ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/കുരുന്നുകൾ
കുരുന്നുകളുടെ സൃഷ്ടികൾ
കവിതകൾ/கவிதைகள்
അമ്മ എന്നെ പെറ്റതും അമ്മ എന്നെ സ്നേഹിച്ചതും അമ്മ ഞാൻ ആദ്യമായി കണ്ടതും എൻറെ സ്വന്തം അമ്മ എന്നെ പോറ്റിവളർത്തി അമ്മ എന്നെ ഉമ്മ വെച്ചതുമമ്മ എൻറെ കണ്ണിൽ ഉറക്കം കേറീടുമ്പോൾ തോളത്താട്ടിയുറക്കുന്നതും അമ്മ എന്നെ വീഴാതെ നടക്കാൻ പഠിപ്പിച്ചതമ്മ എല്ലാമെല്ലാം അമ്മ.
-
സനിക.എ 4. A
பட்டாம்பூச்சி வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள் பறக்குது பார் வானத்திலே எனக்குப் பிடித்த பட்டாம்பூச்சி பறந்து வருது என்னை பார்க்க நீலம்,மஞ்சள், சிவப்பு எத்தனை எத்தனை பட்டாம்பூச்சிகள் வருது பாரு தேன் குடிக்க வண்ணப்பூக்கள் தோட்டத்திலே வானவில்லின் ஏழு நிறத்தில் பறக்கும் பட்டாம்பூச்சிகள் உலவும் அந்த வானிலே பறக்க எனக்கு ஆசையே!!!
மீரா. சு, 4 .C
பட்டாம்பூச்சி
பூக்கள் முழுதும் பறந்து திரியும் பட்டாம்பூச்சியாம் தங்க நிற கருப்பு நிற பட்டாம்பூச்சியாம். தேனை உண்டு மயங்கிப் பறக்கும் பட்டாம்பூச்சியாம். நானும் கூட பறந்து வந்தால் தேன் தருவாயோ. பட்டாம்பூச்சி போல நீயும் பரந்து செல்வாயே பட்டுக்குட்டி நீயும் கூடி சேர்ந்து வாழ்வாயே சுறுசுறுப்பாய் தினமும் காலை எழுந்திடுவாயே காலைக்கடனை முடித்து கல்வி நிலையம் செல்வாயே.
சுத்தம் நகத்தை நாமும் வளர வளர வெட்டிட வேண்டும்- தினம் காலை மாலை பல்துலக்கி சாப்பிட வேண்டும் காலைக்கடனை கருத்துடனே முடித்திட வேண்டும் முடித்து நீயும் கல்வி நிலையம் சென்றிட வேண்டும் பள்ளிக்கூடம் சுத்தமாக வைத்திட வேண்டும் அதுவும் கலைக்கோவில் என்று உணர்ந்திட வேண்டும் தேவையான உணவை மட்டும் சாப்பிட வேண்டும் நல்ல நல்ல பிள்ளைகளாய் வளர்ந்திட வேண்டும்.
