ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/பெற்றோர் ஆசிரியர் சங்கம்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
பெற்றோர் ஆசிரியர் சங்கம்

ஒரு பள்ளியின் முழு வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மிக முக்கியமான ஒன்றாகும். இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் கல்வித்தரத்தையும், பௌதீக சூழ்நிலையையும் உயர்த்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடு கற்றல் துணைக்கருவிகள், பென்ஞ், டெஸ்க் போன்றவை நமது பள்ளிக்கு கிடைத்ததுண்டு. பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடு தான் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. எம்.எல்.ஏவிடம் அடிக்கடி சென்று தேவைகளை முறையிட்டதன் அடிப்படையில் இது நமக்கு கிடைத்தது. கோடைக்கால விடுமுறையின் போதும் யோகா வகுப்புகள், அபாக்கஸ் போன்றவை குழந்தைகளுக்காக பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்வதுண்டு. இத்தகைய சிறப்புக்கள் நிறைந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடும், உறுதுணையோடுமே நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றது.

பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக்குழு கூட்டம் 2022-23

GVLPS சித்தூரில் 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக்குழு கூட்டம் 29.6.2022 புதன்கிழமை மதியம் 2 மணிக்கு நடைபெற்றது. 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 2022-23 கல்வியாண்டுக்கான திட்டங்களைப் பற்றி கலந்தாராய்ந்து புதிய பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதே நிகழ்ச்சி நிரலாகும். கடந்த ஆண்டு செயல்பாட்டு அறிக்கையை ஆசிரியை ஜெயஸ்ரீ வாசித்தார். அதன்பின், பள்ளியை நல்லமுறையில் நடத்திச் செல்வதற்காக செயல்படுத்த வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குழந்தைகளின் பயண வசதியும் ஆலோசனையில் உட்படுத்தப்பட்டது. பின்னர், 2022-23ம் கல்வியாண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். PTA விற்கு 9 உறுப்பினர்களும், MPTA விற்கு 8 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக பி. மோகன்தாஸ், பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத்தலைவராக ஜி. சுகதன், MPTA தலைவராக கே. சுமதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

செயல்பாடுகள்

குழந்தைகளுக்கு கைபேசி (ஸ்மார்ட்ஃபோன்)

சித்தூர் ஜி.வி.எல்.பி.பள்ளியில் சொந்தமாக கைபேசி (ஸ்மார்ட்ஃபோன்) இல்லாத குழந்தைகளுக்கு ஆன்லைன் படிப்பை உறுதிப்படுத்த கைபேசி விநியோகம் செய்யப்பட்டது. ஆசிரியர்களும் பெற்றோர்களும் மற்றும் சில நல்லுள்ளம் கொண்டவர்களும் சேர்ந்து இந்நற்செயலை நிறைவேற்றினர். மாணவர்களது டிஜிட்டல் வகுப்புகளுக்கும் ஆன்லைன் படிப்புக்கும் ஸ்மார்ட்ஃபோன் பெரிதும் துணைபுரிந்தது. கூடுதல் அறிவதற்கு இங்கே சொடுக்கவும் கைபேசி நன்கொடையாளர்கள்


கற்றல் கருவிகள் வழங்குதல்

நமது பள்ளியில் படிக்கின்ற சில ஏழை மாணவர்களுக்கு புத்தகப்பையும் நோட்டுப் புத்தகங்களும் வழங்கினார் அப்துல் சலீம் என்னும் பெற்றோர். முன் துவக்கப்பள்ளி முதல் நான்காம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் இருந்து ஏழ்மையான குழந்தைகளை தேர்ந்தெடுத்து இச்சேவை செய்யப்பட்டது. வரும் வருடங்களிலும் இந்த சேவை தொடரும் என்று இவர் வாக்குறுதி அளித்துள்ளார். அப்துல் சலீம் அவர்களே நேராக வந்து குழந்தைகளுக்கு புத்தகப்பையும், நோட்டுப் புத்தகங்களும் வழங்கினார். தலைமையாசிரியை ஷைலஜா, மற்று ஆசிரிய ஆசிரியர்களும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் நன்றி கூறினர்.

