)

1943, ஆகஸ்ட் 12 ஆம் தேதி பிறந்தார். இவர் சித்தூர் அரசு விக்டோரியா பெண்கள் பள்ளியில் படித்தார். சாந்தா தனஞ்சயன் இந்தியாவின் புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர்களில் ஒருவராவார். இவரது கணவர் வி.பி.தனஞ்செயனும் பிரபல பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார். இவர்கள் தனஞ்சயன்ஸ் என்ற பெயரில் அறியப்படுகின்றனர். சாந்தா தனஞ்செயன் 1955-68 வரை கலை உலகில் பிரபலமான நடனக் கலைஞராக இருந்தார். 1968 இல், மதராஸில் பாரத கலாஞ்சலி என்ற நடன அகாடமியை நிறுவினார். அவர் பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார். 2009 ஆம் ஆண்டு, நாடு அவர்களுக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்தது.




ராதாலட்சுமி பத்மராஜன்

 
ராதாலட்சுமி பத்மராஜன்

பிரபல எழுத்தாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர் பத்மராஜனின் மனைவியே ராதாலட்சுமி பத்மராஜன். பாலக்காடு மாவட்டம் சித்தூரில் 1943 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் புகழ்பெற்ற ஒரு சிறந்த எழுத்தாளராவார். சித்தூர் அரசு விக்டோரியா பெண்கள் பள்ளியில் படித்துள்ளார். பத்மராஜனின் மறைவுக்குப் பிறகு இவர் எழுதிய நினைவுக் குறிப்புகள் குறிப்பிடத்தக்கதாகும். பத்மராஜன் என் கந்தர்வன், நினைவில் பத்மராஜன், காலத்தின் வக்ஷஸ்ஸில் ஒரோர்மத்துருத்து, நினைவுகளின் தூவானத் தும்பிகள் என நான்கு நினைவுக் குறிப்புகளை எழுதியுள்ளார் ராதாலட்சுமி. தணலிடம் என்ற நாவலையும் எழுதியுள்ளார்.




ஸ்வர்ணலதா

 
ஸ்வர்ணலதா

1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி சித்தூரில் உள்ள அத்திக்கோட்டில் பிறந்தார். இவர் பிரபல ஹார்மோனிஸ்ட் கே.சி.செறுகுட்டியின் மகள். ஸ்வர்ணலதா இந்தியாவில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகிகளில் ஒருவராவார். இந்தியாவின் பல்வேறு மொழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இவர் இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். 1989 ஆம் ஆண்டு முதல் பின்னணிப் பாடலில் சிறந்து விளங்கினார். தேசிய மற்றும் மாநில விருதுகளைப் பெற்றுள்ளார். 2010, செப்டம்பர் 12 ஆம் நாள் காலமானார்.




மது அம்பாட்டு

 
மது அம்பாட்டு

1949, மார்ச் 6 ஆம் தேதி பிறந்தார். இவர் சித்தூர் அம்பாட்டு குலத்தைச் சேர்ந்தவர். பிரபல இந்திய தந்திர வித்தையாளர் பாக்கியநாதின் மகன். மது அம்பாட்டு ஒரு இந்திய ஒளிப்பதிவாளராவார். பல்வேறு திரைப்படங்களில் தனது திறமையைக் காட்டிய மது அம்பாட்டு சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை மூன்று முறை வென்றுள்ளார். அவர் பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார். பிரபல நடிகை விதுபாலா இவரது சகோதரியே.



விதுபாலா

 
விதுபாலா

1953ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி பிறந்த விதுபாலா சித்தூர் அம்பாட்டு குலத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு பிரபல மலையாள நடிகையாவார். 1970ன் மத்தியில் நடிப்புத் துறைக்கு வந்த விதுபாலா 1981ல் திரையுலகிலிருந்து ஓய்வுபெற்றார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சேனல் தொகுப்பாளராகவும், டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி வருகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் மது அம்பாட்டு இவரது மூத்த சகோதரர் ஆவார்.




ஷடானனன் ஆனிக்கத்து

 
ஷடானனன் ஆனிக்கத்து

சித்தூர் தத்தமங்கலத்தில் பிறந்தார். குட்டேட்டன் என்று அறியப்படுகிறார். இவர் ஓவியர், சிற்பி மற்றும் பாலக்காடு கலாச்சாரத்தின் பிரச்சாரகரும் ஆவார். ஓவியத் துறையில் பல பங்களிப்புகளைச் செய்துள்ளார். இவர் பாலக்காடு ஓவியக்கலை பரிஷத்தின் நிறுவனர், கேரள நாட்டுப்புற அகாடமியின் இயக்குநர்கள் குழு உறுப்பினர், லலிதகலா அகாடமியின் இயக்குநர்கள் குழு உறுப்பினர், கேரள சங்கீதநாடக அகாடமி மற்றும் நாட்டுப்புற நாடக சங்கத்தின் உறுப்பினர்.