കഥകൾ/கதைகள்
നന്മയുടെ പ്രതിഫലം
ഒരിടത്ത് ചിന്നു എന്നും മിന്നു എന്നും കേരളം കുട്ടികളുണ്ടായിരുന്നു. അവർ ചങ്ങാതിമാരായിരുന്നു. ചിന്നു നല്ല കുട്ടിയും മിന്നു ചീത്ത കുട്ടിയും ആയിരുന്നു. ഒരു ദിവസം സ്കൂളിലേക്ക് പോകുമ്പോൾ അമ്മു എന്ന് പേരുള്ള അവരുടെ ചങ്ങാതി വീണു കിടക്കുന്നത് കണ്ടു.മിന്നു അതു ശ്രദ്ധിക്കാതെ പോയി.ചിന്നു അമ്മുവിനെ എഴുന്നേൽപ്പിച്ചു മുറിവിൽ മരുന്നു വെച്ചുകൊടുത്തു ഇതെല്ലാം അറിഞ്ഞ ടീച്ചർ ചിന്നുവിനെ അഭിനന്ദിച്ചു. വൈഗപ്രഭ 4. A
கடவுளும் வண்டிக்காரனும்
ஒரு வண்டிக்காரன் நான்கு சக்கர வண்டியொன்றை கிராமத்தின் தெரு ஒன்றில் ஓட்டிக்கொண்டு சென்றான். அப்போது ஒரு பள்ளத்தை நோக்கி வண்டியின் சக்கரம் சரிந்து தடம் புரண்டு விட்டது. பட்டிக்காட்டு வண்டிக்காரன் அதைக் கண்டு பிரமித்து நின்றுவிட்டான். பள்ளத்தில் விழுந்துவிட்ட வண்டியைத் தூக்கி நிறுத்துவதற்கு முயற்சிக்காமல், தனக்கு உதவிசெய்ய ஆண்டவனை பலவாறாக உரத்த குரலில் கூவி அழைத்தான். ஆண்டவனும் அவன் முன்பு தோன்றி, உன் தோள்களால் முட்டுக்கொடுத்து சக்கரத்தைப் பள்ளத்திலிருந்து தூக்கி நிறுத்தி, மாடுகளையும் அதட்டி ஓட்டி உன் வேலைகளை நீயே செய்து கொள்ள முயற்சி செய்யும் வரை என்னை உதவிக்கு வரும்படிக் கூப்பிட்டு வணங்காதே. அப்படிச் செய்யாமல் என்னை உதவிக்கு அழைப்பதனால் உனக்கு விதப்பிரயோஜனமும் கிடைக்காது, என்று கூறியருளி மறைந்தார். தன் கையே தனக்கு உதவி என்பதை பட்டிக்காட்டு வண்டிக்காரனும் புரிந்து கொண்டான்.
முயலின் தந்திரம் ஒரு காட்டில் ஒரு முரட்டுச்சிங்கம் வசித்து வந்தது. அது அனைத்து விலங்குகளையும் ஒவ்வொரு நாளாக ஒவ்வொரு விலங்காக வந்து தனக்கு உணவாகக் கட்டளையிட்டது. அதன்படி முயலின் முறை வந்தபோது முயல் எப்படியாவது சிங்கத்திற்குப் பாடம் புகட்ட எண்ணியது. அதன்படி முயல் சிங்கத்திடம் தாமதமாக வந்தது. சிங்கம் முயலைப் பார்த்து தாமதத்திற்கான காரணத்தைக் கேட்டது. அப்போது முயல் அந்தக் கிணற்றுக்குள் வேறொரு சிங்கம் இருக்கிறது. அது தன்னை சாப்பிட வந்ததாகக் கூறியது. அதைக் கேட்ட முரட்டுச் சிங்கம் கிணற்றுக்குச் சென்று எட்டிப் பார்த்தது. அங்கு தண்ணீரில் தெரிந்த தனது நிழலை வேறு சிங்கம் என்று நினைத்தது. அதைத் தாக்க கிணற்றுக்குள் குதித்தது. முயலும் சிங்கத்திடமிருந்து தப்பித்துக் கொண்டது.
என் நண்பன்
அருண் என் நண்பன். காலை முதல் மாலை வரை எப்போதும் தண்ணீரிலேயே இருப்பான். வாயைத் திறந்து திறந்து மூடுவான். ஆனால் எதுவும் பேச மாட்டான். கண்ணை திறந்து கொண்டே தூங்குவான். அது எப்படி? அவன் வேறு யாரும் இல்லை நான் வளர்க்கும் மீன் தான். ஷியாம்.
3. C
ചിത്ര പ്രദർശനം/அரும்புகளின் வரைபடங்கள்
-
ദയാളൻ.കെ 3.C
-
പ്രണീത്. 4.A
-
-
-
ശ്രീലക്ഷ്മി.എസ് 3.B
-
ശ്രുതിലക്ഷ്മി.എസ് 3.B
-
-
-
-
-
-
-