மதுரம் மலையாளம் மற்றும் எனது செய்தித்தாள்

ஜூன் 20 அன்று, சித்தூர் ஜெயின்ஸ் கிளப் நிர்வாகிகள், தினமும் ஐந்து மாத்ருபூமி நாளிதழ்களை பள்ளிக்கு வழங்கி, மதுரம் மலையாளம் திட்டத்தை துவக்கி வைத்தனர். பள்ளிக் குழந்தைகள் அனைவர் சார்பாகவும் 4ஆம் வகுப்பு மாணவி பூஜா நாளிதழைப் பெற்று மதுரம் மலையாளம் திட்டம் வரவேற்கப்பட்டது. செறுகுட்டி சன்ஸ், சி.சி. வி வெஜிடபிள் மற்றும் டாப் நாட்ச் பேக்கரி ஒன்றிணைந்து, பள்ளிக்கு தினமும் ஐந்து தேசாபிமானி செய்தித்தாள்களை வழங்கி எனது செய்தித்தாள் திட்டம் தொடங்கப்பட்டது. சி.பி.எம் சித்தூர் பகுதி செயலாளர் சிவபிரகாஷ் பள்ளி மாணவ, மாணவியர் 5 பேருக்கு செய்தித்தாள்கள் வழங்கி இத்திட்டத்தை துவக்கி வைத்தார். குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை வளர்க்கவும், வினாடி வினாப் போட்டிக்கு குழந்தைகளை தயார்படுத்தவும் செய்வதற்காக நமது பள்ளிக்கு செய்தித்தாள்களை வழங்க ஸ்பான்சர்களை கண்டறிந்த PTA உறுப்பினர்களுக்கு தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.


பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம்

பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம் 2019-20
வரிசை எண் பெற்றோர் ஆசிரியர் சங்கம் பெயர் புகைப்படம்
1 தலைவர் சாமிநாதன்
2 துணைத் தலைவர் ஸ்ரீஜித்
3 உறுப்பினர் சுகதன். ஜி
4 உறுப்பினர் குமார்
5 உறுப்பினர் மணிகண்டன்
6 உறுப்பினர் பாபு
7 உறுப்பினர் மோகன்தாஸ்
8 உறுப்பினர் சசிகுமார்
9 உறுப்பினர் பினி. வி.பி
10 உறுப்பினர் ஸ்ரீதேவி
11 உறுப்பினர் சுனிதா
மதர் பெற்றோர் ஆசிரியர் சங்கம் 2019-20
வரிசை எண் மதர் பெற்றோர் ஆசிரியர் சங்கம் பெயர் புகைப்படம்
1 தலைவர் பின்சி
2 உறுப்பினர் தன்யா
3 உறுப்பினர் தன்யா
4 உறுப்பினர் பினி.வி.பி
5 உறுப்பினர் சுமா
6 உறுப்பினர் அஜிதா
7 உறுப்பினர் ஸ்ரீதேவி
8 உறுப்பினர் சுதா
9 உறுப்பினர் விமலா
10 உறுப்பினர் நிஸி
11 உறுப்பினர் பர்ஸானா
பெற்றோர் ஆசிரியர் சங்கம் 2018-19
வரிசை எண் பெற்றோர் ஆசிரியர் சங்கம் பெயர் புகைப்படம்
1 தலைவர் கே.பி ரஞ்சித்
2 துணைத் தலைவர் சாமிநாதன்
3 உறுப்பினர் சுகதன்.ஜி
4 உறுப்பினர் குமார்
5 உறுப்பினர் ஸ்ரீஜித்
6 உறுப்பினர் ஷீபா
7 உறுப்பினர் மோகன்தாஸ்
8 உறுப்பினர் ஹீரா
9 உறுப்பினர் சுரேஷ்குமார்
10 உறுப்பினர் வைவஸ்ஸுதமனு
11 உறுப்